வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


மக்களுக்குகாக நிகழ்த்தப்படும் மனித கொலைகள்

பூபதி  

அரசும் சரி, அரசுக்கு எதிராக போராடுபவர்களும் சரி, மக்களுக்காக மக்களுக்காக என்று மார்தட்டிக்கொண்டு மக்களையே கொன்று குவிக்கும் மகிழ்ச்சியற்ற போக்கு நிலவ காரணம் என்ன? அவர்கள் அப்படி கொன்று குவித்தாலும், அந்த நிகழ்வு ஏன் நம் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை?

பொதுமக்கள் என்பவர் யார்? இந்த கேள்விக்கான வரைமுறை என்னவென்று உங்களுக்கு தெரியுமா? பொதுவாக நாம் பேசிக்கொள்ளும்போது அனைவரும் பொதுமக்களே என்ற சிந்தனையில்தான் பேசுவோம். ஆனால் ஒரு துறை சார்ந்த பிர்ச்சனை என்று வரும்போது அதை பொதுமக்களின் பிரச்சனை என்று கருதாமல் அந்த துறையை சார்ந்தவர்களின் பிரச்சனையாக மட்டுமே கருதிவிடுகின்றோம். அவர்களை நாம் ”பொதுமக்கள்” வரைமுறைக்குள் கொண்டுவருவதில்லை.

நம்முடைய இந்த பழக்கத்திற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், நாம் பேசிக்கொள்ளும் பேச்சை கவணித்தாலே போதும், அதில் பல உதாரணங்கள் உள்ளன. ”நேற்று காவலர் ஒருவர் கொல்லப்பட்டு விட்டாராம்” இப்படி, யாரோ, யாரையோ கொன்றுவிட்டார்கள் என்ற ரீதியில்தான் நம் பேச்சு அமைந்திருக்குமே ஒழிய, இந்த நிகழ்வு பொதுவாக நம்மைச் சார்ந்தது, நம்மையும் பாதிக்கக் கூடியது, நமக்கு ஏற்பட்ட பிரச்சனை இது என்ற வகையில் நம் பேச்சு அமைந்திருக்காது. சினிமாவில் காதலர்கள் ஊரை விட்டு ஓடிய பிறகு என்ன நடக்கும் என்று காட்டாமல், அவர்கள் ஓடுவதுடன் படத்தை முடித்துக்கொள்வார்களே, அதுபோல கடமை உணர்வுள்ள ஒரு காவலர் இறந்துவிட்டார் என்ற செய்தியோடு அந்த விவகாரத்தை முடித்துக்கொள்வோம். அதற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை.

இதோ இப்போது கூட நான்கு நாட்களுக்கு நாம் பேசிக்கொள்ள ஒரு விசயம் கிடைத்துள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் நிகழ்ந்த எழுபத்தி ஆறு பேரின் மரணம் (எழுபத்தி ஆறு என்றுதான் சொல்கிறார்கள்). ஒருவாரம் கழித்து யாரிடமாவது கேட்டுப்பாருங்கள் இறந்துபோன அந்த எழுபத்தி ஆறு பாதுகாப்பு படையினர் பற்றி...சிலர் மறந்திருப்பார்கள். சிலர், ஓ அதுவா என்ற ரீதியில் சில வார்த்தைகளுடன் முடித்துக்கொள்வார்கள். அவர்கள் தேசத்தின் காவலர்கள், தேசமே அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு மரியாதை செய்வார்கள் என்ற கண்னியமிக்க கண் துடைப்போடு முடித்து வைக்கப்படும் தேசத்தின் காவலர்களின் கதை. ஏனெனில் இது பாதுகாப்பு படையினர் தொடர்பான பிர்ச்சனையாக கருதப்படுகிறது, மக்களின் பிரச்சனையாக கருதப்படுவதில்லை.

“மக்களுக்காகத்தான் இந்த அரசாங்கம் செயல்படுகிறது” என்று அரசாங்கம் சொல்கிறது. “நாங்கள் மக்களுக்காகத்தான் போராடுகின்றோம்” என்று அரசுக்கு எதிராக போராடுபவர்களும் சொல்கின்றார்கள், இறந்துபோன அந்த எழுபத்தி ஆறு பேரும் மக்கள் தானே. அந்த மக்களுக்காக யார் செயல்பட்டார்கள், அந்த மக்களுக்காக யார் போராடினார்கள்.

கொல்லப்பட்ட அந்த எழுபத்தி ஆறு பேர் நாட்டுக்காக பெத்துவிட்ட அனாதைகளா!, அவர்கள் மக்கள் இல்லாமல், வெட்டுவதற்காக வளர்க்கப்பட்ட மாடுகளா அவர்கள்!. இறந்து போன அந்த பாதுகாப்பு படையினரும் மக்கள்தானே, மனிதர்கள் தானே? எழுபத்தி ஆறு நபர்கள் அழிந்துவிட வில்லை எழுபத்தி ஆறு குடும்பங்கள் அழிந்துள்ளன. எழுபத்தி ஆறு விதமான கணவுகள் அழிக்கப்பட்டுள்ளன. எழுபத்தி ஆறு விதமான் குடும்ப பொருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எழுபத்தி ஆறு காவலர்கள் அழிந்துவிட்டார்கள் என நினைத்தால் அதன் விபரீதம் நமக்கு புரியது. எழுபத்தி ஆறு குடும்பங்கள் அழிந்துவிட்டன என்று நினைத்துப்பார்த்தால்தான் மக்களின் பிரச்சனையும் அதன் வலியும் புரியும் நமக்கு. இறந்துபோன அந்த ஒவ்வொரு மனிதனுடைய குடும்ப சூழ்நிலை எப்படி அமைந்திருக்கிறது என்று யாருக்கு தெரியும். அந்த இழப்புகளை யார் சரி செய்வார்கள்! மக்களுக்காக செயபடுபவர்கள் சரி செய்வார்களா! அல்லது மக்களுக்காக போராடுபவர்கள் சரி செய்வார்களா!. அவர்களை பாதுகாப்புப் படையை சார்ந்தவர்கள் என்று ஒதுக்கிவிடாமல், அவர்களும் பொதுமக்களே என்ற ரீதியில் நாம் சிந்திக்க வேண்டும்.

நாட்டுக்காக உயிர் விடுவது என்பது வேறு, நாட்டுக்கு என்ற பெயரில் வீணாக கொல்லப்படுவது வேறு. பாதுகாப்பு படையினரின் இறப்பு இதில் இரண்டாவது வகையைச் சார்ந்தது. அரசு சரியான முறையில் திட்டமிடவில்லை, சரியான முறையில் செயல்படவில்லை அதனால்தான் இப்படி நிகழ்ந்துள்ளன என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதே இதற்கு சாட்சி. இந்த அதிகார வர்க்கம், அரசியல் வர்க்கம் தொடர்ந்து செய்துவரும் பிழை இது. ஒரு முழுமையான திட்டமிடல் இல்லாமல் நாம் பல முறை பல பேர்களை இழந்துள்ளோம் என்பது நிதர்சனமான உண்மை. அரசின் தவறான உத்தரவுகளுக்கு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி பின்னர் அந்த உத்தரவுகளை திருப்பப் பெற்ற நிகழ்ச்சிகள் பல முறை நிகழ்ந்துள்ளது.

ஏன் அவர்களை வெல்ல முடிய வில்லை! என்ற கேள்விக்கு, அவர்கள் மக்களோடு மக்களாக இருக்கின்றார்கள். மக்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றார்கள் என தெரிவிக்கின்றார்கள். ஆயுதம் ஏந்தி நாசம் விளைவிப்பவர்களுக்கு உதவி செய்யுமளவிற்கு மக்களுக்கு பயித்தியம் பிடித்துவிட்டதா என்ன! மக்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றார்கள் என்றால் நிச்சயம் அதற்கு ஒரு காரணம் இருக்கும். என்ன காரணம் என்று நாம் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் இதோ நம் மான்புமிகு அமைச்சரே அதற்கான காரணத்தை இப்படி சொல்கின்றார் “அரசின் நடவடிக்கைகள் சில நேரங்களில் நல்ல விதமாக இருக்கும், சில நேரங்களில் மோசமக இருக்கும அதற்காக மக்கள் தீயவர்களுக்கு உதவி செய்யக் கூடாது” அரசின் நடவடிக்கை ஏன் மோசமாக இருக்கும்! மோசமான விளைவுகளை சந்திக்கவா உங்களை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கின்றார்கள். அமைச்சர் சொல்வதைப் பார்த்தால் அரசு மோசமாக நடந்துகொண்டாலும் மக்கள் அவற்றை சகித்துக்கொண்டு வாழ வேண்டும் என வழியுறுத்துகின்றாரா என தெரியவில்லை. அரசாங்கத்திடம் ஏதாவது குறைகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கின்றோம். குறைகளை நிறைகளாக மாற்றிகொள்கின்றோம் என்று சொல்லி இருந்தால், அப்படி ஒரு சிந்தனை அரசாங்கத்திடம் இருந்து இருந்தால் இப்படி ஒரு பிரச்சனை உருவாகி இருக்குமா! தவறான விதையை விதைத்துவிட்டு இப்போது கணி கொடுக்கவில்லையே என்று வருந்துவது முட்டாள்தனமானது. மக்கள் ஏன் அரசிற்கு உதவவில்லை? இந்த கேள்விக்கான பதிலை உடனே தேடியாக வேண்டும்.

அவர்கள் அடக்கப்பட வேண்டிய அல்லது அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று முடிவிற்கு வந்த பிறகு ஏன் முழுமையாக அதில் இறங்க வில்லை. ரானுவத்தை அழைக்க மாட்டோம், விமானத்தை பயன்படுத்த மாட்டோம். இருக்கின்ற பாதுகாப்பு படையினரைக்கொண்டே போராடுவோம். என்ற வறட்டு வீரப்பு எதற்காக, தேவையான உபகரணங்களை கொண்டு உடனே முடிக்க வேண்டிய செயலை முடிந்தவரை தாமதப்படுத்துவதன் நோக்கம் என்ன? பிரச்சனை தீர்க்க விரும்பினால் அதற்கான விசயங்களை உடனே செயல்படுத்த வேண்டிது தானே.. மக்களுக்காக மக்களுக்காக என்று சொல்லி மக்களை தானே கொன்று கொண்டு இருக்கின்றீர்கள்.

ஒரு துறையில் ஏற்படும் பிரச்சனைகளை, அது அந்த துறை சார்ந்த பிரச்சனை என்று மூடி மறைக்காமல், அதை பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையாகவே கருதவேண்டும். நாம் கொடுக்கும் உத்தரவுகள் நேரடியாக மக்களை பாதிக்கின்றன என்பதை அரசியல் வர்க்கத்தினர் உணர வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனையை அடிப்படையாகக்கொண்டே அவர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். அழிக்கப்பட்டது எழுபத்தி ஆறு பாதுகாப்புப் படையினர் மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களையும் சேர்த்துதான் என்பதை உணர்ந்து, இனிமேலாவது போலித்தனமான வேஷங்களை கலைந்து, வீண் வீராப்புகளை கைவிட்டு, பொதுமக்களை பாதுகாக்க விரைந்து செயல்படவேண்டும்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</