வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


நம்ம பயபுள்ளைங்க

பூபதி  

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வேலை தேடுவதையே ஒரு வேலையாக செய்து கொண்டிருந்தேன். தினமும் தினத்தந்தியில் வரும் வேலை தொடர்பான செய்திகளை கத்தரித்து அதில் உள்ள முகவரிக்கு என்னுடைய தரத்தை எழுத்து மூலமாக தருவேன்.

ஒரு சிலரிடமிருந்து நேரில் வந்து சந்திக்குமாறு அழைப்புச் செய்தி வரும். அழைப்புச் செய்தி வந்ததும், எப்படியும் நம்மை அரவணைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை சந்திப்பேன். உள்ளே போய் அமர்ந்ததும் சம்பளம் கிடையாது நீ எனக்காக சமூக சேவையே செய்ய வேண்டும் என்பதை மறை முகமாக மிகவும் சிரமப்பட்டு தெரிவிப்பார்கள். சரி இதற்கு மேல் அவரை சிரமப்படுத்த வேண்டாம் என்று நினைத்து அங்கிருந்து கிளம்பிவிடுவேன்.

நான் வேலை தேடிக்கொண்டிருப்பதை அறிந்த நண்பர்கள் தங்களுடைய ஆலோசனைகளை அவ்வப்போது தெரிவிப்பார்கள். இந்த இந்த மாதிரி கேள்விகள் கேட்பார்கள் இப்படி இப்படி பதில் சொல்ல வேண்டும், மேலும் அந்த நிறுவனத்தை பற்றிய செய்திகளை அறிந்துகொண்டு போக வேண்டும் என்றார்கள். அட இவ்வளவு குறைகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை அறிந்து அவற்றையெல்லாம் சரி செய்து கொண்டு ஒரு நிறுவனத்தின் அழைப்பிற்கான அட்டையை எடுத்துக்கொண்டு நேர்முகத்தேர்விற்கு சென்றிருந்தேன்.

பல பேர்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள். அப்புறம் நீங்க எங்கிருந்து வர்ரீங்க, ஓ அப்படியா... நல விசாரிப்புகள், புன்னகை பூக்கும் முகங்கள் ஆனாலும் ஒருவரை ஒருவர் வீழ்த்திவிட துடிக்கும் குரூரமான சிந்தனையோடு (மற்றவர்களுக்கிருந்ததோ இல்லையோ எனக்கிருந்தது) அங்கே அமர்ந்திருந்தோம். ஒருவர் பின் ஒருவராக சென்ற பின் என் முறை வந்ததும் ஐயா உங்கள வரச்சொன்னார் என்றார் ஒரு பெண்.

கொஞ்சம் தயக்கம், லேசான பயத்துடன் குறிப்பிட்ட அந்த அறைக்குள் சென்றேன். கர்பகிரகத்திற்குள் சென்றது போன்ற உணர்வு பெரிய அம்மன் படம், சந்தன வாசம், ஊதுபத்தி புகைந்துகொண்டிருந்தது மேஜைமீது வென்மையான துணி விரிக்கப்பட்டிருந்தது, அங்கே அமர்ந்திருந்தவரும் வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தது அந்த இடத்தையே ஒரு புனிதம் நிறைந்த இடம் போன்ற பிரம்மையை உருவாக்கியது.

உட்கார், என்று அவர் சொன்னதும் தயக்கத்தோடு அமர்ந்தேன். நண்பர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்த விசயங்களை ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொண்டேன் எப்படி கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயார் நிலையில் இருந்தேன்.

பெயர் என்ன?

எங்கிருந்து வர்ரீங்க?

இது சொந்த ஊரா?

அப்பாவுக்கு என்ன தொழில்?

இப்படி மிக எளிமையான கேள்விகள், எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. ஒன்னும் தெரியாமல் போனல் தெரியாததை பற்றியே கேள்வி கேட்கிறார்கள். தெரிந்துகொண்டு போனால் அதைத்தவிர மற்ற விபரங்களை கேட்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன். என்னுடைய ஏமாற்றத்தை மேலும் உச்சத்திற்கு ஏற்றும் விதமாக, அவர் என்னுடைய சான்றிதழ்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நான் கொடுத்த சான்றிதழ் தொகுப்பில் அவர் எதையோ தேடி அதில் தோற்றுப்போனது போல் எனக்கு தோன்றியது. அவர் தேடியதை கேள்வி மூலம் தெரிந்துகொள்ளும் முயற்சியாக என்னிடம் தொடர்ந்து பல கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். ஹும் அவருக்கு தேவையான செய்தி கிடைக்கவில்லை இறுதியாக வெளிப்படையாகவே கேட்டுவிட்டார் “என்ன சாதிப்பா நீங்க” நான் அதுவரை யோசித்திடாத, எதிர்பார்த்திடாத கேள்வி. மலத்திலிருந்து சந்தனவாசம் கூட வரும் என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன்.

சொல்லுப்பா

....

அவர் எதிர்பார்த்தது வேறாக இருந்திருக்கும். சரிப்பா சொல்லி அனுப்புறேன் என்றார்.

மீண்டும் அழைப்பு வரவில்லை.

கொஞ்ச நாட்கள் வீணாக கழிந்தது. பின்னர் நண்பன் ஒருவன் மூலமாக ஒரு வேலை கிடைத்தது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து நிர்வாகம் செய்யும் நிறுவனம் அது.

வேலையில் சேர்ந்ததும் என்னை அழைத்த அந்த பெண்மணி, இதோ பாரப்பா என்னை அம்மா என்று நீ அழைக்கலாம், அவரை அப்பா என்று அழைக்கலாம். வேலையில் உனக்கு என்ன சந்தேகம் வந்தாலும் தயக்கம் இல்லாமல் நீ எங்களிடம் கேட்கலாம் இது ஒரு குடும்பம் மாதிரி சரியா என்றார். அவர் சொன்ன மாதிரி அங்கிருப்பவர்கள் அவர்களை அம்மா அப்பா என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தார்கள் அதை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் புதுமையாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

இரண்டு வாரத்திற்குப் பிறகு, கொடுத்த வேலையை ஒரு மூலையில் அமர்ந்து செய்துகொண்டிருந்தேன். தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோண்றியதால், சரி குடித்துவிட்டு வரலாம் என்று எழுந்தபோதுதான் கவணித்தேன் என் அருகிலேயே சில்வர் குடத்தில் தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது. இதோ இங்கேயே இருக்கிறதே என்று நினைத்து அந்த தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கும் போதே அருகில் இருந்தவர் பதட்டத்தோடு டேய் டேய் அது அம்மா குடிக்கிற தண்ணிடா என்றார்.

அம்மா குடிக்கிற தண்ணியா! ஆமா அந்த குடத்தில் இருக்கிற தண்ணி டம்ளர் இரண்டையும் அம்மா அப்பா ரெண்டு பேரும்தான் பயன்படுத்தனும் நாமெல்லா அதோ அந்த குடத்தில் இருக்கிற தண்ணியைத்தான் குடிக்கனும் என்றார். இதென்னடா கொடுமையா இருக்கு. அந்த காலத்தில் நடந்ததாக நான் படித்த விசயம் போல் அல்லவா இருக்கிறது. அம்மா அப்பா பயன்படுத்தினதை மகன்கள் பயன்படுத்த கூடாதா என்ன!

மீண்டும் தேடல்கள், நண்பர்களின் உதவிகள்.... எங்கள் ஊரில் உள்ள மிகப்பெரிய .....மாளிகையில் எனக்கு வேலை கிடைத்தது. நேர்முகத்தேர்விற்கு சென்றபோது முன்பு நடந்தமாதிரியே இவர்களும் என்னுடைய சான்றிதழ்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் சில கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

எந்த ஊரு?

அப்பாவுக்கு என்ன தொழில்?

அட அவங்களா நீங்க!

சரி இந்த தேதியில் வந்து வேலையில் சேர்ந்திடு என்றார்கள்

எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. நமக்கென்ன அவ்வளவு திறமையா இருக்கு! இவ்வளவு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டதே!

கணக்கு பணியை எனக்கு கொடுத்திருந்தார்கள். ஒரு மாதம் நன்றாகத்தான் போனது. சம்பளம் வாங்கும் போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு கொடுப்பதாக சொன்ன தொகையில் மூன்றில் ஒரு பகுதிதான் அது. அதிர்ச்சியில் அவர்களிடமே கேட்டேன் இது எனக்கு தருவதாக சொன்ன தொகை இல்லையே! இரண்டு மாதங்கள் கழிந்ததும் நீ கேட்ட தொகை கிடைத்துவிடும் பொறுமையாக இரு என்றார் அந்த மேனேஜர். சரி வந்திட்டோம் பொறுமையாக இருந்துதான் பார்ப்போம் என்றெண்ணி அங்கேயே இருந்தேன்.

மீண்டும் அதே நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுக்கும் படலம் தொடங்கியது. பெரிய நிறுவனம் என்பதால் கட்டுகட்டாக விண்ணப்பங்கள் குவிந்தன அத்தனையும் என்னிடம் மேனேஜர் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

இந்தாப்பா இதுல நம்ம சாதிக்காரங்க விண்ணப்பத்தை மட்டும் பிரித்து தனியாக எடுத்துகொடு, அதிலிருந்துதான் வேலைக்கு ஆள் எடுக்கனும் என்றார்.

என்னது நம்ம சாதிக்காரங்களா! அப்படினா என்னை சாதியை காரணமா வெச்சுத்தான் வேலைக்கு எடுத்தீங்களா! என்னோட திறமையை பார்த்து எடுக்கலையா! மிகவும் அதிர்ச்சியாக இருந்தது பெரிய நிறுவனம், ஊரில் பெரிய மனுசன் சாதியை பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கிறானே.

அதற்கு அடுத்த நாள் மேலும் அதிர்ச்சியாக இருந்தது, புதியதாக நான் வேலைக்கு சேர்ந்தவன் என்பதால் அனைவருக்கும் என்னுடைய சம்பளத்தை அறிந்துகொள்ள ஆவல் இருந்தது.

எவ்வளவு சம்பளம் வாங்குன?

.....

அப்படினா உனக்கு சமபளம் மட்டும் போட்டு இருக்காங்க.

அதென்ன சம்பளம் மட்டும் போட்டிருக்காங்க! சம்பளம்தானே போடுவாங்க... ? என்னுடைய இந்த கேள்விக்கான விடை சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த .... மாளிகையை பொறுத்தவரையில் டீ கொடுக்கும் சிறுவன் முதல் உச்சகட்டமான பணியில் இருக்கும் மேனேஜர் வரை அனைவருக்கும் ஒரே சம்பளம்தான். அடடா என்ன ஒரு சமத்துவம் என்று ஆச்சரியப்பட வேண்டாம். மாதமானால் ஊக்கத்தொகை என்ற பெயரில் இவர்களாக பார்த்து ஒவ்வொருவருக்கும் அதிகமான தொகையை கொடுப்பார்கள். சட்டப்படி குறைவான சம்பளம் ஆனால் கையில் வாங்கும்போது அதிகமாக வாங்குவார்கள். இந்த வித்தியாசமான செயல்பாட்டின் மூலமாக பணியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார்கள். விதிமுறை மீறுவதாக அவர்கள் நினைத்தாலோ அல்லது விடுமுறை எடுத்தாலோ அந்த மாதம் உங்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது. வெறும் சம்பளம் மட்டும்தான்.

ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. சாதியை பார்த்து வேலைக்கு ஆள் எடுப்பவர்களும் நம்ம சாதிக்கார பயளுக நல்லா இருக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் வேலைக்கு ஆள் எடுப்பதில்லை நம்ம சாதிக்காரங்களை நாமதான் கொடுமைபடுத்தனும் மத்தவங்க கொடுமைப்படுத்த கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்.

முடிவு செய்துகொண்டேன் இனி இந்த இடம் நமக்கு ஒத்துவராது. அன்று வேலை முடிந்ததும் வெளியே வந்துபார்த்தேன் என் நண்பன் இரண்டு சக்கர வாகணத்தில் வந்து எனக்காக காத்துக்கொண்டிருந்தான். சிறு வயதுமுதல் என்னோடு இருப்பவன். யோசித்துப்பார்த்தேன் இவன் என்ன சாதியாக இருப்பான்! விடை கிடைக்கவே இல்லை இத்தனை வருடத்தில் நானும் அவனிடம் கேட்டதில்லை, அவனும் என்னிடம் கேட்டதில்லை, ஒன்றாக பயணம் செய்தோம். ஊரில் உள்ள பெரிய மனிதர்களை சந்தித்ததனால் ஏற்பட்ட ஒரு செயல்விளைவு என்னவென்றால் என் நண்பன் என்ன சாதியாக இருப்பான் என்று என்னை யோசிக்க வைத்ததுதான். முடிந்தவரை இனி பெரிய மனிதர்களை சந்திக்காமல் இருப்பது நல்லது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</