வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


பக்தியினாலே–தெய்வ–பக்தியினாலே

பூபதி  

இந்தியா, பாகிஸ்தான் அதிபர்கள் கூட பிரிந்திருக்கும் காதலர்கள் போல அவ்வப்போது பேசிக்கொள்ள ஆசைப்படுவதுண்டு. ஆனால் இப்போதும் சரி, இனி எப்போதும் சரி முரண்பட்டே வாழ்வோம் என்ற முடிவோடு இருக்கும் இருவர் உண்டு. ஒருவர் பக்தியாளர் மற்றொறுவர் பகுத்தறிவாளர். பக்தி பாதையில் சென்று ஏமாற வேண்டாம் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பகுத்தறிவாளர்களால் பல உண்மைகள் நிரூபித்து காட்டப்பட்டாலும், ஆண்டாண்டு காலமாக பகுத்தறிவாளர்கள் போராடிக் கொண்டு இருந்தாலும் பக்தி என்பது வெட்ட வெட்ட வளரும் விருச்சமாக செழிப்படைந்துகொண்டே இருக்கிறது. இனிமேலும் அப்படித்தான் இருக்கும். காரணமென்னவென்றால் பக்திக்கு பகுத்தறிவு மட்டுமல்ல சாதாரணமாக அறிவு கூட தேவையிலை என்பதுதான்.

பக்தியின் சிறப்பு:

பக்தியினாலே – இந்தப்
பாரினி லேய்திடும் மேன்மைகள் கேளடீ!
சிந்தந் தெளியும், - இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும், - நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்;

காமப் பிசாசைக் – குதி
கால்கொண் டடித்து விழுத்திடலாகும்; இத்
தாமசப் பேயைக் – கண்டு
தாக்கி மடித்திடலாகும்: எந்நேரமும்
தீமையை எண்ணி – அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியே றிந்துபொய்ந்
நாம மில்லாதே- உண்மை
நாமத்தி நாலிங்கு நன்மை விளைந்திடும்.

ஆசையைக் கொல்வோம், - புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம், - இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் – உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி – இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்... – மகாகவி பாரதியார்

பாரதி சொன்னது போல பக்தியினால் சித்தம் தெளிந்தவர்கள் உண்டா? உண்டு. ஆனால் சித்தம் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. நெஞ்சில் சஞ்சலம் நீங்கியவர்கள் உண்டா? உண்டு. ஆனால் சஞ்சலமடைந்தவர்களும் உண்டு. காம பிசாசை குதி கால்கொண்டு அடித்தவர்கள் உண்டா? உண்டு. ஆனால் காம பிசாசுகளுக்கு பலியானவர்களும் உண்டு. இப்படி பக்தியில் சாத்தியக்கூறுகளும், அசாத்தியக்கூறுகளும் கலந்தே இருக்கின்றன. பக்தியினால் நன்மை அடைந்தவர்கள் உண்டு என கூறுபவர்களால், பக்தியினால் தீமையை அனுபவித்தவர்களும் உண்டு என்பதை மறுக்க இயலாது. பகுத்தறிவு சிந்தனைகள் தனியாக தோண்றி பின்பு பக்தியுடன் மோதியது அல்ல, அது பக்தியுடன் இணைந்தே தோண்றியது. ”பக்தியில் கேள்விக்கு இடமுள்ள இடங்களில் எல்லாம் பகுத்தறிவு சிந்தனைகள் தோண்றின. அறிவுக்குப் பொருந்தாத கருத்தகளை மறுப்பதும் அறிவுக்குப் பொருந்தும் கருத்துகளை ஏற்பதும் பகுத்தறிவு ஆகும். இந்தச் சிந்தனை உடையவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்கிறோம்” என்று பாவேந்தர் பாரதிதாசன் பகுத்தறிவிற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அப்படி பார்க்கையில் பாரதிகூட பகுத்தறிவு சிந்தனையாளர்தான்.

பக்தியின் சிறப்பு பற்றி பேசிய பாரதியாருக்குகூட பகுத்தறிவு சிந்தனைகள் தோண்றியிருக்கிறது. “இந்த மூட பக்திகளியே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளும் நாள் நக்ஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. க்ஷவரத்துக்குக் கூட இப்படியென்றால், இனிக்கலியாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விக்ஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது சகுனம் பார்ப்பதனால் கார்ய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம் முதலியன பார்க்கு மிடத்தே, கார்யநஷ்டம் மட்டுமின்றி மேற்படி, லக்னம் முதலிய பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது.” பக்தியின் சிறப்பு பற்றி பேசிய பாரதிக்கு தோண்றிய பகுத்தறிவு சிந்தனைகள் இவை.

பகுத்தறிவை தூண்டும் பக்தி:

பொதுவாக முற்கால அற்புதங்கள் அனைத்தும் ‘அதெப்படி’ எனும் கேள்வி கேட்கும் படியாகவே அமைந்திருக்கும். தற்கால அற்புதங்கள் அனைத்தும் அழிவுப்பாதையை நோக்கியதாக அமைந்திருக்கிறது. திரெளபதி வேண்டிக் கொண்டதும், சேலை வந்து கொண்டே இருந்ததும், சிவன் கண்ணில் குருதியை கண்டதும், தன் கண்னை சிவனுக்கு பொருத்திய கன்ணப்பரின் செயலும், பாம்பை பயன்படுத்தி, பாற்கடலை கடைந்தது என அனைத்துமே ‘அதெப்படி’ என்ற கேள்விக்கு இடமளித்த வண்ணமே அமைந்திருக்கிறது. முற்கால அற்புதங்கள் இப்படி இருக்கிறதென்றால், தற்கால சமய நம்பிக்கைகளோ நம்மை பயப்படுத்தும் விதமாகவே உள்ளது. குழந்தையை மண்ணில் புதைத்து எடுத்தால் ஆரோக்கியமாக வாழும் என்று நம்பி குழந்தையை மண்ணில் புதைப்பது, நோய் தீர்க்க மருத்துவரிடம் செல்லாமல் மதரீதியான நபர்களிடம் சென்று நோயின் தன்மையை அதிகரித்துக்கொள்வது. அர்த்த ராத்திரியில் பூஜைக்கு வரச்சொன்னார் என்று சென்று கற்பை இழந்து திரும்புவது என நிகழ்கால பக்தி சார்ந்த சம்பவங்கள் அனைத்தும் பகுத்தறிவு சிந்தனைகளை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது.

ஜோதி தரிசனம்:

பொதுவாக அனைத்து அற்புதங்களையும் புத்தகங்கள் வழியாக மட்டுமே நாம் படித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் புத்துயிருடன் ஒரு அற்புதம் ஜோதி வடிவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது சபரிமலையில். அந்த ஐயப்பனே ஜோதி வடிவில் தரிசனம் தருவதாக சொல்லிக்கொண்டிருந்த, நம்பிக்கொண்டிருந்த நிலையில், சபரிமலை ஜோதி என்பது தானே எரிவது அல்ல அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான் என்று ஐய்யப்பன் கோவில் தலைமை பூசாரி குடும்பத்தை சார்ந்தவரே உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். இது இவருடைய கருத்து மட்டுமல்ல பல பேர்கள் ஏற்கனவே இது மனிதனின் செயல்தான் என்று உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களும் மழுப்பலான பதில்களால் ஒருவழியாக பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக்கொண்டார்கள். விளைவு! சென்ற வருடம், இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அடுத்த வருடங்களில் அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். மக்களுக்கு உண்மை தெரிந்தாலும் அங்கு செல்வார்கள். ஏனெனில் மக்கள் தங்களுக்கு நம்பிக்கையான, விருப்பமான விசயங்களில் அறிவைப்பயன்படுத்தி குழப்பிக்கொள்ள மாட்டார்கள். அது விளைவுகளை ஏற்படுத்தும் விசயமாக இருந்தாலும் சரி, விளையாட்டுத்தனமான விசயமானாலும் சரி.

ஏமாற்றிய சூதாடிகள்:

சிவ ராத்திரிக்கு முழித்திருக்காதவனும், சில ராத்திரிகள் முழித்திருப்பான், அன்று கிரிக்கெட் போட்டிகள் நடந்தால். கையடக்க அட்டையில் போட்டி விபரங்களை வைத்துக்கொண்டு யார் வெற்றி பெற்றவர்கள், யார் யார் தோல்வியடைந்தவர்கள். இந்தியா இறுதியாட்டத்திற்குள் நுழைய வேண்டுமென்றால் யார் யார் இனிமேல் தோற்க வேண்டும் என கணக்கெடுத்துக் கொண்டிருப்பான். சாலை ஓர கடைகளில் பார்ப்பது, நண்பரின் வீட்டுக்கு சென்று பார்ப்பது என திருவிழா போல கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் இவர்களின் இதயத்தில் “கிரிக்கெட் சூதாட்டம்” என்ற இடி விழுந்தது. அத்தனையும் செயற்கையா என திகைந்து போனார்கள். நம் அணி வெற்றி பெருவது, தோல்வியடைவது, நமக்கு பிடித்தமான வீரர் சிறப்பாக ஆடுவது, ஆடாமல் வெளியேறுவது என அனைத்தையும் தீர்மானிப்பது பணமா என அதிர்ச்சியடைந்தார். இனி கிரிக்கெட் விளையாட்டை யாரும் பார்க்க மாட்டார்கள், கிரிக்கெட் விளையாட்டின் புகழ் மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது நாள் வரை கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்த மற்ற விளையாட்டை சார்ந்தவர்கள் இனிமேலாவது எங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என கோரிக்கை வைக்க ஆரம்பித்தார்கள் ஆனால் மக்களின் மனமும் மாறவில்லை, கிரிக்கெட்டின் புகழும் குறையவில்லை. மாறாக புதிய புதிய மாற்றங்களுடன் இன்றுவரை அதிக புகழுடன் தான் உள்ளது. இப்போது சூதாட்டம் நடப்பதில்லையா? இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மக்களுக்கு இந்த விசயம் தெரியாதா? நிச்சயம் தெரிந்துதான் இருக்கிறது. இதுதான் மக்களின் மனம் அவர்களுக்கு பிடித்தமான விசயம் என்று வந்துவிட்டால் அதில் அவர்களின் அறிவுக்கு வேலை கொடுக்கமாட்டார்கள்.

குடிக்கவோ, குளிக்கவோ சக மனிதன் தண்ணீர் கேட்டால் சற்று களங்கப்படுத்தி கொடுத்துப்பாருங்கள் அதை திருப்பி கொடுத்து விடுவார் அல்லது அதை கீழே ஊற்றிவிடுவார். அசுத்தமான தண்ணீரில் குளித்தால், குடித்தால் நோய்வந்துவிடும் என்று காரணம் கூறி தண்ணீரை கீழே ஊற்றும் நபர் அசுத்தமான தண்ணீரில் குளிக்கமாட்டாரா? நிச்சயம் குளிப்பார். ஆனால் அது அவருக்கு பிடித்தமான விசயமாக அமைந்திருக்க வேண்டும். உதாரணமாக கொடுமுடியில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஊர் மக்கள் காலைக்கடனை கழிப்பது, கழுவுவதும் அந்த ஆற்றின் கரையிலும், ஆற்று நீரிலும்தான். ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடை நீர் அது, சாதாரணமாக நடந்து போகும் மக்கள் அந்த நீரில் கால் வைக்க கூட தயங்குவார்கள். ஆனால் ஆடி அம்மாவாசை அன்று அங்கு போய் பார்த்தீர்களானால், ஆற்றில் குளித்தால் புண்ணியம் ஏற்படும், தொல்லைகள் நீங்கும் என்ற ஐதீகத்தின் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக சென்ற அந்த நீரில் குளிப்பார்கள், குளிக்கும் மக்களுக்கு அங்கு இருக்கும் அசுத்தங்கள் கண்ணில் படாதா? படும், இந்த நீரில் குளித்தால் நோய் வரும் என்று தெரியாதா? தெரியும். அப்புறம் ஏன் அங்கு குளிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு மிகவும் பிடித்த பக்தி சார்ந்த விசயமாக அன்று அமைந்திருக்கிறது அதனால் மக்கள் தங்கள் அறிவை அன்று பயன்படுத்த மாட்டார்கள்.

பகுத்தறிவாளர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் பக்தியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது. ஏனெனில் பக்திக்கு பகுத்தறிவு மட்டுமல்ல.. சாதாரணமான அறிவு கூட தேவையில்லை என்பதை பகுத்தறிவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேசமயத்தில் பகுத்தறிவு சிந்தனைகள் தேவை இல்லை என்று சொல்லவில்லை, மக்களின் சிந்தனையை தூண்டும், மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து தங்கள் பணியை கண்டிப்பாக செய்ய வேண்டும் ஏனெனில் “முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்”.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</