வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 6

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

மச்சக்காளை பதற்றமாக நின்றுக்கொண்டிருக்கிறது. தன்னருகே அவன் வருவதைப் பார்த்து உடல் இலேசாக நடுங்குகிறது.அவனும் மச்சக்காளை முகத்துக்கு அருகே பா...பா...பா...வென அழைத்துக்கொண்டே செல்ல அதுவும் தன்தலையை மெதுவாக அசைத்து அருகில் வர, அதன் முகத்தை மெதுவாக தொட்டுவிட்டான். மச்சக்காளையும் தன் நாக்கால் அவன் கையை நக்குகிறது... பின்பு அதன் தாடையை தடவிக்கொடுக்கிறான். அதுவும் பயம் தெளிந்து அவனுடன் அன்போடு ஒட்டிக்கொள்கிறது. இப்போது சந்தோஷமாக மெதுவாக அதன் மச்சத்தைத்தொட கையைக்கொண்டு செல்கிறான். சீறிவந்த மச்சக்காளையால் மீண்டும் மாட்டுத்தொழுவத்தைவிட்டு தூக்கி எறியப்படுகிறான். நடுசாமம்... மச்சக்காளை இப்போது குறட்டைவிட்டு தூங்கிவிட்டது.

வழக்கம்போல் அதிகாலையில் வாசலுக்கு சாணம் தெளிக்க, சாணம் எடுக்க தொழுவத்துக்குப்போன சாரதாம்மாள் கட்டுத்தறியில் மாடு இல்லாதது கணடு திடுக்கிடுகிறாள்.

“ ஏங்க... என்னங்க... உங்களதாங்க இங்க வந்துப்பாருங்க... மாட்டக்காணோம்” எனக்குரல் கொடுக்க, தூக்கத்திலிருந்து எழுந்து வந்த சாமிஅய்யா “ என்னடி...என்னடி” என்று பதட்டத்தோடு கேட்கிறான். பின்பு இருவரும் வீட்டின் பின்புறத்துக்கு ஒடினார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி கொஞ்சம் கோபத்தை உண்டாக்கினாலும் வியப்பால் கண்கள் விரிந்தன.
சாமிஅய்யா தன் மனைவியிடம்” சாமிஅய்யா பெத்தப்புள்ள தரிசா போயிடாது” எனசொல்ல “ம்... இந்த தங்கக் கட்டிய சொமந்தது நான்தானே” சாரதாம்மாவும் சொல்ல, இருவரும் சந்தோஷப்படுகிறார்கள்.

செல்லப்பா வயல்வேளை அறியாதவன். எப்போதுமே பொழுதுமுளச்சப் பிறகுதான் படுக்கையைவிட்டு எழுவான். ஒத்தப்பிள்ளைன்னு பத்தரமாத்து தங்கமா வளர்க்கிறாங்க. அப்படிப்பட்டவன் பெத்தவங்களுக்கு முன்னால் எழுந்து, மச்சக்காளையை தைரியமாக அவிழ்த்துக்கொண்டுபோய் மாட்டுத்தொட்டியில் ஊரிக்கொண்டிருந்த பருத்திக்கொட்டையையும் கடலப்புண்ணாக்கையும் தன் கையால் கலக்க, அதை மச்சக்காளை ருசித்துகுடித்துக்கொண்டிருந்த கண்கொள்ளா காட்சியைத்தான் அவர்கள் பார்த்து ரசிக்கிறார்கள்.

சாமிஅய்யா மச்சக்காளையோட கயிற்றை செல்லப்பாவிடம் வாங்கிக்கிட்டு “ நீ போயி நல்லா படிப்பா... இந்த வேலையெல்லாம் ஒனக்கு வேணாம். இதல்லாம் எங்களோட போவட்டும்”...

மாட்டுத்தொட்டியில் விட்ட செல்லப்பாவின் கையை, சாரதாம்மா கொண்டுவந்த தண்ணீரில் கழுவி விட்ட சாமிஅய்யா “இந்த தோட்டம் தொறவு, ஆடுமாடு, ஒழுக்குக்கூட மிச்சப்படாத வெவசாயம்... இது எதுவுமே ஒனக்கு வேணாம்”...

“இப்படி நெனச்சிக்கிட்டு எல்லாருமே இந்த ஊரவிட்டு போயிட்டா நாம எல்லாம் எப்படிப்பா சாப்பிடறது” என செல்லப்பா கேட்க...”

எப்படி கருக்கடையா இருக்கான்னு பாத்தியா எம்புள்ள” என பெருமையா சொல்லிக்கொண்டே செல்லப்பாவை அணைத்துக்கொண்டு தலையை வருடிக்கொடுக்கிறான் சாமிஅய்யா.

“அப்பா என்னதான் டவுன்ல இருக்கற கான்வெண்டுல சேக்கப்போறிங்களே.. அதுவரையில மச்சக்காளைய நான் பாத்துக்கிறனே”

சாமி அய்யாவும் சரின்னு சொல்லிவிட்டான், சாரதாம்மாவும் பெத்தவயிறு குளிர பாசத்தோடு மகனை அணைத்துக் கொள்கிறாள். பெரும்பாலான கிராமத்து மக்கள் சோளக்கூழும் கம்மம்சோறும் மரவள்ளிக்கிழங்கும் சாப்பிட்டுக்கொண்டு அரிசி சாப்பாடு சாப்பிட ஆவலோடு விதை நெல்லை விளம்ப விதைத்த நெற்கள் முளைத்து பரந்துக்கிடக்கும் நிலமெங்கும் பசுமை படர்ந்துகொண்டிருக்கிறது, மேட்டூர் தண்ணீரால் பசுமைப்புரட்சியே நடந்துவிட்டது.

தீபாவளி பண்டிகை வர இன்னும் ஒருசில நாட்களே இருக்கிறது. வெவசாயத்துக்கு கடன் கொடுக்க ஒருபக்கம்னா மறுபக்கம் தீபாவளிக்கு கடன்கொடுக்க வெளங்கொண்டார் அல்லோளப்படுகிறார். கிராமத்துமக்கள் வேர்வையில் வெளையிற வெளச்சல, பண்டிகைக்கு கடன்கொடுக்கிறேன் என்கிற பேரில் ஒண்ணுக்கு பத்தா கொத்திக்கொண்டுபோக கடன்கொடுக்குற கழுகுகூட்டம் முகாம்போடற வேளைதான் இந்த பண்டிகைநாட்கள். கடன் வாங்கும்போதும்சரி, கொடுக்கும்போதும்சரி அந்த சமயத்தில சந்தோஷமா இருப்பவர்கள் கிராமத்து மக்கள்தான்.

வீடுவீடாகச் சென்று கடன்கொடுத்துக்கொண்டு வந்த வெளங்கொண்டார் சாமிஅய்யா வீட்டுக்கு வர, வெளங்கொண்டாரைக் கண்ட சாமிஅய்யா சாரதாம்மாவிடம் குடிப்பதற்கு மோர்கொண்டுவந்து கொடுக்க சொல்ல, மோரை குடித்துக்கொண்டே வெளங்கொண்டார் சாமிஅய்யாவிடம், “ இத நடவு நட வச்சுக்க... இத வச்சு தீபாவளிய ஜாம் ஜாம்னு கொண்டாடு” என்று சொல்லிக்கொண்டே சாமிஅய்யாவின் கையில் பணத்தைத் திணித்துக்கொண்டே,”வட்டியெல்லாம் வேண்டாம்பா வெளஞ்ச பிறகு நெல்லா கொடுத்தா போதும்” எனச் சொல்லி போக... அறுவடைக்குப்பின் நெல்வாங்கும்போது வழக்கமா வெளங்கொண்டார் கொண்டு வருகிற படியால்தான் நெல்லை அளந்துக்கொள்வார். அப்படி அளக்கும்போது அய்ந்து மரக்காபடிக்கு ஒருபடி அதிகமாகவே அளந்து கொள்வார். அது நகரங்களில் வசூலிக்கும் கந்துவட்டியைவிட மோசமானது என்பதை கிராம மக்கள் அறிவது மிகவும் கடினம். அது மிகச்சரியாகக் கொடுத்த கடனைக்காட்டிலும் இரண்டுமடங்கு அதிகம்.

வெளங்கொண்டார் கடன்கொடுக்கும்போது சிரித்தமுகத்துடன், அழுக்குவேட்டி, முண்டா பனியன், தோள்பட்டையில் துவண்டுபோய் கிடக்கும் துண்டுடனும் இருப்பார். ஆனால் கடன் வசூலிக்க வரும்போது கடுகடுத்த முகத்துடனும், வெள்ளைவேட்டி, வெள்ளைச் சட்டை சகிதமாக, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மரக்கா பிடித்து நெல் அளக்கும்போது அவர் அளவுக்கு அதிகமாக அளக்கிறார் என்று அறிந்தும் அவரிடம் பேசாமல் வாய்மூடி கொடுப்பவர்களே அதிகம். இது காலங்காலமாய் விவசாய நிலங்களில் நடந்துவரும் வெங்கொடுமை... ஆண்டான் அடிமை தோன்றியது அய்நிலங்களில் ஒன்றான மருதம் தான் என்பது வரலாறு சொல்லும் உண்மை என்றால் மிகையில்லை....

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</