வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


புலி–நம் தேசிய விலங்கு

பூபதி  

செய்திகளில் அவ்வப்போது விபத்தில் சிக்கி மான் இறந்தது, ரயிலில் அடிபட்டு யானை இறந்தது என்ற செய்திகள் அவ்வப்போது வருவதுண்டு. செய்தியை கேள்விப்பட்டதும் “அடடா” என்று மிக சதாரணமாக நம்முடைய அனுதாபத்தை தெரிவித்துவிட்டு நம்முடைய வேலையை பார்க்கத்தொடங்கிவிடுவோம். இந்த செய்திகளைப்போல கொஞ்ச நாளைக்கு முன்பு புலி ஒன்று இறந்துவிட்டதாக செய்தி பரவியது. நம்முடைய தேசிய விலங்கு என்பதாலோ என்னவோ இந்த செய்தியை கேள்விப்பட்ட அனைவருமே அதிர்ச்சிகுள்ளானார்கள். மற்ற விலங்குகளின் இறப்புச் செய்தியை தாங்கிவரும் சதாரணமான செய்தியாக இது அமையவில்லை. உலகை உலுக்கிய செய்தியாக அமைந்திருந்தது. இன்று வரை அந்த செய்தியின் சலசலப்பு ஓயவில்லை. ஒரு குழுவினர் அந்த புலியை நாங்கள் கொண்று விட்டோம் என அறிவித்து அதற்கு சாட்சியாக புலியின் உடல் மற்றும் அதன் அடையாளங்களை காட்டினார்கள். மற்றொரு குழுவினர் அந்த புலி சாகவில்லை, கொல்லப்பட்டதாக காட்டப்படுவது அந்த புலியின் உடல் அல்ல, அந்த புலி இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. அந்த புலியின் உறுமல்களை நாங்கள் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என அறிவித்துள்ளார்கள். அந்த புலியை மீண்டும் கண்ணில் பார்க்கும் வரை இந்த பிரச்சனைக்குறிய விவாதம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

அந்த புலியை சுற்றி வலைத்து விட்டோம், பிடித்துவிடுவோம், கொன்று விடுவோம் என்ற செய்திகள் வர ஆரம்பித்தவுடன் நம் ஊரில் பெரிய சலசலப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அல்லது அதிர்ச்சியளிக்கும் விதமாக இங்கே எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. சலனமில்லாமல் எப்போதும் போல அவரவர் தங்களுடைய பணியை செய்துகொண்டிருக்கிறார்கள். நம் ஊரில் அதிக எண்ணிக்கையில் புலிகள் இருந்ததனால், குறிப்பிட்ட அந்த புலி இறந்ததாக செய்தி பரவியதும் நம் ஊரிலுள்ள அனைத்து புலிகளும் உறுமும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஒன்றிரண்டு புலிகள் தவிர மற்ற அனைத்து புலிகளும் உறுமுவதற்கு பதிலாக ‘மியாவ், மியாவ்’ என்ற சத்தத்தை எழுப்பின, அட! இவ்வளவு காலம் புலிகள் போல நம் ஊரில் இருந்ததெல்லாம் உண்மையில் பூனைகளா! என ஆச்சரியப்பட்டு உற்றுப்பார்த்தால் அவைகள் புலிகள்தான். இப்போதுள்ள சூழ்நிலை மற்றும் சுயநலத்தை கருத்தில்கொண்டு பூனை போல நடந்துகொள்கின்றன. எதுவும் செய்ய இயலாத ஒன்று இரண்டு புலிகள் மட்டும் பூனை போல நடந்து கொள்ளாமல் உறுமிக்கொண்டு இருக்கின்றன.

நம் ஊரில் உள்ள புலிகள் மானம் கெட்டாலும் பரவாயில்லை எனக்கருதி பூனை போல நடந்து கொள்ள காரணம் என்ன? இறந்துபோனதாக கருதப்படும் அந்த புலிக்கு ஆதரவாக குரல்கொடுக்கக்கூட நம் ஊரிலுள்ள புலிகள் விரும்பாததற்கு காரணம் என்ன? கொஞ்ச நாளைக்கு முன்பு ஊருக்குள் புகுந்த புலி ஒன்று நம்ம ஊர் முக்கிய புள்ளி ஒருவரை தாக்கி அழிக்க, ஊரே அதிர்ந்து போனது. புலியின் குணம் நமக்கு நன்றாக தெரியும் என்றாலும் அந்த நிகழ்ச்சி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த நிகழ்ச்சியினால் ஏற்படப்போகும் பின் விளைவுகள் மற்றும் இறந்துபோன அந்த முக்கியப் புள்ளியை சார்ந்தவர்களை பகைத்துக் கொள்வதனால் தங்களுக்கு கிடைக்காமல் போகும் பலனை எண்ணிய உள்ளூர் புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் புலிகள் என்ற அடையாளத்தை மாற்றி பூனைகளாக மாறி விட்டன.

நம் ஊருக்குள் வந்து புலி தாக்கியதை பெரிதுபடுத்தும் நாம், காட்டுக்குள் போய் நம் மக்கள் என்ன செய்தார்கள் என்பதையும் சிந்திக்க வேண்டும். கடமையாற்றுகிறோம் என்ற பெயரில் அவர்கள் வரைமுறை தாண்டி நடந்து கொண்டதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் யாரும் மறந்து விடவும், மறுத்துவிடவும் இயலாது. இருந்தாலும் ஊருக்குள் வந்து தாக்கி விட்டதால் இனி புலிகளை ஊருக்குள் விடக்கூடாது என்ற சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டம் என்ற ரீதியில் புலி எதிர்பாளர்களின் பேச்சு இருந்தமையால் புலிகள் பற்றிய விழிப்புணர்வு நம் ஊரில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத்தொடங்கியது. இந்த காலகட்டத்தில்தான் நம் ஊரில் இருந்த பல புலிகள் பூனைகளாக மாறின. புலி பிடிக்கிறோம் என்ற பெயரில் பிற மனிதர்கள் நடந்து கொள்ளும் விதத்தை தினமும் செய்திகளில் படிக்கும் போது பூனைகள் கூட புலியாக மாறும் ஆனால் நம்ம ஊரில் இருந்த புலிகள் பூனையாக மாறியது வறுத்தப்பட வேண்டிய ஒன்று.

இப்போதெல்லாம் புலிகளை கண்டதும் சுட்டுப் பிடிக்கிறார்கள் அல்லது பிடித்து சுடுகிறார்கள். முன்பு புலிகளை பிடித்தால் தன் வீரத்தை பறைசாற்றும் விதமாக அதை தன் வீட்டில் பாடமாக்கி வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது புலியை பிடித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தி, கொடுமை செய்து கொல்வதாக மட்டுமே நோக்கமாக அமைந்திருக்கிறது. மனிதர்களின் சிந்தனை எவ்வளவு கேவலமாக செல்லும் என்பதை அவர்களின் நடவடிக்கை மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. முக்கியமான புலி இறந்து விட்டதால் மற்ற புலிகளையும் தேடி அழிக்கும் பணி தொடர்கிறது. சமீபத்தில் கூட நாட்டில் இருந்த ஒரு புலியை பிடித்து வந்தார்கள். அதன் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஊருக்குள் புலிகளின் நிலமை வாழ்வா சாவா என்ற நிலைமையில் இருக்க, காட்டுக்குள் புலிகளின் வளர்ச்சியை ஆதரித்தவர்களின் நிலைமையோ சாவே மேல் என்று எண்ணும் வகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் நடப்பதற்கு அந்த முக்கியமான புலிதான் காரணம் என்று ஒரு சாரர் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த புலி நம் ஊருக்குள் வந்து தாக்கியதன் விளைவே இப்போது அனுபவித்து கொண்டிருக்கிறது. அது அப்படி நடந்து கொண்டிருக்க கூடாது. சாத்வீகமான குணத்தை பின்பற்றி இருந்தால் புலிகளுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்பது அவர்களின் வாதம். அதாவது புலிகள் தங்களுக்கென்று இருக்கும் குணத்தை விட்டிருக்க வேண்டும். என்ன நடந்தாலும், எவ்வளவு கேவலப்படுத்தினாலும் மானம் கெட்டாலும் புலி போல் உறுமிக்கொண்டிருக்காமல் பூனை போல் ‘மியாவ், மியாவ்’ என்று அனத்திக்கொண்டு, புலம்பிக்கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்கிறார்கள். புலிகளின் வீரமிக்க வாழ்வின் சிறப்பு நம்ம ஊர் பூனைகளுக்கு தெரியாது அதனால் தான் இப்படிப்பட்ட பேச்சுக்கள் வருகின்றன. என்றாவது நமது தேசிய ஆய்வு அறிக்கை பன்றிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என வருத்தப்பட்டு இருக்கிறதா! எந்த ராஜாவாவது நான் பன்றி வேட்டைக்கு செல்கிறேன் என பெருமைபட சொல்லி இருக்கிறார்களா! இப்படிப்பட்ட பெருமைகளெல்லாம் புலிகளுக்கு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் புலிகளின் வீரமிக்க வாழ்வும் அதன் பண்புகளும்தான்.

ஊருக்குள் செல்லும் போது கொல்லப்படுவோம் என்பதும், மற்றவர்கள் வேட்டைக்கு காட்டுக்குள் வரும்போது இழப்புகள் இருக்கும் என்பதையும் புலிகள் அறியும். ஆனால் தனக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது தன் இனம் தனக்கு துனையாக இருக்கும், எந்த வகையிலும் தன் இனம் தனக்கு உதவும் என்று எதிர்பார்த்திருந்த புலிக்கு நம்ம ஊரில் இருக்கும் புலிகளின் நடவடிக்கை பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தன் இனம் அழியும் போது உதவக்கூடிய நிலையில் உள்ளவன் எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்பதென்பது பச்சை துரோகமின்றி வேறில்லை.

அந்த புலியை கொண்று விட்டோம் என்று அவர்கள் மார்தட்டிக்கொள்வது இது முதல் தடவையாக இருந்தால் இந்த நிகழ்ச்சி நம்மை துக்கப்படுத்தும். ஆனால் இது முதல் தடவை அல்ல, பல முறை இது போன்று நடந்துள்ளது. ஒவ்வொரு முறை இவர்கள் இப்படி சொல்லிய போதும் அந்த புலி சீற்றம் குறையாமல் திரும்ப வந்துள்ளது. அந்த நம்பிக்கை இப்போதும் எல்லோருக்கும் உண்டு. ஆனால் இம்முறை அவர்கள் ஆதாரமாக காட்டியுள்ள புலியின் நகம், சதை போன்றவை நம்மை துயரத்திற்கு ஆளாக்கியிருக்கிறது என்பது உண்மையே.

புலியின் நிலைமை நம்மை வருத்தப்பட வைத்தாலும் நம்மை வியப்படையவும், பெருமைப்படவைக்குமாரும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிரச்சனை வரும் போது தன் குட்டிகளை மடியில் வைத்துக்கொண்டு ஓடும் கங்காரு அல்ல நான் என அந்த புலி நிருபித்துள்ளது. அதே போல பயத்தினால் தன் தாய் தந்தையை கட்டிப்பிடித்துக்கொண்டு தப்பிச் செல்லும் குரங்கு குட்டிகள் அல்ல நாங்கள் என அந்த புலி குட்டிகளும் நிருபித்துள்ளன.

இயற்கையில் காரணமின்றி எதுவும் நிகழ்வதில்லை. ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நிச்சயம் ஒரு அர்த்தம் இருக்கும். ஒவ்வொரு உயிரினங்களும் தோண்றியது போல புலிகள் தோண்றியதற்கும் சரியானா காரணங்கள் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் அழிவை தடுத்து மீண்டும் புலி இனத்தை பெருக்க நம்மால் எதுவும் செய்ய இயலாவிட்டாலும். நம்மால் செய்யக்கூடிய இரண்டு விசயங்கள் உண்டு. ஒன்று நம்முடைய செயல்களால் புலிகளை அழிக்காமல் இருப்பது. இரண்டாவது அதன் அழிவை பார்த்து சந்தோஷப்படாமல் இருப்பது. ஏனெனில் ‘புலி’ நம் தேசிய விலங்கு.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</