வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 23

சக்தி ஜோதி  

ஒளிரும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கடைகள் நிரம்பிய நான்ஜிங் ரோடு ஷாப்பிங் விருப்பமே இல்லாதவரையும் ஈர்த்து பொருள்களை வாங்க வைத்து விடும் விதமாக அமைந்திருந்தது. ஷாங்காய் சென்ற எவரும் நான்ஜிங் ரோட்டிற்குள் நுழையாமல் வந்தால் அவர் ஷாங்காய் போனதாக சொல்லிக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு ஷாங்காய் என்றாலே நான்ஜிங் ரோடு என்பது முக்கியத்துவம் பெற்ற சுற்றுலா தளமாக அமைந்திருக்கிறது. கல்வி சுற்றுலாவோ, கலாச்சார சுற்றுலாவோ எதுவாக இருந்தாலும் அந்த பயணத்தை நிறைவு செய்வது ஷாப்பிங் தான். நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான நான்ஜிங் ரோடு ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் நீளமுடையது. வர்த்தக தளமான கிழக்கு நான்ஜிங் ரோடு ஹாங்ஃபூ மாவட்டத்திலும், ஐரோப்பிய நாகரீகம் நிரம்பிய மேற்கு நான்ஜிங் ரோடு ஜிங்யான் மாவட்டத்திலும் இருக்கிறது. ஷிஜாங் என்ற ரோட்டினால் கிழக்கு, மேற்கு என இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. 1851ல் பார்க் லேண்ட் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி நான்கிங் ரோடு என்று அழைக்கப்பட்டு நான்ஜிங் ரோடு ஆகியது.

உலகளவில் நவீன நாகரீகத்தை விரும்பக்கூடியவர்கள். புதிய கண்டுபிடிப்புகளை வாங்கக்கூடியவர்கள் விரும்பும் பகுதி கிழக்கு நான்ஜிங் ரோடு. இந்த கிழக்குப் பகுதியில் மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள் நிரம்பியுள்ளன. வீட்டு உபயோகப்பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்கள், புகைப்படக் கருவிகள், உடற்பயிற்சி சாதனங்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள் நகைகள், கடிகாரங்கள், கண்ணாடிகள், புத்தகம், மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப் பொருட்கள் அப்பா… இன்னும் எதைச் சொல்ல?

சைனீஸ் கலைப்பொருட்கள் வாங்க வேண்டுமா? சைனா சில்க்ஸ், பெயிண்டிங், பாரம்பரிய சீன மருந்து வகைகள், நினைவுப் பரிசுகள் என குவிந்து கிடக்கின்றன.

பசியா? சோபிட்டல் ஹைலேண்ட ஹோட்டல், ஈஸ்ட் ஆசியா ஹோட்டல், பீஸ் ஹோட்டல், ராமடா ஹோட்டல் என போதுமான அளவிற்கு ஹோட்டல்கள் நிரம்பியிருக்கிறது. அநேகமான கடைகள் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ஷாங்காய் லாஜீஃபூ பல்பொருள் அங்காடி 1860ல் துவங்கப்பட்டு சைனா சில்க்ஸ், கிரேப் சில்க்ஸ், சார்ஜெட், சாட்டின் என பல்வேறு வகையான துணிகளில் செய்த ஆயத்த ஆடைகளை விற்பனை செய்கிறார்கள்.

ஆட்மர்ஸ் பிகாட், ரோலக்ஸ், டுடார், ஒமேகா, ரேடோ, லாங்கின்ஸ், சீமா, ஒல்மா, சீகோ மற்றும் சிட்டிசன் என குவிந்து கிடக்கும் கடிகார வகைகள் நிரம்பிய ஷெங் டா லி வாட்ச் கடை 1864ல் துவங்கப்பட்டதாம்.

லா ஃபெங் ஷியாங் என்ற நகைக்கடை 1848ல் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. நூற்றி ஐம்பது ஆண்டுகளாக எந்த தடைகளும் இன்றி புதிய, புதிய நகைகளை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. சீனா முழுவதும் முந்நூறு கிளைகள் வரை இருக்கிறதாம். கடைக்குள் நுழைந்து பார்த்தால் தென் இந்தியப் பெண்கள் அணிவது போல பெரிய, பெரிய நகைகளும், மதுரைப் பக்கத்து ஆண்கள் அணிவது போல பெரிய, பெரிய மோதிரங்களும் நிறைந்து இருந்ததை பார்த்த போது இந்த நகைகள் எல்லாம் யாருக்காக செய்து இருக்கிறார்கள் என்று யோசிக்க வைத்தது.

ஆடம்பரமான ஷாப்பிங் செய்ய மேற்கு நான்ஜிங் ரோட்டை தேர்ந்தெடுக்கிறர்கள். இந்தப் பகுதி கோல்டன் ஷாப்பிங் பகுதியாக கருதப்படுகிறது. இங்கும் கிழக்கு நான்ஜிங் ரோட்டைப் போலவே இரண்டு பக்கமும் எண்ணற்ற கடைகள் உள்ளது. இங்கே உள்ள வுலியாஞ்சிக்கல் ஆப்டிகல் 1719ல் ஆரம்பிக்கப்பட்டதாம். அதே போல ஸ்வாரோவ்ஸ்கி என்ற கடை மெஷின் பயன்படுத்தாமல் கைகளினால் வெட்டி உருவாக்கப்படுகிற கிறிஸ்டல் கற்களை விற்பனை செய்கிறது. இந்தக் கடையும் நூறு ஆண்டுகள் பழமையானது.

நடந்து, நடந்து களைப்பா? 1999 முதல் இந்த நான்ஜிங் ரோட்டில் 28 மீட்டர் அகலமும், 1200 மீட்டர் நீளமும் நடைபாதையாக அங்கிகரீக்கப்பட்டுள்ள கனரக வாகனங்கள் எதுவும் செல்லாத நடைபாதை பகுதியில் அமைந்துள்ள ஒய்வு விடுதிகளும், ஓய்வு அறைகளும், நடைபாதை ஓர கிரானைட் கற்களால் ஆன அமரும் மேடைகளும் களைப்பை நீக்கக் காத்திருக்கிறது. நிரம்பிய மக்கள் நடமாட்டம் உள்ள அந்தப் பகுதியில் ஒரு நாள் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்களாம். நான்ஜிங் ரோட்டில் ஓய்வு எடுப்பவர்களும், நடந்து செல்பவர்களும் கவனமாக குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவதால் நெருக்கடியான சுறுசுறுப்பான அந்த பாதை எங்கும் அத்தனை சுத்தம்.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</