வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 7

சக்தி ஜோதி  

ஷெங்ஷாங் கிராமத்தில் உள்ள பொருட்காட்சி மையத்தில் கியூஷோ மக்களின் கலாச்சாரம் பற்றி கூறினார்கள். அங்கு அவர்களின் பாரம்பரிய உடைகளும், பயன்படுத்திய மரத்தாலான டீ கப், ஆட்டு உரல் போன்ற வீட்டு உபயோகப்பொட்களும், இசைக் கருவிகளும், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

சீனாவின் பழமைக்கேற்ப பழங்குடி இனங்களும் அவர்களின் கலாச்சாரமும் இன்னமும் சீனாவை விட்டு அகலவில்லை என்பதற்கு க்யூசோ மாகாணத்தில் நாங்கள் பார்த்த வீடுகளும் அவற்றின் அமைப்பும் மனிதர்களும் அவர்களின் உடைகளும் பழக்க வழக்கங்களும் சாட்சியாய் அமைந்திருந்தன. பாரம்பரிய உடைகளான கோணி சாக்கு வடிவத்தில் கவுன் அணிந்து கை மற்றும் காலர் இல்லாத உல்லன் ஜாக்கெட் அணிந்து கொள்வது, தொப்பி வைத்துக் கொள்வது போன்றவை ஆண்களுக்கும், பெண்கள் அழுத்தமான வண்ண உடைகளில் எம்பிராய்ட்ரி வேலைப்பாடுகளால் நிறைந்த கவுன் போன்ற உடைகளும் மேலும் வெள்ளி ஆபரணங்கள் அணிந்து கொள்வதும் வழக்கத்தில் உள்ளது. எம்பிராய்ட்ரி வேலைப்பாடு நிறைந்த யுன்யுன் எனப்படும் காலணிகளை பெண்கள் தாங்களே தயாரித்து அணிந்து கொள்கின்றனர்.
சைனீஸ் மொழி என்று சொன்னாலும் அது ஒன்று அல்ல. சீனா முழுவதும் வட்டார வழக்கு பின்பற்றப்படுகிறது. ஒரு மாகாணத்து மொழியை இன்னொரு மாகாணத்தில் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது. கியூஸோ பகுதியில் வாழும் பழங்குடியினர் பேசும் மொழி சைனீஸ் திபெத்யன் வகையைச் சேர்ந்தது.

கியூஸோ மாகாணத்தில் அநேகமாக மேகங்கள் சூழ்ந்த மலைப்பகுதியில் கிராமங்கள் அமைந்திருக்கிறது. இது பார்ப்பதற்கு மேகத்தில் கிராமங்கள் மிதப்பது போல இருக்கிறது. தொகுப்பு வீடுகள் போலவும் கோபுரங்கள் போலவும் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. குயாங் கண்காணிப்பு கோபுர வகை கட்டிடங்கள் குயாங்லாங் என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டிடங்கள் பத்து மீட்டர்
முதல் முப்பது மீட்டர் உயரம் வரையிலும் அறுங்கோண அல்லது எண்கோண அமைப்பிலும் கருப்பு மற்றும் சாம்பல் வண்ண கற்களால் கட்டப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான அற்புதமாக இந்த வகை கட்டிடக்கலை இன்றும் அப்படியே போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. கட்டிட வரலாற்றில் சிறப்பான இந்த வகை கட்டிடங்களின் கீழ்த்தளத்தில் குடியிருப்புப் பகுதியாகவும், மேல் பகுதி தானியங்கள், விறகு இவற்றைப் பாதுகாப்பதற்காகவும், எதிரிகளை கண்காணிப்பதற்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

குயாங் கலாச்சாரத்தில் திருமணம், முதல் நிலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியும், இரண்டாம் நிலையில் திருமண நிகழ்ச்சியும் என இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது. பொருத்தம் பார்ப்பது, மாப்பிள்ளை வீட்டாரை மகிழ்விப்பது, திருமணத் தேதி குறிப்பது, விருந்துடன் கூடிய மலர் கொண்டட்டம் இறுதியாக நன்றி கூறும் விருந்து நிகழ்ச்சி என ஐந்து நாட்கள் திருமண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சிவப்பு வண்ண உடையணிந்து ஒயின் பரிமாறி திருமணத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இவ்வாறு கிராமப்புற பாரம்பரிய கலாச்சாரங்களை பற்றி விவாதித்துக் கொண்டே நாங்கள் சென்ற இடம் ஸாங்லாங் ஹோப் ஆரம்பப்பள்ளி. மலைவாழ் பகுதி மற்றும் கிராமங்களில் வாழும் பள்ளிக்குச் செல்ல வசதியில்லாமல் இடை நின்ற பள்ளி மாணவர்களுக்கான ஆரம்பப்பள்ளி இது. கல்விக்காக இந்த குழந்தைகள் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வருகிறார்கள்.
நாங்கள் மொத்தபேரும் பள்ளியில் நுழைந்ததும் வெட்கமும், சிரிப்புமாய் எங்களை பார்த்தார்கள்.

சீனக் குழந்தைகளுக்கு நாங்கள் இந்திய கிராமபுற விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்து விளையாடி, நடனம் கற்றுக் கொடுத்து மகிழ்ந்தோம். குஷ்புகுமாரி, அகம்அரோரா என்ற இந்திய மாணவர்களின் நடனம் அந்தக் குழந்தைகளை மிகவம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த குஷ்புகுமாரியின் கண்கள் பார்ப்பதற்கு சந்திரமுகி ஜோதிகாவின் கண்களை நினைவுபடுத்துவதாக பெருமையோடு கூறிக்கொள்வார். சிவாஜி தமிழ் திரைப்படத்தினை சிலாகித்து அனைவரிடம் கூறுவார்.

மிகப்பெரிய பரப்பளவும், அதிக மக்கள் தொகையும் கொண்ட சீனா ஏற்றத் தாழ்வான பொருளாதார நிலையை சமன்செய்ய இந்த மாதிரியான பள்ளிகளை முறைப்படுத்தி நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளியிலிருந்து நாங்கள் கிளம்பும் போது இந்திய முறையில் வணக்கம் கூறி அந்தக் குழந்தைகள் வழியனுப்பி வைத்தார்கள். பசுமை சூழ்ந்த மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த ஆரம்பப் கல்விக்கூடமும், அந்தக் குழந்தைகளும் எனக்கு நான் நடத்திக் கொண்டிருக்கும் மலைவாழ் குழந்தைகளுக்கான பகல் நேர குழந்தைகள் காப்பகத்தை நினைவூட்டியது. அரசின் திட்டங்களை பெற இயலாமல் இருக்கும் குழந்தைகளுக்காக இன்னும் வேலை செய்ய வேண்டும் என்ற எனது எண்ணத்தை வலுப்படுத்தியது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.