வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -5

பி.ஜி.எஸ். மணியன்  

“முதலாக" பல சிறப்புகள்.

வார்த்தைகள் - இவற்றுக்கு இருக்கும் சக்தி அளவிட முடியாதவை. ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையையே மாற்றி அவன் தலை எழுத்தையே தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தவை வார்த்தைகள் தான்.

அதுவரை சினிமா என்றால் நடிப்புத்துறை ஒன்றில் மட்டுமே கவனம் வைத்திருந்த வெங்கட்ராமனுக்கு தனக்குள் ஒளிந்திருந்த இசைத் திறமையாலும் திரைப்படத்துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி ஒரு புது உத்வேகத்தை அவருக்குள் ஏற்படுத்தியது ஏ.வி.எம். அவர்கள் சொன்ன வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் அவரை ஒரு இசை அமைப்பாளராக மாற்றி வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தின.

மிகவும் சாதாரணமாகத்தான் ஏ.வி.எம். அவர்கள் "நீயே இசை அமைத்துவிடேன்" என்று சொன்னார். ஆனால் அந்த வார்த்தைகள் வெங்கட்ராமனுக்குள் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது.

"சட்" என்று அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு நொடிப்பொழுதும் தயங்காமல் - ஒரு இசை அமைப்பாளராக - தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குள் நுழைந்தார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

"நந்தகுமார்" - 1938 ஆம் வருடம் திரு. ஏ.வி.எம் அவர்கள் கேசவ் ராவ் தைபர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்திலால் தாகூர் ஆகியோருடன் இணைந்து கூட்டாக தயாரித்த திரைப்படம் இது.

தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த எஸ்.வி. வெங்கட்ராமனை நினைத்த நினைப்பில்லாமல் இசை அமைப்பாளராக்கி அவருக்கு ஒரு முன்னேற்றப் பாதையை அமைத்துக் கொடுத்த படம் இது.

இந்தப் படத்தின் படப் பிடிப்புக்காக புனே செல்வதற்கு முன்னால் - பெங்களூரில் இருந்தபோது - ஒரு நாள் கோலார் தங்க வயலில் நடந்த ஒரு ஸ்பெஷல் நாடகத்தை பார்க்கச் சென்றார் வெங்கட்ராமன்.

அந்த நாடகத்தில் துடிப்பாக ஹார்மோனியம் வாசித்த வாலிபனின் அபார இசை ஞானத்தால் கவரப்பட்ட எஸ்.வி. வெங்கட்ராமன் மறு யோசனை எதுவும் இல்லாமல் அவனைத் தனது உதவியாளராக்கிக் கொண்டார். அந்த வாலிபன் தான் பின்னாளில் "திரை இசைத் திலகம்" என்று பெரும் புகழ் பெற்ற திரு. கே.வி. மகாதேவன் அவர்கள். (சில படங்கள் வெங்கட்ராமனுடன் பணியாற்றிவிட்டு பிறகு அவரை விட்டு விலகி டி.ஒ. சுப்பாராவ் அவர்களிடம் உதவியாளராக கே.வி. மகாதேவன் சேர்ந்தது வேறு விஷயம்.)

"நந்தகுமார்" - தலைப்பைக் கேட்டதும் சமூகப் படம் என்று தோன்றுகிறது அல்லவா? உண்மையில் இது ஒரு புராணப் படம்.. ஆயர்பாடியில் நந்தகோபனின் மகனாக வளர்ந்த கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிய படம் இது.

யசோதையாக டி. பி. ராஜலக்ஷ்மியும், நந்தகோபனாக சி.வி.வி.பந்துலுவும் ராதையாக டி.எஸ்.ராஜலக்ஷ்மியும்
நடித்தனர். கண்ணனாக அப்போது பாய்ஸ் நாடகக் கம்பெனியில் பாடும் திறமையால் பிரபலமாகி இருந்த பதிமூன்று வயதுச் சிறுவன் டி. ஆர். மகாலிங்கம் அறிமுகமானார்.

ஆம். "பாடும் நட்சத்திரம்" என்று புகழப்பட்ட டி.ஆர். மகாலிங்கம் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமான - முதல் படம் இது. அவருக்கு மட்டும் அல்ல. நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் அவர்களுக்கும் முதல் படம் இதுதான்.

ஒரு இசையமைப்பாளராக எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு அமைந்த முதல் படம் தான் கதாநாயக நடிகருக்கும், நகைச்சுவை நடிகருக்கும் முதல் படமாக அமைந்தது. எஸ்.வி. வெங்கட்ராமன் இசையமைத்த "யுக தர்ம முறையே" என்று ஆரம்பிக்கும் பாடலைப் பாடிக்கொண்டு தான் படத்தில் டி.ஆர். மகாலிங்கம் அறிமுகமாவார்.

இன்னொரு "முதல்" சிறப்பும் "நந்தகுமாரு"க்கு உண்டு. படத்தில் தேவகியாக நடித்த நடிகை சொந்தக் குரலில் பாடிய பாடல் திருப்திகரமாக அமையவில்லை. அப்போதுதான் திரு. ஏ.வி.எம் அவர்களுக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.

"சரியாகப் பாட வராத நடிகையை பாடச் சொல்லி பாடாய்ப் படுத்துவதற்கு பதிலாக இன்னொருவரை அவருக்காக பாடவைத்து அந்தப் பாட்டுக்கு இவரை வாயசைக்க வைத்து எடுத்தால் என்ன?"

யோசனையை செயலாக்க ஆரம்பித்தார் ஏ.வி.எம். அவர்கள். அப்போது பம்பாயில் பிரபல கர்நாடக இசைப் பாடகியாக இருந்த லலிதா வெங்கட்ராமன் என்ற பாடகியை "தேவகி"க்காக பாடவைத்தார் அவர்.

இப்படி முதல் முறையாக தமிழ்த் திரை உலகில்- அல்ல அல்ல- தென்னிந்திய திரைப்பட வரலாற்றிலேயே "பின்னணி" பாடும் முறையை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் திரு. ஏ.வி.எம்.அவர்கள்தான்.

இந்த முறையில் பதிவான பாடலுக்கு இசை அமைத்த முதல் இசை அமைப்பாளர் என்ற பெருமை எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு கிடைத்தது. அவரது இசை அமைப்பில் பாடிய லலிதா வெங்கட்ராமன்தான்
தென்னிந்திய சினிமாவின் முதல் பின்னணிப் பாடகி.

(துரதிர்ஷ்டவசமாக இப்படத்தின் ஒரே ஒரு பாடலின் ஒலிநாடா கூட தற்போது புழக்கத்தில் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். தென்னிந்திய சினிமாவின் முதல் பின்னணிப் பாடகியின் குரல் வளமும் இனிமையும் பொக்கிஷமாக கருதப்படாமல் காலச்சுவடுகளால் மறைக்கப் பட்டுவிட்டது. மறக்கப்பட்டும் விட்டது. மேலை நாடுகளில் இப்படிப்பட்ட “முதல்” சாதனைகள் ஆவணங்களாகப் பாதுகாக்கப் படுகின்றன என்பதை நினைக்கும் போது வேதனைப் பெருமூச்சுதான் வருகிறது.)

இத்தனை சிறப்புகள் இருந்தும் நந்தகுமார் படம் தோல்வி அடைந்தது. "படம் நன்றாக இருக்கிறது என்றுதான் ஜனங்கள் பேசிக்கொண்டார்கள்" என்று நந்தகுமார் படத்தைப் பற்றி திரு. ஏ.வி.எம். அவர்கள் குறிப்பிடுகிறார். என்றாலும் படத்தின் பாடல்கள் பிரபலம் அடைந்தன.

படம் தோல்வி அடைந்தாலும் மனம் துவண்டுவிடாத ஏ.வி.எம். தன முயற்சியில் சற்றும் மனம் தளராமல் படத் தயாரிப்பைத் தொடர்ந்தார். அடுத்து எடுத்த "பூ கைலாஸ்" (தெலுங்கு), "வாயாடி", ":போலி பாஞ்சாலி" ஆகிய படங்களுக்கும் எஸ்.வி. வெங்கட்ராமன் இசை அமைத்தார். அந்தச் சமயத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக எஸ்.வி. வெங்கட்ராமனுக்கும் திரு. ஏ.வி.எம். அவர்களுக்கும் இடையில் நிலவிய நட்பில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவர் ஏ.வி.எம். நிறுவனத்தை விட்டு விலக நேர்ந்தது.

அப்போது அவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்திருந்த நேரம். அடுத்து என்ன செய்வது என்று அவர் யோசித்துக்கொண்டிருந்த அந்த வேளையில் நடிகை கண்ணாம்பாவின் கணவர் திரு. நாகபூஷணம் அவர்கள் எஸ்.வி. வெங்கட்ராமனைத் தேடி வந்து கண்ணாம்பா நடித்த "தல்லி பிரேமா" என்ற தெலுங்குப் படத்துக்கு அமைக்கும் வாய்ப்பை அளித்தார். படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்று பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆயின.

அந்த வெற்றி அவருக்கு அடுத்தாற்போல கண்ணாம்பாவும் பி.யு. சின்னப்பாவும் இணைந்து நடிக்கவிருந்த"ஜுபிடர்" நிறுவனத்தின் புதிய தமிழ்ப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை அளித்தது.

ஒரு திருப்புமுனையாக அமைந்த அந்த வாய்ப்பு எஸ்..வி. வெங்கட்ராமனை ஒரே தூக்காக தூக்கி வெற்றிச் சிகரத்தின் உச்சியிலேயே உட்கார்த்தி வைத்தது.

அந்தப் படம் தான் "கண்ணகி".

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</