வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


ஆரம்பக்கால தவறுகளும் சில அர்த்தங்களும்

பூபதி  

ஊரின் எல்லையில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது நான் பயின்ற பள்ளி. ஊரின் எல்லைப் பகுதி என்பதால் பள்ளிக்கென்று பிரதான சாலை வசதி எதுவும் கிடையாது. பல வீடுகளின் வாசல்களின் வழியே செல்ல வேண்டும். வீடுகளை பொருத்தவரையில் பெரும்பாலும் சாலை வீடுகளாகவே இருக்கும். எம் பொலுப்புத்தான் இப்படியாடிச்சி என் மகனாவது படிச்சி நல்லாயிருக்கட்டுமே என்று புலம்புவார்களே அந்த வகையான மக்கள் அதிகமிருக்கும் பகுதி அது. கொஞ்சுவதைக்கூட கோபத்தைப்போல வெளிப்படுத்தும் வெகுளியான மக்கள். பள்ளிக்கு செல்லும் போதும், சென்று திரும்பும்போதும் குடி தண்ணீருக்காக அவர்களை நாங்கள் அனுகுவதுண்டு, அதனால் எங்களின் அன்றாட தேவையை புரிந்துகொண்டு பல வீடுகளின் வாசலில் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீரை எப்போது வைத்திருக்கும் பாசமிக்க மக்கள் அவர்கள். நடை பாதையின் ஓரம் மலம் கழிக்கும் மழலைகள், இடப்பெயர்ச்சி என்றால் என்னவென்றே அறிந்திடாத சாக்கடைகள், அப்படி இருப்பதுதான் எங்கள் அதிர்ஷடம் என்று நினைக்கும் பன்றிகள் என பலவற்றை கடந்தே நாங்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும். உண்மையாகவே இந்த விசயங்கள் எங்களை ஒருபோது உறுத்தியதில்லை காரணம் நாங்களும் அந்த மண்ணின் மைந்தர்கள்தேனே!.

பள்ளியில் தினமும் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்தை விளையாடுவதற்கு என்று ஒதுக்கியிருப்பார்கள். அந்த மணி நேரம் எப்போது வரும் என்றே பெரும்பாலான மாணவர்கள் ஏங்கிக்கொண்டிருப்போம். சரி செல்லுங்கள் என்று ஆசிரியர் ஆனையிட்டதும் பெண் பிள்ளைகள் ஒருவர் பின் ஒருவராக நின்று விளையாட்டுத்திடல் நோக்கி முன்னே சென்று விடுவார்கள். அவர்களுக்குப் பிறகு ஆண் பிள்ளைகளும் அதே போல வரிசையாக நின்று கொண்டு புகையில்லாமல் செல்லும் புகை வண்டி போல ஒருவர் பின் ஒருவராக விளையாட்டுத்திடல் நோக்கி செல்வோம். விளையாட்டுத்திடல் என்று நாங்கள் அங்கு விளையாடுவதால் அப்படி சொல்லிக்கொள்வோமே தவிர உண்மையில் அது விளையாட்டுத்திடல் அல்ல. அது ஒரு சுடுகாடு, அந்த சுடுகாட்டை தாண்டி குறிப்பிட்ட அளவு வெற்று இடம் இருக்கும் அந்த இடத்தில் சென்று விளையாடிவிட்டு வருவோம். சில நேரக்களில் பிணம் ஏதாவது எறிந்துகொண்டிருந்தால் விளையாட செல்லாமல் அச்சத்தின் காரணமாக அப்படியே திரும்பி வந்துவிடுவோம். எதிர்பாராத விதமாக ஒரு சில சமயங்களில் நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று பிண ஊர்வலம் அங்கே வந்துவிடும் உடனே பிடித்த தெய்வங்களின் பெயர்களை பித்துபிடித்துபோல சொல்லிக்கொண்டு அச்சத்துடன் நாங்கள் அங்கிருந்து வகுப்பறையை வந்தடைவோம்.

இப்போது பள்ளிக்கு செல்லும் குழந்தகளை பார்த்தால் ஏதோ பயிற்சி சாலைக்கு செல்வதைப்போல இறுக்கத்துடன் செல்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரையில் அரசாங்க பள்ளிக்கூடம் என்பது அற்புதமான சொர்க்கம். நாங்கள் ஆடிய ஆட்டத்திற்கு அளவே இல்லை. பக்கத்தில் இருப்பவனிடம் எப்போதும் பாசமாக பேசிக்கொண்டிருப்பதால், அடிக்கடி ‘வெளியே போ’ என்ற ஆசிரியரின் உத்தரவிற்கு அடிபணிந்திருக்கின்றேன். ஆசிரியர் என்றதும்தான் ஞாபகம் வருகிறது. சென்ற பிறவியில் எந்த முனிவரிடம் சாபம் வாங்கினாரோ தெரியவில்லை, பாவம் எங்களுக்கு ஆசிரியராக அமைந்துவிட்டார். கலைந்த தலையும், கசங்கிய சட்டையுமாக இருந்த எங்களை, ஒரு அண்ணல் அம்பேத்கராகவோ, அண்ணல் காந்தியைப்போலவோ மாற்றிவிட கடும் முயற்சி எடுத்துக்கொண்டார். தூய்மையின்மையின் துன்பம், சேமித்தால் சேமமாக இருக்கலாம் என நாளொரு நற்செய்தியை சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த ஆசிரியரின் பெயர் சித்திரக்கலா. அவர் மீது அப்போது எங்களுக்கு மதிப்பு மரியாதை இல்லாவிட்டாலும், அந்த ஆசிரியரை நாங்கள் ஒருபோதும் வெறுத்து ஒதுக்கியதில்லை, அவரைக்கண்டு அச்சம் கொண்டதில்லை, ச்சே வந்துவிட்டாரே என்று வருத்தப்பட்டதில்லை. அவர் நாளொரு நற்செய்தியை சொல்லிக்கொண்டிருந்தாலும் நாங்கள் நாங்களாகவே இருந்தோம். அதாவது தூய்மையில்லாமல் இருந்தோம், தாமதமாக வருவோம், ஒழுங்கில்லாமல் பேசிக்கொண்டே இருப்போம். அடிபணிவதா அப்படி என்றால் என்ன என்று கேட்டுக்கொண்டிருந்த எங்களை அடக்கி அவர் வழிக்கு கொண்டுவர சில கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். தாமதமாக வகுப்பிற்கு வந்து தாமதமாயிடிச்சி என்று தலைகுனிந்து சொல்லும் எங்களை ஏன் என்று கேள்வியே கேட்காமல் நீண்ட நேரம் முட்டி போட்டிருக்கச் செய்வார். வகுப்பிற்கு வெளியே போ என்று அதட்டிப்பார்த்தார், அடித்துப்பார்த்தார், எந்த மாற்றமும் எங்களிடம் இல்லை. ஆசிரியருக்கு எப்படித்தோன்றியது, ஏன் தோன்றியது என்றெல்லாம் தெரியவில்லை திடீரென்று ஒரு நாள் அறிவித்தார். இனிமேல் வகுப்பிற்கு தாமதமாக வரும் மாணவர்கள் இருபத்தைந்து பைசா கொடுக்க வேண்டும். வகுப்பின் தலைவனாக உள்ள மணவன் அந்த பைசாக்களை சேமிக்க வேண்டும். சேமித்த பணத்தால் வகுப்பிற்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார். இந்த அறிவிப்பு எங்களை எந்த விதத்திலும் அதிர்ச்சியடையச் செய்யவில்லை. தாமதமாக வரும்போதெல்லாம பைசா கொடுத்துவிடுவோம். மிட்டாய் வாங்க முடியாதே என்ற வருத்தம் ஏற்பட்டதில்லை காரணம் தாமதமாக வருகிறோம் அதனால் தண்டிக்கப்படுகிறோம். ”ஆசிரியர் நம் நல்லதுக்குத்தானே செய்றாங்க” என்ற எண்ணம் எங்களுக்கு எப்போதும் இருந்ததால் ஆசிரியரின் செய்கையில் எந்த குறையும் நாங்கள் கண்டதில்லை.

சில நேரங்களில் அடிப்படை அறிவு கூட இல்லாத சாதாரணமான மக்கள் அறிவு ஜீவிகளுக்கு அறிவுரை கூறம் சம்பவம் அவ்வப்போது நடப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் ஒரு நாள் நிகழ்ந்தது. பள்ளி அமைந்துள்ள அந்த பகுதியிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவன் ஒருவன், ஒரு நாள் தாமதமாக வந்துவிட்டான். தாமதமாக வந்தால் பைசா கொடுக்க வேண்டும் என்பது அவனும் அறிந்ததுதான். சட்டைப்பையில் தேடிப்பார்த்தான், புத்தகதை கொண்டுவந்த பையில் தேடிப்பார்த்தான் பைசா தட்டுப்படவில்லை. டீச்சர் எங்க அம்மாகிட்ட போய் வாங்கிட்டு வந்திடட்டுமா என்று கேட்டான். பாடம் நடத்துவதில் நாட்டம் கொண்டிருந்தா ஆசிரியர். சரி போ என்று சாதாரணமாக சொல்லிவிட்டு பாடத்தை தொடர்ந்தார். ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும் திடிரென்று கொச்சைத்தமிழில் ஒரு குரல், இத ஆரு எம் புள்ளகிட்ட காசு கேட்டது? அரசாங்க பள்ளி கூடத்துல எதுக்கு காசு கொடுக்கனும்? அந்த கெரகம் இல்லாததாலதானே நாங்க இந்த பொழப்பு பொழைக்கிறோம். அது இருந்தா நாங்க ஏ இப்படி இருக்கிறோம். என்று கனீரென்ற குரலில் கத்த ஆரம்பித்தார் அந்த மாணவனின் தாயார். ஆசிரியரும் கிடைத்த சந்தர்பங்களிலெல்லாம் தன்னுடைய ஞாயத்தை சொல்ல முயற்சித்தார் ஆனால் அவரின் மென்மையான குரலும், அனுகுமுறையும் அங்கு எடுபடவில்லை. சத்தம் கேட்டு பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியர்கள் அனைவரும் அங்கே கூடி, ஆசிரியரிடம் விசாரித்துவிட்டு அந்த அம்மாவை அமைதிப்படுத்தி ஆசிரியரின் ஞாயத்தை எடுதுச்சொல்லி சமாதனப்படுத்தினார்கள். இறுதியாக அந்த அம்மா அங்கிருந்த அனைவருக்கும் பொதுவாக கேட்கும்படி கத்திக்கொண்டே அங்கிருந்து அகன்றார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் “பசங்க தப்பு செய்தா எப்படி திருத்தலாம்னு யோசிங்க, அதவிட்டுபுட்டு எப்பவெல்லாம் தப்பு செய்வான் காசு புடுங்கலாம்னு யோசிக்காதீங்க, அரசாங்க சம்பள வாங்கர உங்களுக்க எங்க வாழ்க்க எங்க புரியப்போவுது, ஐந்து பைசா பத்து பசானாலும் அதை சம்பாதிக்க நாங்க எவ்வளவு கஷ்டப்படனும்னு எங்களுத்தான் தெரியும்...” ஆசிரியர் தவறு செய்துவிட்டதாக அதுவரை நாங்கள் நினைத்ததுகூட கிடையாது. நாங்கள்தான் தவறு செய்கிறோம். ஆனாலும் அந்த அம்மாவின் வார்தைகளில் அர்த்தங்கள் பல புரிந்தது. தவறு செய்கிறோம் உண்மைதான் அதற்காக ஆசிரியர் காசு கேட்டது தவறாக இருக்குமோ! அம்மா அப்பாகிட்ட ஏது காசு? அவங்களே கஷ்டப்படுறாங்க இல்ல...

சினிமாவில் வருவதுபோல சில வருடங்களுக்குப்பிறகு:

பள்ளி செல்லும் பருவமெல்லாம் கடந்து பணிக்கு செல்ல ஆரம்பித்தாகிவிட்டது. பள்ளிக்கு சென்ற அனுபவத்தைவீட பணிக்கு சென்ற அனுபவம் மிக வித்தியாசமாக இருந்தது. எதற்கெடுத்தாலும் அட இதுகூட தெரியதா என்றார்கள். இப்படி அவர்கள் கேட்கும்போது நாம் தான் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோமோ, நம் தவறுதானோ என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுவார்கள். அதனால் என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதில் மிக முக்கியமானது இரண்டு சக்கர வாகணம் ஓட்ட கற்றுக்கொண்டது. நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு பல கிளைகள் அருகருகே பல இடங்களில் இருந்தது. தினமும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்றுவர வேண்டும். ஒரு நாள் கேட்டார்கள் உனக்கு இரண்டு சக்கர வாகணம் ஓட்டத்தெரியுமா? தெரியுமே. சரி இந்தா சாவி பக்கத்தில் உள்ள கிளை அலுவலகத்திற்கு சென்று இந்த ஆவணங்களை கொடுத்துவிட்டுவா என்றனர். ஒரு வாரம் எந்த பிரச்சனையுமில்லாமல் சென்று வந்தேன் பிறகு ஒரு நாள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது சாலையின் குறுக்கே நின்று கொண்டு ஒரு காவலர் வரும் வாகணங்களில் தரம் பிரித்து சாலை ஓரம் ஒதுங்கச் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் நானும் ஒருவன். சற்று பயத்துடன் நின்று கொண்டிருந்தேன் தம்பி ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா? என்ன இல்லயா! அப்படினா நூறு ரூபாய் அபராதம் கட்டனும் என்று கூறிவிட்டு அதற்கான ரசீது எழுத ஆரம்பித்தார். பக்கத்தில் இருந்த பொது தொலைபேசியின் மூலமாக நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு விசயத்தை தெரிவித்தேன். சரி அங்கேயே இரு யாரையாவது அனுப்பி வைக்கிறோம் என்றார். சொல்லியபடியே இரண்டொரு நிமிடத்தில் ஒருவர் வந்து ரசீதை பெற்றுக்கொண்டு பண்ம் செலுத்தி என்னை நிறுவனத்திற்கு அழைத்துச்சென்றார். செல்லும் போது மனதினுள் மிகவும் பயமாக இருந்தது. நிச்சயம் என்னை கண்டிப்பார்கள் என்று சிந்தித்துக்கொண்டே சென்றேன்.ஆனால் அங்கே சென்றதும் என்னை பார்த்து அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் சாலையில் காவலரிடம் மாட்டிக்கொண்ட விசயம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஏன் சிரிக்கிறார்கள் என்று நான் கேட்பதற்கு முன்பே ஒவ்வொருவரும் தம் கருத்துக்களை தெரிவித்தார்கள். ஏண்டா போலீஸை பார்த்ததும் சட்டுனு வேற பாதையில் மாற்றி சென்றிறுக்க வேண்டியதுதானே? சொந்த ஊரில் இப்படி மாட்டிக்கொள்ளலாமா? கொஞ்ச தூரத்தில் அவர்கள் நிற்பது தெரிந்தால் பேசாமல் திரும்பி வந்துவிடு கொஞ்ச நேரம் கழித்து போகலாம்... பல மாற்று யோசனைகள் சொன்னார்களே தவிர நீ ஓட்டுநர் உரிமம் வாங்கிவிடு என்று யாரும் கூறவில்லை. இப்படி நம் தவறுகளை தட்டிக்கொடுக்கும் நான்கைந்து நண்பர்கள் கிடைத்துவிட்டால் அந்த நல்ல பழக்கம் நம் வாழ்வில் இறுதிவரை வரவே வராது என்பது என் அனுபவம்.

வாகண விசயத்தில் ஆரம்பத்தில் நான் செய்த தவறே ஆராதிக்கப்பட்டுவிட்டதால். அதற்குப்பிறகு நான் எதற்கும் பயப்பட்டதில்லை. இரண்டு சக்கர வாகண ஓட்டுநர்களுக்கென்று ஏதாவது ஒரு உத்தரவை அரசு வெளியிட்டுக்கொண்டெ இருக்கும். அது வாகணத்தில் உள்ள உதிரி பாகங்களைவிட அதிகம். அவற்றையெல்லாம் நான் காதில் போட்டுக்கொள்வதில்லை. ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். வாகணம் தொடர்பாக ஆவனம் வைத்திருக்க வேண்டும், காப்பீடு செய்திருக்க வேண்டும். எண் பலகை இப்படி இருக்க வேண்டும், தலை கவசம் அணிந்திருக்க வேண்டும் என வரிசை படுத்திக்கொண்டே போவார்கள். இதில் ஒன்றிரண்டை தவிர வேறு எதையும் நான் வைத்துக் கொள்வதில்லை. என்றாவது ஒரு நாள் மாட்டிக்கொண்டால் பணம் கட்டிவிட்டு வந்துவிடுவேன். இதில் எனக்கு வருத்தமோ அல்லது அவர்கள் மீது கோபமோ ஏற்படாது. காரணம் ”அவர்கள் நம் நன்மைக்குத்தானே சொல்கிறார்கள்”. அதை பின்பற்றாதது நம் தவறு அதனால் பணம் கட்டுகிறோம் என்று எண்ணிக்கொள்வேன். ஆனால் இப்போதெல்லாம் முன்பு போல என் நன்பர்கள் அரசின் உத்தரவுகளை கேலி பேசுவதில்லை அவர்களுக்கும் சாலை விதிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. அரசு சொல்கிறதோ இல்லையோ தலைக்கவசத்துடன்தான் தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள். செய்தித்தாளை திறந்தவுடன் தென்படும் விபத்துகளின் விபரம் அவர்களுக்கு ஒரு பக்குவத்தை கொடுத்துவிட்டது என்றே எண்ணுகிறேன். அதனால் அரசின் உத்தரவுகளை நான் கேலி பேசினால் ஆம் என்று இப்போதெல்லாம் அவர்கள் ஆமோதிப்பதில்லை.

என் தவறுதான், என் நன்மைக்கு என்று சொல்லப்படும் விசயங்களை நான் நிச்சயம் கடைபிடித்திருக்க வேண்டும். அவற்றை கடை பிடித்திருந்தால் அது ஒரு நல்ல பழக்கமாக, பாதுகாப்பாக அமைந்திருக்கும். மற்றபடி வேறு யார்மீதும் குற்றமில்லை. ஆனாலும் பாருங்கள் அவ்வப்போது பள்ளி பருவத்தில் நான் பார்த்த அந்த அம்மாவின் குரல் அடிக்கடி ஒலித்துக்கொண்டே இருக்கிறது “பசங்க தப்பு செய்தா எப்படி திருத்தலாம்னு யோசிங்க, அதவிட்டுபுட்டு எப்பவெல்லாம் தப்பு செய்வான் காசு புடுங்கலாம்னு யோசிக்காதீங்க, அரசாங்க சம்பள வாங்கர உங்களுக்க எங்க வாழ்க்க எங்க புரியப்போவுது, ஐந்து பைசா பத்து பசானாலும் அதை சம்பாதிக்க நாங்க எவ்வளவு கஷ்டப்படனும்னு எங்களுத்தான் தெரியும்...”. தவறு செய்கிறோம் உண்மைதான் அதற்காக பணம் கேட்பது ஒரு வேலை தவறாக இருக்குமோ!

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</