வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


அஞ்சுவது அஞ்சாமை... பேதமை!

பூபதி  

அச்சம் என்பது மடமையாகவும், அஞ்சாமை நம் உடைமையாகவும் இருக்க வேண்டுமென அந்த காலத்து பாடலில் இருந்தும், சம காலத்து பாடங்களில் இருந்தும் நாம் கற்றுக்கொண்டு வருகிறோம். அச்சம் என்பது மடமையாக இருக்கலாம் அதற்காக அஞ்சாமையை நம் உடைமையாகக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அஞ்சாமையை பற்றிய நம் சிந்தனைகள் உண்மையில் போலியானவை. அவைகள் எந்த வகையிலும் நமக்கு உதவாது. சீட்டுக்கட்டு கோபுரம் போல நாம் கட்டும் அஞ்சாமை சிந்தனைகள், எதார்த்தத்தின் முன்பு சிதரிப்போகும்.

அனுபவத்தில் வளரும் அச்சம்:

சிறு வயது முதல் நமக்கு ஏற்படும் எதிர்மறையான அனுபவங்களும், அதைத் தொடர்ந்து வரும் அவமானங்களும் நம் மனதில் ஆழப்பதிந்துவிடுகிறது. மீண்டும் நாம் அதே செயலில் இறங்கும்போது நம் செயல்பாடுகளை பழைய எதிர்மறையான நினைவுகள் செயல் இழக்கச் செய்கின்றன. முன்பு ஏற்பட்ட அவமானம் மீண்டும் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறோம், முன்பு ஏற்பட்ட தோல்வி மீண்டும் தோண்றிவிடுமோ என அஞ்சுகிறோம். பழைய அனுபவத்தை அடிப்படையாக கொண்ட நம் எண்ணத்தில் இருந்துதான் அச்சம் எனும் அசுரன் வளர்ச்சியடையத் தொடங்குகிறான். இந்த அச்சத்தின் விளைவுகளானது மிச்சம் வைக்காமல் நாம் சார்ந்த அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் ஏற்பட்ட அனுபவத்தால் சமூக அச்சம், மனிதர்களுடன் மனம் முரண்பட்டால் மனிதர்கள் மீதான அச்சம், தேர்வுகளில் தேறமாட்டோமோ என்ற தேர்வு அச்சம், வளமை ஏற்படாதா என்ற சிந்தனையை தூண்டும் வறுமை அச்சம், ஆசைப்பட்டதை அடையாமல் போய்விடுமோ என்ற ஆசை சார்ந்த அச்சம், வாழ்வு முற்றிவிடுமோ என்ற மரண அச்சம் என நம் வாழ்வின் இறுதி வரை அட்டைப்பூச்சியைப்போல அச்சம் நம்மோடு ஒட்டிக்கொண்டே வருகிறது.

அழிவிற்கு அழைத்துச்செல்லும் அச்சத்தின் விளைவுகள்:

அச்சம் என்பதைப்பற்றி தெளிவாக சொல்ல வேண்டுமானால் ”மற்றவர்கள் நம்மை கொன்று விடுவார்களோ என்ற நடுக்கத்தில் நாமே தற்கொலை செய்து கொள்வதுதான் அச்சம்” தேர்வில் கேள்வித்தாளை பார்த்ததும் நமக்கு தெரியாத கேள்வியை கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே அந்த தேர்வில் நாம் தேறாமல் போய்விடுகிறோம். இப்படி நடந்து விடுமோ அப்படி நடந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே நடக்காத எதிர்மறையான விசயங்களை நாமே நடத்திவிடுகிறோம். நோயின் விளைவுகளால் அல்லாமல் அச்சத்தின் விளைவுகளாலே நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டுதான் மருத்துவர்கள் நோயாளிகளிடம் அச்சம் நீங்கி தைரியமாக இருங்கள் என வழியுறுத்துகிறார்கள். ஹிட்லர் யூத மக்களை வழக்கமான முறையிலேயே கொன்று போரடித்துப்போய் யூதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அழிவுப்பாதைக்கு அழைத்து சென்றாராம். யூதர்களின் உடலிலிருந்து ரத்தத்தை எடுக்காமலேயே அவர்களின் உடலில் இருந்து ரத்தம் வெளியேருவதுபோல செய்து அதை அவர்களை பார்க்க வைத்தார்களாம். நம் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுகிறதே என்ற அச்சத்தில் ரத்தம் வெளியேறாமலேயே இறந்து போனார்களாம் யூதர்கள். அச்சத்திர்கு அத்தகைய அசாத்தியமான பலம் உண்டு. அதனால் தான் மகாத்மா காந்தியும் உடல் நோயைவிட, அச்ச நோய் கொண்டவர்களே அதிகம் உள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

அஞ்சாமை என்பதன் அர்த்தம்:

அஞ்சாமை என்பதற்கு நாம் எப்படி அர்த்தம் கொண்டிருக்கிறோம் என்றால், நடக்க வாய்ப்பில்லாத விசயங்களை நடக்கும் என்ற கற்பனைப் போர்வையே அஞ்சாமை. இயற்கையாக வரும் செயல் விளைவுகளை நாம் ஏற்க மறுக்கிறோம். உடலில் நோயின் தன்மை தெரிகிறது என்றது உடனடியாக மருத்துவரிடம் செல்லாமல், அதன் விளைவுகளை மனதில் கொள்ளாமல், இதற்கெல்லாம் பயந்தா எப்படி, தானாக சரியாகிவிடும் என அஞ்சாமை போர்வை போர்த்திக் கொள்கிறோம். விளைவு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்போம்.

என்ன தரத்தில் தேர்வில் தன்னால் பதில் தரப்பட்டிருக்கிறது என்பது மாணவனுக்கு நன்றாக தெரியும், அதனால் தான் அச்சம் ஏற்படுகிறது. அச்சம் ஏற்பட்ட உடனே கேள்வித்தாளை எடுத்து தன்னுடைய தரத்தை மறுபரிசீலனை செய்து பார்த்து எப்படியும் தேறிவிடுவோம் என அஞ்சாமை போர்வையை போர்த்திக்கொண்டு, கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு காலம் கடத்துவான். தேர்வு முடிவுகள் வந்ததும் அதிர்ச்சியடைந்து போவான் காரணம் எப்படியும் தேர்வில் தேறிவிடுவோம் என நம்பிக்கொண்டிருந்ததுதான் காரணம். விளைவுகள் என்னவாக இருக்கும் என மனதிற்கு தெரியும் இருந்தாலும் அஞ்சத் தேவையில்லை என்று அஞ்சாமல் இருந்ததனால் வந்தது இந்த சோகம். ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு தான் வரும் என்ற நிலையில் நாம் நான்கு வரும் அல்லது ஐந்து வரும் என நாமாக கற்பனை செய்து அதற்கு அஞ்சாமை என பெயரிட்டு முட்டாள்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செயளின் விளைவுகளில் இருந்து நாம் தப்பிக்க பயன்படுத்தும் போர்வைதான் அஞ்சாமை என்பது.

அச்சத்தை அகற்ற:

அச்சத்தை அகற்ற வேண்டும் என ஒருவர் முடிவு எடுத்துவிட்டால் உடனே அவர் நாடிச் செல்வது ஆன்மீகவாதிகளை அல்லது ஆன்மீக தத்துவங்களை. தீவிர நோயால் மரணமடைந்து விடுவோமோ என அஞ்சும்போது முழுக்க முழுக்க அவரின் சிந்தனை அனைத்தும் ஆன்மீகம், தியானம், விரதம் என திரும்பிவிடுகிறது. இவற்றை முன்பு செய்திருந்தால் உடல் ஆரோக்கியமாக இருந்திருக்கும். நோய் வந்த பிறகு பக்தி மார்க்கத்தில் சென்றாலும் அதன் விளைவுகளில் இருந்து நம்மால் தப்பிக்க இயலாது. யோக, தியானம் என செல்வோர்களை கவனித்தீர்களானால் பாதி பேர்களின் உடலில் சக்கரை நோய் என்ற சக்ரவர்த்தி ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகே உடல் ஆரோக்கியம் பற்றிய அறிவு அவர்களுக்கு வந்திருக்கும். இந்த தாமதமான அறிவுக்கு காரணம் எதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்.

ஆன்மீக தத்துவங்களை பொருத்தவரையில் எவை எவைகளிலிருந்து நீங்கள் விலகி வருகின்றீர்களோ அவைகளில் உங்களுக்கு அச்சம் ஏற்படாது என்பார்கள். உடலில் நோய் அச்சம் என்றால், உடல் என்பது பொய் ஆன்மாதான் மெய் என்பார்கள். பொருள் ரீதியான அச்சம் என்றால் பொருட்களின் மீதான பற்றுதலை விடுங்கள் என்பார்கள். நம்முடைய வாகனம் காணாமல் போய் விட்டால் எனக்கு வாகனம் மீது பற்றுதல் இல்லை என பற்றுதல் கோட்பாடுகளையா பேசிக் கொண்டிருக்கிறோம்! உடனடியாக நடவடிக்கை எடுத்து வாகனத்தை கைப்பற்றி விடுகிறோம் இல்லையா. எனவே அச்சத்தில் இருந்து விலகியிருக்க ஒரு வழி முறைதான் ஏற்படுத்திக் கொடுக்கிறார்களே தவிர, அச்சத்தை ஒழிக்க உகந்த முறையை யாரும் உபதேசிப்பதில்லை..

அச்சத்தை அதிர்சியடைய வையுங்கள்:

உங்களுக்கு அச்சத்திலிருந்து விடுதலை வேண்டுமா! அப்படியானால் உங்களுக்கு எந்தவித கோட்பாடுகளும், கொள்கைகளும் தேவையில்லை. நேரடியாக அச்சத்தை நீங்கள் சந்தித்தால் போதும் அது உங்களை விட்டு விலகி விடும். மகாத்மா காந்தி எப்பொழுதும் அச்சத்தை நேரடியாக சந்திப்பவர். ஒரு முறை அவர் தன் நண்பருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது சிலர் மறைந்திருந்து கார் மீது கற்களை கொண்டு தாக்கியிருக்கிறார்கள். காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கிய காந்தியடிகள் நேரடியாக கற்களை விசியவர்களிடம் சென்று நான் இங்கேயே நிற்கிறேன். உங்கள் கோபம் தீரும் வரை என்னை தாக்குங்கள் கார் என் நண்பருடையது அதை சேதப்படுத்த வேண்டாம் என்றாராம். இதுதான் அச்சத்தை நேரடியாக சந்திப்பது அதை விட்டு விட்டு காருக்குள்ளேயே இருந்து கொண்டு அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிக்கொண்டிருந்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை. கற்களால் தாக்கப்பட்டால் காயம் ஏற்படும் இதுதான் செயல் விளைவு அதை நேரடியாக சந்திப்பதுதான் அதிலிருந்து விடுபட ஒரே வழி. உளவியலில் ஒரு விசயம் சொல்வார்கள். மகனிடம் அப்பன் ஆத்திரத்தை காட்டலாம் அடிக்க கூடாது அடித்துவிட்டால் மகனுக்கு அடி பற்றிய பயம் விலகிவிடும். அந்த அச்சத்தை அவன் நேரடியாக சந்தித்து விடுவான் அதன் பிறகு அவனுக்கு அச்சம் இருக்காது. மீறி மீறி போனால் என் அப்பன் என்னை அடிப்பார் அவ்வளவுதான் என அப்பர் சுந்தரர் போல ஞான மொழிகள் பேச ஆரம்பித்துவிடுவான்.

அச்சத்தை அனைத்து கொண்டவர்கள்:

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், பாம்பை பிடிக்கும் பாம்பாட்டிகள், பிணம் எறிப்பவர்கள் போன்றவர்களுக்கு ஆரம்பத்தில் அந்தந்த தொழிலில் அச்சம் இருக்கும். தொழில் என்பதால் அதை செய்துதான் ஆக வேண்டும் எனவே அச்சத்தை நேரடியாக சந்திக்க ஆரம்பிக்கிறார்கள். மெல்ல மெல்ல அச்சத்தை அனைத்து கொள்கிறார்கள் பிறகு அவர்களுக்கு அதில் அச்சம் இருக்காது. அவர்களுக்கு அது வாடிக்கையான ஒரு விசயமாக மாறிவிடுகிறது. இவைகளை நாம் அடிக்கடி சந்திக்க வாய்ப்பில்லை அதனால் தான் அவைகள் மீதான அச்சம் விலகாமல் இருக்கிறோம். நாம் செல்லும் வழியில் பிணம் வருகிறது என்றது விழிபிதிங்கி போய்விடுகிறோம். பாம்பைக்கண்டது பயம் கொள்கிறோம். கடலைக்கண்டதும் கரையோடு நின்று விடுகிறோம்.

செயல் விளைவுகள்:

உங்களின் செயல் விளைவுகள் உங்களை வந்தடைந்தே தீரும். நன்மை செய்திருந்தால் நல்ல விளைவுகள், தீமை செய்திருந்தால் தீய விளைவுகளும் உங்களை நோக்கி நிச்சயம் வரும். அதிலிருந்து நீங்கள் தப்ப இயலாது. அதிலிருந்து தப்பிக்க யாராலும் உங்களுக்கு உதவ இயலாது என்றார் சுவாமி விவேகானந்தர். இந்த செயல் விளைவு தத்துவத்தை நாம் எப்போதும் ஏற்றுக்கொண்டதே இல்லை. தீமை செய்தாலும் நமக்கு தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாது என அஞ்சுகிறோம். நன்மை செய்தாலும் நல்ல விளைவுகள் நமக்கு கிடைக்காதோ என அஞ்சுகிறோம். செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எது நடந்ததோ அது நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ நடந்திருக்கலாம். எது நடக்க இருக்கிறதோ அது நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ நடக்கலாம். அதனால் வரும் செயல் விளைவுகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நாமாக சுயநலமாக முடிவுகளை எதிர்பார்த்து அஞ்சுவது மடமைதான். ”காலா என் காலருகே வாடா உன்னை மிதிக்கிறேன்” என்றாரே பாரதி அது அவருடைய அஞ்சாமை ஆனால் அவருடைய மரணம் இயற்கையின் விளைவுகள். இதுதான் எதார்த்தம் நாம் அஞ்சாவிட்டாலும் மரணம் நம்மை ஆட்கொள்ளும்.

அஞ்சுவது அஞ்சாமை:

அஞ்ச வேண்டிய விசயங்களுக்கு நாம் அஞ்சித்தான் ஆக வேண்டும், அதற்கு அஞ்சாமல் இருப்பதுதான் முட்டாள்தனம் என்றார் வள்ளுவர். அஞ்ச வேண்டிய விசயங்களுக்கு அஞ்சுவதில் எந்தவித தாழ்வுமில்லை. அப்படி அச்சம் ஏற்படும்போது அந்த அச்சத்தை நேரடியாக சந்தித்து அதை போக்க, திருபவும் அந்த அச்சம் ஏற்படாதிருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அச்சம் என்பது ஒரு எச்சரிக்கை மொழி “நான் என் வாழ்வில் பல தவறுகள் செய்யாததற்கு எனது அச்சமே காரணம்” என்றார் காந்தி அந்த எச்சரிக்கையை பயன்படுத்தி வாழ்வில் முன்னேர முயல்வோம். போழியான அஞ்சாமை கோட்பாடுகளை கழைவோம். அவசிப்பட்டால் அஞ்சுவோம்.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.