வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 3

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

செல்லப்பாவை பக்கத்து வீட்டிலுள்ள தாத்தா “செல்லப்பா, செல்லப்பா” என்றழைக்க, அவனோ மச்சக்காளையைப் பார்க்க ஆவலா இருக்க, தாத்தா மீண்டும் அவனை அழைக்க, அவன் அவரருகில் செல்கிறான். ஒரு காலத்தில (கிராம அதிகாரி (VAO) வருவதற்கு முன்பே) கணக்குபிள்ளையாக இருந்தவர். அவருக்கு வயது எழுபத்தாறு ஆகிறது. இரண்டு கண்களுமே தெரியாது.

மேலும் அவருக்கு தேவாரம், திருக்குறள், இராமாயணம், மகாபாரதம் அத்தனையுமே அத்துப்படி. அடிக்கடி செல்லப்பாவை தன்னருகே அழைத்து அவருக்கு தெரிந்ததை மனப்பாடமாக சொல்வார். அவனும் அதை ஆர்வத்தோடு கேட்டுத்தெரிந்து கொள்வான். அந்திப்பொழுதில் ஊருக்குள்ளிருக்கும் தேநீர்க் கடையில் டீ குடித்துவிட்டு, வெளியூர்ச் செய்திகளை தெரிந்துக்கொள்ள ஆசைப்படுவார்.

உள்ளூர் தேநீர்க்கடை பெஞ்சுகளே பாராளுமன்றத்தை விட பல்வேறு செய்திகளை விவாதம் செய்கிறது. அந்த உள்ளூர் தனுக்கோடி டீக்கடைன்னா தாத்தாவுக்கு சந்தோஷம். வாலிபர்கள் முதல் வயதான பெருசுகள் வரை அன்றாட நாட்டு நடப்புகளை அசைபோடற இடமே அந்த டீக்கடைதான். செல்லப்பா இல்லாத சமயங்களில் கோவிந்தசாமி தாத்தாவுக்கு மலம்கழிக்க செல்லும்போது துணையாக இருப்பது அவர் பயன்படுத்துகிற காந்தி தாத்தா கம்புதான். அது ஒருபக்கம் குடைக்கம்புபோல வளைந்தும், மறுபக்கம் கூர்மையாகவும் இருக்கும். குடைக்கம்பி போன்ற வ்ளைந்த பகுதியை தாத்தா பிடிக்க கூர்மை பகுதியை அவன் பிடிக்க, தனுக்கோடி டீக்கடையை நோக்கி தாத்தாவும், செல்லப்பாவும் சென்று கொண்டிருக்கின்றனர். போகிற வழியில் செல்லப்பா தாத்தாவைப் பார்த்து ”தாத்தா உனக்கு என்னென்ன பிடிக்கும்னு சொல்லேன்... தெரிஞ்சிக்கிறேன்”. என்று கேட்க,

“எனக்கு பிடிச்சது கருத்தமேகம் கொண்டுவரும் மழை. அதனாலதான் சிலப்பதிகாரத்தில இளங்கோவடிகள் கூட மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் எனப் பாடியிருக்கார்” என்றார் தாத்தா.

“அட, போங்க தாத்தா இனிமே நாட்டுல மழை பெய்யறது கஷ்டமாம். காட்டுல இருக்கிற மரங்கள் எல்லாத்தையும் நம்ம ஆளுங்க வெட்டுராங்கலாம். மரங்கள் கூட்டமா இருந்தாதான் காத்து இருக்குமாம், நல்லா காத்து வீசினாதான் மேகமெல்லாம் ஒண்ணாச்சேர்ந்து மழையே வருமாம், மரங்க இல்லேன்னா இனிமே மழை பெய்றது கஷ்டம்னு எங்க ஸ்டீபன் வாத்தியார் சொன்னார்.”

“அடப்பாவிங்களா! இதென்னடா கொடுமை? “
சரி ஒன்னோட அந்த ஆசை போச்சு. வேற என்ன பிடிக்கும் தாத்தா”...

“வெள்ளைத்தாளில் விதைகளாய் பிறந்து தவழும் எழுத்துகளைப் பிடிக்கும்”
செல்லப்பா கிண்டலாய் சத்தம்போட்டு சிரிக்கிறான்.

“டேய், செல்லப்பா ஏண்டா இப்படி சிரிக்கிற”

“பின்ன என்ன தாத்தா கம்யூட்டர் காலத்துல பேப்பருக்கும் பேனாவுக்கும் இனிமே வேலையே இல்ல?.. சும்மா கம்ப்யூட்டர்ல விரல்ல லேசா தட்டுனாபோதும் எழுத்துக்கலெல்லாம் தானாவே வந்திடுது” “அட கிழிஞ்சதுபோ கிருஷ்ணகிரி. அப்ப ஒம்புள்ளங்க காலத்துல பேப்பர் பேனாவெல்லாம் இருந்ததா வரலாறு சொல்லித்தான் தெரிஞ்சிக்குவாங்கன்னு சொல்லு...”

“பேப்பர் பேனாவெல்லாம் இல்லாமா குடியா முழுகிடப்போவது” தாத்தா.
“அட முட்டாப்பயலே வேலையிலே ரொம்ப கஷ்டமான வேல எழுதறதுதான்டா, அந்த எழுதுற வேல உனக்கு இல்லன்னா சிந்திக்கிற திறனே இருக்காது. அதுமட்டுமா? ஒன்னோட எண்ணங்களும் ஒருநிலைப்படாம உம்மனசில எதுவுமே பதியாது”.
“போ தாத்தா ஒனக்கு கண்ணு தெரியாததால கம்ப்யூட்டர கொற சொல்ற”

அப்போது தூரத்தில் என்ஜினீயருக்குப் படித்த நல்லுப்பேத்தி வருவது செல்லப்பா பார்த்துவிடுகிறான்.

“தாத்தா கொஞ்சம் மெதுவா பேசு.... என்ஜினீயருக்குப் படிச்ச நம்ம நல்லுப்பேத்தி வர்றாங்க”
“அவ கிட்ட வந்தா சொல்லு, நல்லா இருக்கியான்னு ஒருவார்த்தை கேட்போம்”

அந்தப்பெண் அருகில் வர, செல்லப்பா நல்லுபேத்தியிடம் “அக்கா உங்ககிட்ட தாத்தா ஏதோ பேசணும் னு நினைக்கிறார் என்றான் செல்லப்பா. அவள் தாத்தாவிடம், “தாத்தா நல்லா இருக்கீங்களா? நான்தான் நல்லுபேத்தி.... எஞ்ஜினீயருக்கு படிச்சேனே அந்த பொண்ணு”

“நான் நல்லா இருக்கிறேன்.... படிச்சு முடிச்சுட்டியாம்மா?”
“முடிச்சுட்டேன் தாத்தா”
“நல்லதா போச்சு....என் மருமக அதான் உங்க அம்மா குடிக்கக்கூட தண்ணி இல்லாம பக்கத்து ஊர்ல போயி தண்ணி எடுத்துக்கிட்டு வர்றா...அதனால நம்ம கிணத்துலேயே நல்ல தண்ணி கெடைக்கற மாதிரி ஏதாவது பண்ணு”
“அதெல்லாம் என்னால முடியாது தாத்தா”
“ஏம்மா..?”
“நான் பாரின் கம்பெனியில வேல பாக்கறேன்”

“அப்ப எங்களுக்கு ஒண்ணுக்குமே ஒதவாத வேலன்னு சொல்லு...”தாத்தாவால் சண்டை வந்துவிடுமோ என்று பயந்த செல்லப்பா “நீங்க போங்கக்கா” என்று சொல்லி தாத்தாவை அவ்விடத்தைவிட்டு அவசரமாக அழைத்துக்கொண்டு செல்கிறான். தெருவின் கடைக்கோடிக்குச் சென்று அவள் மறைந்ததும், ” என்ன தாத்தா உனக்கு அறிவிருக்கா?...மாசம் லட்சம் ரூபா சம்பளம் வாங்கற அவங்கக்கிட்டபோயி இப்படி பேசுறியே....”

“ அவ இந்த ஊர்ல இருக்குறப்ப பேண்டுட்டு கழுவறதுக்கு இங்க தண்ணி இல்லாம வாங்கற பணத்தாலயா தொடச்சிக்குவா?....”
“சரி தாத்தா அதவிடு, இதோ டீக்கடை வந்துடிச்சி....நீ டீ குடிச்சிக்கிட்டு இரு... நான் போயி மச்சக்காளைய பாத்துட்டு வர்றேன்” என அங்கிருந்து ஒடுகிறான்.....

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.