வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


சிங்கார கோவையும், சிறப்பான மாநாடும்

பூபதி  

நான் விரும்பிப்பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியமானது மக்கள் முன்னிலையில் செய்யப்படும் மாய வித்தைகள். நிகழ்ச்சியில் வரும் நபர்கள் பழத்திலிருந்து முட்டை எடுப்பது, எடுத்த முட்டையில் இருந்து ஒரு குருவியை வரவழைப்பது என பல வித்தைகள் செய்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். அவர்கள் காட்டும் வித்தையில் வியந்துபோய் அந்த நிகழ்ச்சிகளை நான் பார்க்கவில்லை. நான் பார்த்த வித்தையை விட வேறு யாராவது வித்தை காட்டுகின்றார்களா என தெரிந்துக்கொள்ளும் ஆவலில் தான் அந்த நிகழ்ச்சிகளை பார்க்கிறேன். அப்படி என்ன வித்தையை நான் பார்த்துவிட்டேன்! நான் பார்த்த அந்த வித்தையை அனைவராலும் செய்ய முடியாதா! நிச்சயமாக முடியாது, ஒரு சிலரால் மட்டுமே அதை செய்ய முடியும்.

மழை நீர் சேகரிப்பு, மழை நீர் சேகரிப்பு என்று கொஞ்ச நாளைக்கு முன்பு அனைவரும் பேசிக்கொண்டோமே ஞாபகம் இருக்கிறதா! உங்கள் ஊரை சேர்ந்தவர்கள் எப்படியோ எனக்குத்தெரியாது. ஆனால் எங்கள் ஊரில் நூறு சதவீதம் அந்த திட்டத்தை பின்பற்றினோம். நீங்கள் அதை நம்பவில்லை எனில், நன்றாக மழை வரும் பருவங்களில் எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள் பெய்த மழை நீர் எங்கும் சென்று வீணாகிவிடாமல் அப்படியே சாலைகளில் தேங்கி நிற்கும். ஏனெனில் எங்கள் ஊர் சாலைகள் ஏழைகளின் வாழ்க்கையைப்போல மேடு பள்ளம் பல நிறைந்தது. அதனால் பெய்த மழை நீரை முழுமையாக சேகரித்துவிடுவோம். அதனால்தான் எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கிறது.

தண்ணீர் தேங்கி நிற்கும் காலங்களில் வாகணங்களில் பயணம் செய்வது எவ்வளவு ஆனந்ததை கொடுக்கும் தெரியுமா! திடீரென்று பள்ளம் வரும், உடனே மேட்டில் பயணம் என மாறி மாறி சாகசம் செய்துகொண்டிருப்போம். என்ன ஒரு பிரச்சனை என்றால் சில நேரங்களில் தவறி கீழே விழுந்துவிடுவோம். அதுசரி சாகசம் என்றாலே எழுவதும் விழுவதும் இயல்புதானே. இப்படி சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் எங்கள் வாழ்வில் அவ்வப்போது இடி விழந்தது போன்ற ஒரு செய்தி வரும். அது என்னவென்றால் எங்கள் ஊருக்கு முக்கியமான அரசியல் புள்ளிகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக விஜயம் செய்வார்கள். முக்கியமான புள்ளி அல்லவா அதனால் அவர் வரும் போது எந்தவித குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக இரவோடு இரவாக சாலைகளை சீரமைத்து புதியதாக போடப்பட்ட சாலைபோல செய்து, சாலை ஓரங்களில் வெள்ளை நிற கோடுகளைப் போட்டு அலங்கரித்து வைத்திருப்பார்கள். காலையில் வழக்கம்போல் அந்த வழியாக செல்லும் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருக்கும். இனி சாலைகளில் மலைநீர் தேங்கி நிற்காதே, இப்படி ஓரே சீரான சாலையில் செல்வதில் என்ன சந்தோசம் இருக்கிறது! வழக்கமான மழைக்கால சந்தோசம் இனி நமக்கு கிடைக்காதே என்ற வருத்தத்துடன் சென்று கொண்டிருப்போம். ஆனால் பாருங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதமாக குறிப்பிட்ட சில நாட்களில் அந்த சாலைகள் பழையபடியே மாறிவிடும். எங்கெல்லாம் குழிகள் இருந்தனவோ அங்கெல்லாம் குழிகள்!, எங்கெல்லாம் மேடுகள் இருந்தனவோ அங்கெல்லாம் மேடுகள்! என பழைய நிலமைக்கே திரும்பி இருக்கும். இதுதான் என்னை ஆச்சரியப்படுத்திய வித்தை, இது எப்படி சாத்தியமாகிறது என்று எனக்கு இதுநாள் வரை புரியவில்லை. இந்த வித்தையை இதுநாள் வரை எனக்குத்தெரிந்து யாரும் முறியடிக்கவில்லை. அடிக்கடி இந்த வித்தையை செய்து எங்களை ஆச்சரியத்தில் முழ்கடிக்கின்றனர். யாராவது ஒரு முக்கியப்புள்ளி வருவார், உடனே சாலைகள் சீரமைக்கப்படும். அந்த முக்கியப்புள்ள வந்து சென்ற விசயத்தை நாங்கள் மறந்துபோகும் காலம் வரைக்கும் சாலைகள் சீராக இருக்கும். பின்னர் பழையபடி மாறிவிடும்.

சில சாதனைகள் செய்தவராலேயே மீண்டும் முறியடிக்கப்படும் அல்லவா! அதுபோல ஒரு சில சாலைகளில் மட்டுமே இதுவரை செய்யப்பட்டு வந்த இந்த வித்தையை முறியடிக்கும் விதமாக அவர்களே கோவை மாநகர் முழுவது இந்த வித்தையை செயல்படுத்தியுள்ளார்கள் செம்மொழி மாநாட்டுக்காக. வித்தை வெற்றியடையுமா தோல்வியடையுமா என தெரியவில்லை ஆனால் ஆவலுடன் காத்திருக்கின்றோம். மூடப்பட்ட பள்ளங்கள் மீண்டும் முளைக்கும் என்ற நம்பிக்கையில். இந்த மிகப்பெரிய சாதனைக்காக நாங்கள் என்னெவெல்லாம் செய்திருக்கின்றோம் தெரியுமா? விழாவை காண்பதற்காக வெளியூரில் இருந்து வந்தவர்களுக்குத் தெரியாது இங்கு வாழும் எங்களிடம் கேளுங்கள் சொல்கிறோம். சாலை ஓரங்களில் தேவையில்லாமல் நிழல் கொடுத்துக்கொண்டு பசுமையாக பல ஆண்டுகள் இருந்த மரங்களை மண்ணில் இருந்து வேறோடு பிடுங்கிவிட்டோம். அறிவில்லாத சிலர் மரம் இல்லை அதனால் மழை இல்லை என்று ஏதேதோ பேசிவிடுவார்கள் என்பதற்காக, பிடுங்கப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சிறு சிறு செடிகளை நட்டுவிட்டோம். நம்மை நிச்சயம் காப்பாற்றுவார் என மக்கள் நம்பிக்கொண்டிருந்த பல சாமிகளிடம் முறையாக பட்டா இல்லாததால் இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டோம். மரங்கள் இல்லாமல் இப்போது சாலைகள் நன்றாக வெளிச்சமாக இருப்பதால் இனி வாகண விபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். குறிப்பிட்ட சில நாட்களிலேயே கோவையை கோலாகலப்படுத்திய செயல்பாடுகளை பார்க்கும் போது, முடியாது என்பது முயலாதவன் வார்த்தை என்பது சரிதான் என்று தோண்றுகிறது.

சிறப்பான சில விசயங்களை ஆதரிக்க சில மக்கள் இருக்கின்றார்கள் என்றால் அதை ஆட்சேபிக்கவும் சில மக்கள் இருக்கத்தானே செய்வார்கள். இந்த விசயத்திலும் சில ஆச்சேபிக்கும் மக்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்வதெல்லாம் அறிவுபூர்வமான விசயமாக எனக்குப்படவில்லை.

அவர்கள் சொல்கிறார்கள்:

தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை அதன் தாயார் அடித்து இழுத்துச் சென்று, “நேரமாச்சு, புறப்படுனு நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ விளையாடிக்கொண்டே இருக்கின்றாயே” என்று திட்டிக்கொண்டே அந்த குழந்தைக்கு முகம் கழுவி, தலைவாரி, பவுடர் பூசி அலங்கரிப்பார். ஆனாலும் சந்தோசமற்ற அந்த குழந்தையின் முகத்தில் அந்த ஒப்பனைகளால் எந்த வித அலகும் தோண்றிவிடாது மேலும் அசிங்கமாகத்தான் இருக்கும். அதுபோன்ற வலுக்கட்டாயமான ஒப்பனைகள்தான் இப்போது கோவையில் செய்யப்பட்டுள்ளது. காரண காரியம் புரியாமல் வெறும் அவசரகதியில் செய்யப்பட்ட இந்த ஒப்பனைகளால் கோவை மேலும் அசிங்கம்தான் ஆகுமே தவிர நிரந்தரமாக அழகை பெற்றுவிடாது.

செயல்படுவதில் இரண்டுவகை உண்டு. ஒன்று வெறுமனே செயல்படுவது மற்றொன்று ஆக்கபூர்வமாக செயல்படுவது. கோவையை பொருத்தவரையில் வெறுமனே செயல்பட்டுள்ளார்களே தவிர இது ஆக்கபூர்வமான ஒன்றல்ல, நடைபாதை என்ற பெயரில் வடிவமான கற்கலை வைத்துவிட்டு போயிருக்கிறாகள். சாலை போடுகிறோம் என்ற பெயரில் சரிவுகளை சரிசெய்திருக்கின்றனர். இன்னும் பல இடங்களில் பணிகள் பாதியில் நிற்கிறது அவை முடிக்கப்படுமா அல்லது இத்தோடு மூடப்படுமா என தெரியவில்லை. இவ்வளவு அவசரமாக இந்த பணிகளை செய்ய வேண்டிய அவசியம் என்ன நிதானமாக நிலைத்து நிற்கும் வகையில் பொறுமையாக செய்திருந்தால் பொதுமக்களுக்கு நீண்ட காலம் பயணளித்திருக்குமே! செலவு செய்வது என்று முடிவாகிவிட்ட பிறகு அதை செவ்வனே செய்தி

ருக்கலாமே!

அவ்வளவு அவசரமாக செயல்பட தமிழ் அன்னை என்ன அவசர சிகிச்சை பிரிவிலா அனுமதிக்கப்பட்டிருகிறாள்! மஞ்சள் நீர் மட்டும் தெளித்திருந்தால் மாரியம்மன் பண்டிகைபோல்தான் அமைந்திருக்கும் அந்த ஊர்வலம். ஏதோ பொருட்காட்சிக்கு செல்வதுபோல்தான் பொதுமக்கள் சென்று கொண்டிருக்கிறார்களே தவிர தமிழ் அன்னையை ஆராதிக்கவோ, தமிழை ஆதரிக்கவோ அங்கு யாரும் சென்றதாக தெரியவில்லை. கணல் கக்கும்படி நான்குபேர் பேச, கவிநயமாக நான்குபேர் பேச அதை நான்காயிரம்பேர் உட்கார்ந்து கேட்டுவிடால் தமிழ் வளர்ந்துவிடுமா! ஆங்கிலம்/இந்தி படித்தவனுக்கு இருக்கும் வாழ்வியல் மதிப்பு ஏன் தமிழ் படித்தவனுக்கு இல்லாமல் போய்விட்டது! அதை சரி செய்வதற்காக நாம் என்ன செய்துவிட்டோம். தமிழ் வாழ்வியல் பயன்பாட்டு மொழியாக பரிணாமம் அடையாமல் போனது ஏன்? அதற்காக நாம் என்ன முயற்சி எடுத்தோம்? தமிழில் படித்தால் வாழ்வு தழைக்கும் என்ற நிலயை நாம் அடைய வேண்டாமா? அதை விட்டு விட்டு ஒன்றாக கூடி ஒருவரை ஆராதிப்பதில் தமிழ் வளர்ந்துவிடும் என்று நினைப்பது தவறான முடிவு அல்லவா!

இதற்கான மொத்த செலவு இரண்டாயிரம் கோடி என்று பேசிக்கொள்கிறார்கள். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதைவைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம்! எந்த தாயும் தன்னைவிட தன் பிள்ளைகளுக்குத்தான் முதலிடம் கொடுப்பாள். எனவே தமிழ் அன்னைக்கு செய்த செலவை தமிழர்களுக்காக செய்திருந்தல், அவர்கள் வாழ்வை வளமைப்படுத்திருந்தால் தமிழ் அன்னை கோபித்துக்கொண்டிருக்கமாட்டாள். இதை எங்கள் ஆட்சியின் சாதனை என்று சொல்லிக்கொள்ளத்தான் பயன்படுமே தவிர அன்னை தமிழுக்கு எந்தவிதத்தில் பயன்பட்டுவிடும்!

தமிழ் வாள் போன்றது ஆங்கிலம் கேடயம் போன்றது என்ற முத்தமிழ் அறிஞருக்கு வாளால் தம் பிள்ளைகளின் வாழ்வு சிறக்கவில்லை, தற்போது அந்த கேடயம் மட்டும் இருந்துவிட்டால் போதும் நம்மை கேள்வி கேட்க ஆளில்லை என்பது புரியாதா. ஆங்கிலம் பேச அவதிப்பட்டு தம் பிள்ளை தப்பி ஓடுகிறான் என்ற அவப்பெயர் அவருக்கு சமீபத்தில் ஏற்பட்டதே அதை அவர் மறந்துவிட்டாரா! அது ஒன்றுபோதாதா தமிழ் அன்னையின் வாழ்வின் தரம் இப்போது எப்படி இருக்கிறது என்று அவரும் நாமும் புரிந்துகொள்ள. சென்றுடுவீர் எட்டுத்திக்கும் என்று பாரதி சொன்னது போல, தமிழ் கற்ற நான் இனி சென்றுடுவேன் எட்டுத்திக்கும் என்று நாம் நம்பிக்கையுடன் சொல்லும் காலம் எப்போது வருமோ/வரவைக்கின்றோமோ அப்போதுதான் தமிழ் சிறக்கும், செழிக்கும். அப்படியில்லாமல் செய்யப்படும் மற்ற அனைத்து செயல்பாடுகளும் எப்படிப்பட்டதெனில் – ”நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், சென்ற ஆட்சியிலே………….”

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</