வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 13

சக்தி ஜோதி  

“பசியுடன் இருப்பவனுக்கு ஒருவேளை மீனைக் கொடு. பின்பு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு” என்பது புகழ்பெற்ற சீனப் பழமொழி. உழைப்பின் பலனை மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் சீனாவில் கிவிங் லிங் பார்க் வாசலில் நான் பார்த்த இரண்டு பிச்சைக்காரர்கள் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்கள். வழக்கமாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு போகும் அனைவரையும் போல சீனா போன்ற வளரும் நாடுகளில் பிச்சைகாரர்களே இருக்கமாட்டார்கள் என்பது என்னுடைய எண்ணம்.

இந்தியக் கலாச்சாரத்தில் பிச்சைக்காரர்களுக்கு பணம் தருவது என்பது தர்மம் சார்ந்த விஷயமாக கருதப்படுகிறது. பிச்சைக்காரர்கள் மீது இயல்பாகவே பரிவு ஏற்படுகிறது. கோவில்களுக்கு செல்பவர்கள் கூட தாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பிச்சையிடுவதையும், வேண்டுதலை நிறைவேற்றிய கடவுளுக்கு நன்றி கூறும் முகமாக அன்னதானம் தருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். எனவே பிச்சைக்காரர்கள் பற்றிய சீனர்களின் மனநிலையை பற்றி அறிந்துக் கொள்ள, சீனாவில் எப்படி பிச்சைக்காரர்களை அனுமதிக்கிறீர்கள் என்று மயோவிடம் கேட்டேன். அதற்கு அவர், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் உழைப்பதற்காகவே பிறந்தவர்கள் என்கிற எண்ணம் எங்களுக்கு இளம் வயதிலேயே பழக்கப்படுத்தப்பட்டுவிடுகிறது.

இங்கே பிச்சை எடுப்பது என்பது மிகவும் தவறான ஒரு விஷயம். உடல் ஆரோக்கியமான யாரும் பிச்சை எடுப்பதில்லை. அப்படியே யாராவது பிச்சையெடுத்தால் அவர்களை பிச்சை கொடுப்பவர்களே கடுமையாக திட்டி அவமதித்து பேசுவார்கள். அடுத்ததாக அவர்களுக்கு பிச்சை தர மாட்டார்கள். பூங்கா வாசலில் நாம் காணும் இவர்களைப் போல தொழு நோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்றவர்களைக் கூட கடுமையாகப் பேசி நோய்க்கு மருத்துவம் பார்க்க அனுப்பி வைப்பது வழக்கம் என்று கூறினார். அவர்கள் மீது இரக்கம் காட்டுவதன் மூலம் சோம்பேறிகளாக ஆக்கிவிட கூடாது என்று நினைக்கிறார்கள். நோயாளிகளுக்கு பிச்சையிட்டு பரிவு காட்டுவது என்பது நோய்க்கான தீர்வு ஆகாது என்கிறார்கள்.

பூங்கா வாசலில் மெயின் ரோடு வரை நெருக்கமாக அமைந்த சாலை ஓரத்து கடைகள் எங்களை கவர்ந்தன. கல்லூரிகளுக்கும், சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்களுக்கும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியினை எங்களது நிறுவனத்தின் மூலமாக வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதுவரை சுமார் நாற்பதாயிரம் பெண்களுக்கு பயிற்சி அளித்திருந்தாலும் 50சதவீதம் பெண்களையே தொழில் முனைவோராக உருவாக்கியிருக்கிறோம். இன்னும் பல பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில் நடைபாதை உணவு விடுதிகளில் சமையல்காரர்களாகவும், பரிமாறுபவர்களாகவும், குளிருட்டப்பட்ட மட்டன் கடைகளில் விற்பனையாளர்களாகவும் முழுவதும் பெண்களாகவே இருந்தது என்னை மிகவும் கவர்ந்தது.

கியூஷோ நகரத்தின் சமையல் முறை என்பது சீனாவிலேயே மிகவும் சிறப்பான சமையல் முறை என்று நான் அறிந்து வைத்திருந்தேன். எனவே நாங்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் உணவு வகைகளுக்கும், நடைபாதைக் கடை உணவு வகைகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று கேட்டேன். உண்மையான சீன உணவு வகைகளை இந்த மாதிரியான கடைகளில் சாப்பிடுவது என்பது சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒரு விஷயம் என்று மயோ கூறினார்.

இந்தியாவில் விவசாயிகள் மொத்த விற்பனைக்கு விவசாய விளை பொருட்களை அனுப்பியது போக மீதமுள்ளவற்றை வீட்டு வாசலில் வைத்து சில்லறை விற்பனை செய்வது என்பது காலம் காலமாக நம்மிடையே உள்ள பழக்கம். அதைப்போல சீனாவில் விவசாயிகள்தான் முதன் முதலாக நடைபாதை உணவு விடுதிகளை ஆரம்பித்தவர்கள். தங்கள் நிலத்தில் விளைந்த விவசாயப் பொருட்களை மொத்தமாக விற்பனைக்கு அனுப்பியது போக மீதமுள்ளவற்றை வைத்து வீட்டு வாசலில் இந்த மாதிரியான நடைபாதைக் கடைகளை ஆரம்பித்தார்கள். நாளடைவில் உணவு விடுதியாகவும் மாற்றம் பெற்றது. நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பவர்கள் கூட அருகே உள்ள நடைபாதை உணவு விடுதிக்கு வந்து உணவு உண்டு செல்வது வழக்கம். 75 யுவானுக்கு (சுமார் ரூபாய் 525/- ) இரண்டு பேர் திருப்தியாக சாப்பிடலாம். ஆனால் அதுவே நட்சத்திர ஹோட்டலில் ஐந்து மடங்கிற்கு மேல் செலவாகும்.

மதுரையில் மல்லிகை இட்லி என்பது போல கியூஷோவின் சிறப்பு பிகி டம்ப்ளிங்ஸ் மற்றும் லவ் பீன் கர்ட் என்பது தான். ஓட்டும் தன்மையுள்ள ஒரு வகை அரிசி மாவில் கொழுக்கட்டை போல முள்ளங்கி, வெள்ளரிக்காய், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை உள்ளே வைத்து செய்யப்பட்ட ஒரு உணவு வகை தான் பிகி டம்ப்ளிங்ஸ். இதில் பன்றி இறைச்சி உள்ளே வைத்து செய்த அசைவ உணவு வகையும் உள்ளது. பிகி டம்ப்ளிங்ஸை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை வேடிக்கை பார்த்துக் கொண்டு சைவ பிகி டம்ப்ளிங்ஸை நாங்களும் சாப்பிட்டோம்.

பிக்கிங்கீஸ் வகை நாய்க்குட்டிகளை சாலையோரங்களில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். சுனில் குமார் உடனே சென்று நாய் விற்பவரிடம் பேரம் பேச ஆரம்பித்து விட்டார். புகைப்படம் எடுப்பதற்கு பத்து யுவான் என்றும் நாய்க்குட்டிக்கு 2,500 யுவான் என்றும் விலையைக் கூறியவுடன் சுனில் எழுந்து ஓடி வந்து விட்டார். நான் அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்து விட்டேன்.நாய்கள் வளர்ப்பு என்பது ஆரம்ப காலங்களில் மனிதர்களுக்கு உதவியாக வேட்டையாடுவதற்காக பழக்கப்படுத்தப்பட்டது. பின்னர் வேலை செய்வதற்காக பழக்கப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் காவல் காப்பதற்காக பழக்கப்படுத்தப்பட்டது. ஆனால் பிக்கிங்கீஸ் போன்ற நாய்க்குட்டிகள் மடியில் வைத்து கொஞ்சுவதற்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. சீனாவில் புத்திசம் இல்லையென்றால் பிக்கிங்கீஸ் நாய் வகையே இல்லை என்று சொல்லலாம். மனிதனை நேசிக்கச் சொல்லும் உயிர்ப்புள்ள புத்த மதத்திற்கு அடையாளமாக பிக்கிங்கீஸ் இருக்கிறது. அந்த அளவிற்கு அழகான அன்பிற்கும் மேன்மைக்கும் அடையாளமாக பிக்கிங்கீஸ் கருதப்படுகிறது.

சிங்கத்தின் மீதான ஈர்ப்பு உலகம் முழுவதுமே இருக்கிறது. ஏனென்றால் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் மட்டுமே காணப்படுகிற மிகவும் அரிதான வகை இது. கூடி வாழும் பண்புள்ள ஒரு காட்டு விலங்கு. இதற்கு எதிரி என்பதே கிடையாது மனிதனைத் தவிர. கூட்டமாக வாழும் சிங்கம் மிகப்பெரிய யானையை கூட வீழ்த்தும் வலிமையுடையது. தாய்மைப் பண்பு மிகச் சிறப்பாக உள்ள ஒரு விலங்கு சிங்கம். ஒரு கும்பலில் உள்ள எந்த குட்டிக்கும் ஒரு தாய் சிங்கம் பாலூட்டும், பராமரிக்கும். அதே போல வயதான தாய் சிங்கங்களை கும்பலில் உள்ள எந்தக் குட்டிகளும் பராமரித்துக் கொள்ளும். இந்தியாவில் பல கோயில்களில் சிங்கம் கடவுளின் வாகனமாகவும், காவல் தெய்வமாகவும் கூட மதிக்கப்படுகிறது. இதே போல சீனாவிலும் பல்வேறு கோயில்களிலும், மிகப்பெரிய கட்டிடங்களின் முகப்புகளிலும் சிங்கத்தின் சிலைகள் மற்றும் உருவப்படங்களைப் பதித்துள்ளனர்.

தாய்மைப் பண்போடு தன் கூட்டத்தைப் பாதுகாக்கும் சிங்கத்தை மதிப்பது என்பது சீனாவில் மிகவும் கௌரவமான விஷயமாக கருதப்பபடுகிறது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிங்கம் என்பது சீனாவின் பெருமைக்குரிய அடையாளம். ஆனால் சீனாவில் சிங்கம் இல்லை. வீடுகளிலும் வளர்க்க முடியாது. எனவே சின்ன சிங்கம் போல தோற்றமுடைய பிக்கிங்கீஸ் வகை நாய்கள், டேங் அரச வம்சத்தினரால் கி.பி.700 முதல் 1000 ஆண்டு வரை சிங்கம் போலவே மதிக்கப்பட்டது. இந்த வகை நாய்களை அவர்களது அரண்மனையில் வைத்திருப்பது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. பின்னால் சீனா முழுவதும் பிக்கிங்கீஸ் வளர்ப்பது பரவியது. குறிப்பாக மஞ்ச்;சு வம்சத்தினர் பிக்கிங்கீஸ் நாய்க்குட்டிகளுக்கு தனியாக வீடு, அதற்கென பிரத்யேகமாக எம்பிராய்ட்ரி செய்த விலை உயர்ந்த பட்டு உடைகள், தங்கத்தாலான நகைகள், அதனை கவனிப்பதற்கு பயிற்சி பெற்ற வேலைக்காரர்கள் என தனி மரியாதையோடு கவனித்தனர். பயிற்சி பெற்ற அரவாணியரை வைத்து பிக்கிங்கீஸ்களுக்கு மஸாஜ் செய்தனர். இன்றைக்கு உலகம் முழுவதும் பிக்கிங்கீஸ் வகை பரவியுள்ளது. 1909ல் இருந்து அமெரிக்காவில் பிக்கிங்கீஸ்களுக்கென தனி கிளப் ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுவதுமே பிக்கிங்கீஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருபதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை பிக்கிங்கீஸ் நாய்குட்டிகள் விற்கப்படுகிறது என்கிற தகவல்களோடு சாலையோரத்தில் வாங்கிய சீனத் திரைப்பட குறுந்தகடுகளோடு நாங்கள் விடை பெறுவதற்கான நேரம் நெருங்கியதை உணர்ந்தோம்.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸிற்கு சென்று பொம்மைகள் வாங்கி ஜெர்ரிக்கு பரிசளித்தேன். ஜெர்ரி என் மகள் காவியாவுடன் தொலைபேசியில் பேசினான். சீனப் பாடல் குறுந்தகடு மற்றும் பொம்மைகள் வாங்கி எனக்கும் காவியாவிற்கும் ஜெர்ரியின் குடும்பம் பரிசளித்தது. சாலையோர உணவு விடுதியில் இரவு உணவிற்காக சென்ற போது ராஜஸ்தானைச் சேர்ந்த எப்போதும் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் அகம் அரோராவும் அவருடைய குடும்பத்துடன் அங்கு வந்திருந்தார். உணவு விடுதியில் நடனம் ஆடிக்கொண்டிருந்த அகம் அரோராவோடு மயோ புகைப்படம் எடுத்துக் கொண்டார். இரவு நேரத்தில் தூங்கா நகரம் போல செயல்படுகிற கியூஷோ மிக அழகாக இருந்தது.

கியூஷோ நகரத்திற்குள் பயணம் செய்ய டாக்ஸியை விட மினிபஸ் சிறந்தது. இரவு 1.00 மணி வரையிலும் 1.2 யுவானுக்கு மினி பஸ் இயக்கப்படுகிறது என்றாலும் டாக்ஸியில் பிரிவின் இடைவெளியை நிரப்பிவியலாமல் புதிய சிநேகிதத்தின் பரிமாற்றத்தை எடுத்துக் கொண்டு கனத்த இதயத்தோடு நாங்கள் தங்கியிருந்த கியூஷோ பார்க் ஹோட்டலுக்கு திரும்பினோம். இரவு பத்து மணிக்கு கண்ணீர் நிரம்பிய அந்த சீனக் குடும்பம் உறவுக்கும், நேசத்திற்கும் மதமும், இனமும், மொழியும் ஒரு தடையில்லை என்பதை உணர்த்தியது. நிறைய இடைவெளிகள் இருப்பதாக நாம் நினைத்து தயங்கி எதிர்நோக்குகிற தேசத்தில் அது வரை பழகியிராத மனித இதயங்கள் நெருங்கி, நெருங்கி வந்து என்னை நெகிழ வைத்தது என் நினைவு அடுக்குகளில் நீங்காமல் இடம் பெற்று விட்டது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.