வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 31

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

உற்பத்தி ஆன உடனே அறுவை சிகிச்சையால் பிறந்த, இளமையை துரத்திய ஞானப்பல் வலியால் சிந்தனை சிதறியது ஆதாலால் தவறவிட்டேன் கடந்தவார தொடரை... இந்த வாரம் மீண்டும்...

செல்லப்பா சிக்காகோ விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்து அறிமுகம் இல்லாத நபரை விரக்தியுடன் தேடினான். அச்சமயத்தில் “ஹலோ செல்லா பின்னே காணாம்” என்று கூறி விடை பெற்றான் குரியன். செல்லப்பா மீண்டும் யாரையோ தேடியபோது அவன் பின்னால் இருந்து “எக்ஸ்கியூஸ்மி நீங்கள் செல்லப்பன் தானே” என்ற போது ஆமாம் என்று சொல்லி முடிப்பதற்குள் அவனிடம் இருந்த பெட்டியை பெற்றுக்கொண்டு என்னுடன் வாருங்கள் என்று அழைத்துச்சென்று அவன் காரில் அமர்ந்து இருவரும் சென்று கொண்டு இருக்க காருக்குள் அமைதி நிலவியது.

அவர்கள் இருவர் மட்டுமே காரில் சென்றுகொண்டு இருப்பதால் அமைதியை உடைக்க செல்லப்பாவை பார்த்து “நான் அபி முழுப்பெயர் அபியேந்திரன்” செல்லப்பா “ம்....ம்..” உங்களை பற்றிய விபரம் முழுசா தெரியலைன்னாகூட தோராயமா சலீம் சொன்னாரு, உங்களுக்கு வேலை டெக்னோ கார் கம்பெனியில, நீங்க எங்க கூடத்தான் தங்குறீங்க, ஒருவாரம் இருந்து பாருங்கள். எனக்கு பிடிச்சா என் கூட இருக்கலாம், உங்களுக்கு பிடிக்கலேன்னா உடனே காலி பண்ணிக்கலாம்”. செல்லப்பா “சரிங்க நீங்க வந்...து... நான்தான் சொன்னேனே அபி... என் சொந்த ஊர் சிலோன் நான் 85ம் ஆண்டே இங்கே வந்துட்டேன் என் சாதி சனங்க எல்லாம் கொஞ்சம்பேர் லண்டன்ல இருக்காங்க மிச்ச பேரு சிலோன்ல சிங்களர்களால உயிரோடவே அடக்கமாயிட்டாங்க. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சொல்றாங்களே. எங்கள் நாட்டுல ஒவ்வொருத்தரும் இறக்கும் கடைசி நிமிடம் வரை நம்புறாங்களே, எங்கள் நம்பிக்கை வீண்போயிடுமா சார்?. எங்கள் மக்கள் அகதிகளா இங்க வர்றதவிட உங்கள் சொந்தக்காரங்களாத்தான் வர விரும்புறோம்.ஆனா ஒன்று எங்கள வைத்து சிங்களர்கள் பிரிட்டிஷ்காரர்கள் சிலோனவிட்டு போனதிலே இருந்து இது நாள்வரை அரசியல் பண்றாங்க.

இப்ப உங்க நாட்டுலயும் அதத்தான் பண்றாங்களா சார்?. கொத்து கொத்தா அழியும் எங்கள் மக்களுக்கு ஒரு கைகொடுக்க மாட்டாங்களான்னு, இன்னும் எம்மக்களுக்கு நம்பிக்கை இருக்கு. ஏன்னா பல லட்சம் மக்கள் செத்தும். மேலும் பல லட்சம் மக்கள் உயிரோட போராடிக்கிட்டு இருக்கும்போது, 20 மைல் இடைவெளியில இருக்கிற எங்கள ஒரு நிமிஷம் மறந்து. 2000 மைல் தூரத்துல இருந்து வரும். தலைவரை பொன்னாடை போத்தி வரவேற்கும் தமிழ் மக்கள் இருக்கும்வரை, நாங்களும் நம்பிக்கையோடு தான் இருக்கோம். ஆனா இவங்கள இப்படியே விட்டாங்கன்னா? நாளைக்கு உங்களுக்கும் பெரிய தலைவலியா... இருப்பாங்க.

செல்லப்பா அமைதியா இருந்தான். என்ன சார் பண்றது தமிழ்நாட்டுல இருந்து யார் வந்தாலும் எங்க வாழ்க்கை சிதறி குழம்பி அலையலையா மறஞ்சு போனது பத்திதான் பேச வேண்டி இருக்கு. ஏன்னா உங்கள பார்க்கும் போது ஏதோ செத்துப்போன எங்க சொந்தக்காரங்கள பார்க்கிற மாதிரி இருக்கு. அதை கேட்ட செல்லப்பா அவன் பேச்சை மாற்ற எங்காவது சூடா காபி சாப்பிடலாமா? என்ற போது “ஒஎஸ்” என்ன சார் நான் என்ன போர் அடிக்கிறேனா. இல்லை உங்க மனச்சுமையை கொஞ்ச நேரம் என்னாலும் சுமக்க முடியுதேன்னு ஒரு சின்ன சந்தோஷம். அதான் சார் நம்ம தமிழ்காரங்க என்றான்.

ஒரு பெட்ரோல் பங்கில் உள்ள கபேயில் காபி வாங்கி இருவரும் குடித்துக்கொண்டே செல்லப்பா ஏதாவது பாட்டு போடுங்களே என்றபோது அபி கார் டேப்பை ஆன் செய்தான். பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான் என்ற பாடல் ஒலிக்க. அபி இப்பயெல்லாம் இதுபோல் பாட்டு வர்றதே இல்ல சார். அதனால பழைய பாட்டைத்தான் மீண்டும் மீண்டும் கேட்க மனசு சொல்லுது. எங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உறவை புதுபிக்கிறது தமிழ் சினிமாவும் பாடல்களும்தான். அகிம்சை வழியில போராடி செத்துப்போன அமிர்தலிங்கத்துக்கு பிறகு துருபிடித்த துப்பாக்கியால் வெளியே தெரிந்த எங்க வலிக்கும், பல நேரங்கள்ல மூளை வலிக்கு உதவுறது சுபாஷ்சந்திரபோஸ், சேகுவாரே வாழ்க்கை முறையும் கலைஞரோட வசனமும் எம்.ஜி.ஆரோட எழுச்சி மிகு பாட்டும்தான்.

எங்களைமறந்து தனிமைபோக்கி, இசை அற்புதமான மருந்து எங்க இப்பயெல்லாம் கிளாசிக் பாடல்களையெல்லாம் ரீமிக்ஸ்ங்ற பேர்ல வெந்த சாதத்த கொழச்சு சாப்பிட்டு கக்கூஸ் போனது மாதிரி இருக்குது. அப்படியே நல்ல வரிகள் இருந்தாலும் சவுண்டுல குறுக்கெழுத்து போட்டி போல வார்த்தைகள் தவிக்குது. இல்லைன்னா ஒக்கா, ஒம்மா, ஒங்க ஆத்தா என்ற வார்த்தை வருங்காலத்துல குழந்தைகளுக்கு ஆத்திச்சூடி ஆகிடுமோன்னு பயமா இருக்கு. அதவிடுங்க. ரஜினி பெரிய ஆளா? கமல் பெரிய ஆளா?. செல்லப்பா அதவிட தமிழ்நாட்டு மக்கள்தான் பெரிய ஆளுங்க. ஆளுக்கு ஒரு கட்சி, வீதிக்கொரு சாதி, கூடும்போது கம்யுனிசம் பேசுவாங்க. பிரிந்தவுடன் சுயநலவாதியா இருக்காங்க. சல்லிக்காசுக்கூட பிரயோசனமில்...லா...? தினமும் ஒரு போராட்டம், தேர்தல் சமயத்துல எல்லாக் கட்சிக்காரங்ககிட்டயும் பணத்த வாங்கிக்கிட்டு அவுங்களுக்கு பிடிக்காதவங்களுக்கு ஒட்டு. படம் புடிக்கலைன்னா ஒரே நாள்ல கடைய மூடிடுறாங்க. மொத்தத்தில் உரிமையை மறந்து மூளையை மழுங்க செய்து ஏமாற்று வேலை அதிகமாகி குறுக்கு வழியில் பணக்காரனா ஆகனும்னு ஆசைப்பட்டு சுயமா உழைக்கும் தன்மையை இழந்துகிட்டு இருக்காங்க. நானும் அப்படிதான் நியூயார்க் போய் லட்சம் லட்சமா சம்பாதிச்சு கோடிஸ்வரனாயாயிடலாம்ன்னு போனா? சலீம் இங்க தொரத்திட்டான் என்ற போது அவன் தங்கும் இடம் வந்ததும் இருவரும் இறங்கினர்.

அரிதா புகையை ஊம்பிக்கொண்டு அவனை கடந்தால் அவளை பார்த்த செல்லப்பா இவ மட்டும் ஒரு நா கெடச்சா களவியில் சிப்பியை உடைச்சு முத்துவை அனுப்பலாம்? என்று அவன் அவளை பார்க்க, அவனை கடக்கும் வரை அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் செல்லப்பா.அதைக் கண்ட அபி, இந்த மாதிரி சிக்காக்கோவுல ஆயிரம் பிகர் இருக்கு, தமிழ் சினிமா ரொமான்ஸ் எல்லாம் இங்க ஒத்துவராது. கோடி ரூபா கையில இருந்தாலும் இதப்பார்த்துட்டு இருந்தீங்கன்னா கோடியை இழந்து லட்சங்களும் ஆயிரமாகும் போது, அவர்கள் விட்டுப்போன எச்சம் மட்டுமே மிஞ்சும்... என்று அரைக்கதவை திறந்து உள்ள வாங்க என்று செல்லப்பாவை நோக்க, அவன் பின்னால் இல்லாததை கண்டு? வந்த வழியை நோக்கினான்.

செல்லப்பா ஜன்னல் ஒரமாக நின்று தெருவை நோக்கிக்கொண்டு இருந்ததைக் கண்டு, சார் ! அந்த பொண்னைத்தானே பாக்குறீங்க. செல்லப்பா “ஆமாம்", ஆனா அவள் காரின் ஒசையாய் கரைந்து போனால்”. கவலைப்படாதீங்க கரைந்து போனவள் நீங்கள் சுவாசிக்கிற காற்றாகவும், பகல்ல சூரிய வெளிச்சமாகவும், இரவுல குண்டு பல்பு ஒளியில, நீங்கள் இந்த வழித்தடத்தில் நடக்கும்போது உங்களை கடந்து போகும் நிழல்களாகவும், சென்னை கொசுத் தொல்லையைவிட நீங்கள் அலுக்கபோற அன்புத் தொல்லையாய், நீங்கள் அணிந்திருக்கும் ஆடைக்குள் ஒளிந்து இருக்கும்அழுக்காய்,விஷ்கியில் இளகிய ஐஸ்சாய், நீங்கள் உறங்கச் செல்லும் முன் உண்டு களித்த உணவாய், உங்களை உறக்கத்தில் கிளர்ச்சியூட்டும் உருவமில்...லா... கனவாய், நீ ஒரு நாளைக்கு மூணு வேலை குளிச்சாலும் ஈரம் விலகியவுடன் உனக்குள் வாழும் துர்நாற்றமாய். நீ உணரலாம். ஐய்யோ போதும் நிறுத்துங்க. உங்க கவிதா.....கலாட்சேபத்தை. அபி, பின்ன என்ன, அது என்ன ஒருவாட்டி பாத்த உடனே கார் சத்தமா கரஞ்சுபோயிட்டாளே. செல்லப்பா, எனக்கே தெரியல சார், அவள பார்த்த உடனே நல்வழி தவறி வந்த மொழி. சார் அவள எங்க டெய்லி பார்க்கறீங்க. அவன் ஒரு அரைக்கதவை காண்பித்து அந்த ரூம்ல தான் தங்கி இருக்கா. அப்படியா....சார். என்று வாய்பிளந்தான். இதுபோல அவள பாத்து வாய் பொளக்காத உன் வாய்க்குள்ள இருக்குற சொத்தப் பல் தெரியுது. அதைக் கேட்ட செல்லப்பா வாயை மூடிக்கொண்டு சிரிக்க இப்பவாய் தொறந்து சிரிக்கலாம் நான் அவள் இல்லை என கூற, இருவருமே சிரிக்க டி.வி.யை ஆன் செய்தான் அபி. தமிழ் ஒளி ஒலி வரிசையை இருவரும் பார்த்த போது சிங்களர்கள் நான்கு தமிழர்களை நிர்வாணப் படுத்தி சுட்டுக் கொள்ளும் காட்சி தெரிந்தது.....

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</