வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 41

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

வாரணாசி போலீஸ் ஸ்டேசன்ல ஒரே பரபரப்பு, அங்குள்ள I.G, D.I.G எல்லாம் வந்துட்டாங்க. அதுல ரெண்டு போலீஸ்காரங்க குசுகுசுன்னு பேசிக்குறாங்க “பிடிச்சிட்டு வந்திருக்கறது இலங்கை பெண் விடுதலைப்புலின்னு”. அதில் ஒருவன் “பாவம்ப்பா, விடுதலைப்புலின்னு சொன்னவுடனே ஏதோ பயங்கரமா இருப்பாங்கன்னு பார்த்தா? இது ஒரு அப்பாவியான பொண்ணுப்பா!” என்று இருவருக்குள்ளும் பேசிக் கொண்டிருந்தனர். நான்கு அடிக்கு நான்கு அடி இருண்ட அறை உள்ளேயே ஜலம், மலம் கழிக்க வேண்டும். சாப்பாடும் அங்கதான்.

அத நினச்சு யாழி உலகத்துலயே மிகமோசமான நாத்தம் மனிதனோட துர்நாற்றம்தான்னு அவள் அறியப்பட்டாள். யாழி பக்கத்தில் 40வயது மதிக்கத்தக்க தலைவிரி கோலம் பூண்ட ஒரு பெண்ணும் அடைப்பட்டு இருந்தாள். ஜன்னல் வழியாக வர்ற வெளிச்சத்தில் ஒரு பெண்ணை பார்த்து முதல்முறையாக அவளும் பயப்பட்டாள். அவ்வேலையில் நான்கு பெண் போலீஸ் இவள் அடைக்கப் பட்டிருந்த கதவை திறந்து கொண்டு அவளை தரதரவென்று இழுத்துச் சென்றனர். மண்தரையில் இழுத்துச் சென்றபோது மனவலிமையாக இருந்த அவளுக்கு உடம்பெல்லாம், வலி தீயாக பரவியது. அதற்குள் ஒரு அறைக்குள் இழுத்துச் சென்றனர். அங்கு நான்கு பெண் போலீஸ் அதிகாரிகளில் ஒரு தமிழ் பேசும் பெண் போலீஸ் அதிகாரியும் இருந்தாள். இந்தி பேசும் ஒரு அதிகாரி, யாழியை எதற்காக இங்கே வந்தாய் என்று கேட்டபோது, தமிழ் பேசும் அதிகாரி தமிழில் யாழியிடம் திரும்ப அதே கேள்வியை கேட்டபோது யாழி “நிம்மதிதேடி காசிக்கு வந்தேன். அவநிம்மதியா ஆக்கிட்டீங்களே”என சொல்ல இன்னொரு போலீஸ் அதிகாரி “இல்ல இவ குண்டுவைக்க வந்திருப்பா” என்று அவள் இந்தியில் சொன்னபோது தமிழ் அதிகாரி தமிழில் விளக்கம் சொல்ல முயன்றபோது யாழி தடுத்து, எனக்கு இந்தி புரியும் ஆனா பதில் தமிழ்ல தான் சொல்லுவேன். என்ன இந்த மாதிரி சித்தரவதை பன்றதவிட காசிக்கு வந்தா புண்ணியம் கிடைக்கும்னு சொல்லுவாங்க, ஆனா இந்த நரகத்துல இருக்குறதவிட உங்க துப்பாக்கியால சுட்டு கொன்னுடுங்க என்று சொல்லும் போது இடையில் கண் இமைக்கும் நொடிப்பொழுதில் இந்தி பேசும் போலீஸ் அதிகாரி யாழியின் உடைகளை களைத்து முழு நிர்வாணப்படுத்தினாள்.

கடைசியில் ஒருத்தி சொன்னா ஒன்னுமே இல்ல இவகிட்ட . அப்பொழுது யாழி சொன்னாள் உங்ககிட்ட இல்லாதது என்கிட்ட என்ன இருக்கு என்னைய ஏன் இப்படி அவமானப்படுத்துறீங்க, உங்களுக்கு என்ன வேணும்? அவர்களுல் ஒரு அதிகாரிக்கு செல்போன் அழைப்புவர அவள் செல்போனை முடிக்கி பேசிக்கொண்டிருந்தாள். என்னை எதற்கு கைது, காரணம் சொல்லுங்க என தமிழ் பேசும் அதிகாரியிடம் யாழி முறையிட்டாள். உன்னைய புலின்னு சொல்லி அரஸ்ட் பண்ணிட்டாங்க. இப்பதான் போன் வந்துச்சு மேலதிகாரிகிட்ட இருந்து நீ ஒன்றும் அறியாதவள் உன்னை விட்டுவிடச் சொல்லி அனைவரும் கிளம்பிச் செல்ல, தமிழ் பேசும் அதிகாரி மட்டும் அங்கு இருந்தாள். இது எங்களோட வேலை சுதந்திர இந்தியாவில் நடமாடுற ஒவ்வொருத்தருக்கும் தனியா வாழ பயம். அதனால சில நல்லவங்ககூட பாதிக்கப்படுறாங்க. யாழி இடைமறித்து பாதிக்கப்படுறது மட்டுமில்ல குற்றவாளிகல உருவாக்குறீங்க என்றபோது அவளை அழைத்துக் கொண்டு செல்கின்றாள். யாழி அடைக்கப்பட்டிருந்த அறை இப்பொழுது முழுமையாக கதவு திறக்கப்பட்டு அறை முழுவதும் வெளிச்சம் பரவியது. அவள் இதற்கு முன் பார்த்திருந்த 40 வயது பெண் கண்பார்வை அறியாது பிறவி பார்வையற்றவராக காட்சி தந்தாள். இவள் உள்ளே வந்த சத்தம் கேட்ட அவள் யாரு யாழியா? என்றாள். ஆமாம் உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும்? என்னோட உன்னை அடைக்கப்பட்டு இரண்டு மணிநேரம் கழிச்சு என்னை போலீஸ் அதிகாரிகள் விசாரிச்சாங்க.

நீ என்னுடன் ஏதாவது பேசினாயா என்று கேட்ட போதுதான் நீங்க என்னோட அடைக்கப்பட்டிருந்தீங்கன்னு தெரிஞ்சுச்சு. அதுவும் எனக்கும் தமிழ் தெரியும்ன்னு தான் என்னோட அடைச்சு வச்சிருந்துருக்காங்க. நீ ஏதாவது என்னோட பேசுவன்னு. அப்பதான் ஒரு இந்திக்கார மவராசன் ஆபிஸர் சொன்னாரு உன்ன சந்தேகத்தின் பேர்ல பிடிச்சிருக்காங்க. உங்கள விடுவிச்சு நீங்க எங்க போகணுமோ அதுக்கு ஏற்பாடு பண்ணி அனுப்புங்கன்னு சொன்னாரு. இந்தியாவுல நடந்த தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு போலீஸ்காரங்களுக்கு அரண்டவன் கண்ணுக்கெல்லாம் இருண்டது பேய் போல, உன்ன ரொம்ப கொடுமைபடுத்திட்டாங்கன்னு அங்க ஒரு தமிழ் போலீஸ் ஆபீஸர் குரல்கூட கேட்டுச்சு. பெண்மை படைப்பு ஆளப்பிறந்தவர்கள் இதை எல்லாம் கடந்து மறந்து வாழ்க்கையோட ஒன்றிப்போ என்றாள்.

அவளிடம் யாழி கேட்டாள் “நீங்க எப்படியம்மா இங்க” “அதான் எனக்கே தெரியல. நா இந்த காசிக்கு வந்து எத்தன வருஷமாச்சுன்னு எனக்கு தெரியல. எனக்கு எத்தன வயசாச்சுன்னு புரியல. ஏதோ இரவு, பகல்ன்னு சொல்லுறாங்க திங்கள் வெள்ளின்னு சொல்லுறாங்க எனக்கு எதுவுமே தெரியல. என்னோட உலகத்துல நான் மட்டும்தான் இருக்குறேன். என்ன நானே பார்த்துக்குறேன். உடம்பு சுடும்போதுதான் வெயில்னு சொல்லுராங்க. எனக்கு வெயில் படும்போது மட்டும் உடம்பு சுடுறது இல்ல. நல்ல வேலை இந்த மனிதர்களையே பார்க்காம இருக்கேன் பாருங்க. அதனால உடல் சூடும் மறத்துபோச்சு. நடக்கும் போதுதான் தரைன்னு தெரியுது. ஏதோ ஒன்னுல சலக்குன்னு கால வச்சாதான் அது தண்ணீன்னு உணரமுடியுது. என்னைய ஒரு நாளைக்கு ஒரு இடத்துல உட்கார வைப்பாங்க ஏதோ என் கையில் சொர சொரப்பா விழும். அத தடவிப்பார்த்தா மரத்துப்போன என் தோல் மாதிரி தெரியும். யார் அழச்சுட்டு போறாங்கன்னு தெரியாது. பசிக்கும் போது கரெக்டா சாப்பாடு தருவாங்க. திடீர்ன்னு பார்த்தா நான் ஜெயிலுக்குள்ள இருக்கேன்னு சொல்லுறாங்க. ஏன்னு கேட்டா தொழில் போட்டியாம் நான் அதிகமா சம்பாதிச்சதால நான் முறைக்கேடா பிச்சை எடுக்குறேன்னு என்னைய ஜெயில்ல போட்டதுக்கு காரணம் சொல்லுறாங்க. என்னைய இங்க இருந்து கூட்டிபோக ஏதோ லாயராம்.. அவனுக எல்லாம் என்னைய வெளிய கொண்டுபோயிடுவாங்களாம் கவலப்பட வேண்டாம்னு சொல்லுறாங்க.

நான் ஏன் கவலைப்படணும் எப்பவும் போல நல்லாதான இருக்கிறேன் எனக்கு என்ன குறை. இங்கையும் பசிக்கும் போது சாப்பாடு கொடுக்குறாங்களே. ஜெயில்னா என்னம்மா உனக்காவது ஏதாவது தெரியுமா?. யாழி சிரித்தாள். அவள் சிரிக்கும் சத்தம் கேட்டு ஓ... இதுதான் ஜெயிலா என்று கூறிவிட்டு அவளும் சிரித்தாள். அதற்குள் யாழியை அழைத்துச்செல்ல இரண்டு போலீஸ் அதிகாரிகள் வந்தார்கள். யாழி அவளிடம் நான் கிளம்புறேம்மா, கிளம்புறேன்னு சொல்லாத அது செத்துப்போனவங்கள கடைசியா பார்த்துட்டு போகும்போது சொல்லுவாங்கலாம். நான் இன்னும் சாகலயேம்மா சாவுன்னா என்னான்னு தெரியாத எனக்கு அது வரக்கூடாதான்னு ஏங்கிட்டு இருக்கேம்மா சரி நீ கிளம்பு இந்த சந்தர்பத்துலயாவது உங்கல பார்க்க முடிஞ்சதே என்றாள். யாழிக்கு உள்மனம் தூக்கிவாரிப்போட்டது. கண்ணு தெரியாத அப்பெண் எப்படி நம்மை பார்த்தாள்... ஓ இதுதான் ஞானப்பார்வையோ.....

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.