வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 29

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

தடுக்கி விழுந்தால் அடுத்தவர் மேல் விழுமளவு மக்கள் நடமாடும் நெருக்கத்தில் செல்லப்பாவும் சலீமும் அமைதியுடன் இருண்ட காட்டுக்குள் நடப்பது போல் செல்கின்றனர். செல்லப்பாவுக்கு கோபம் முகத்தில் ரத்தம் உறைந்து சிவப்பாக கொப்பளிக்க மடை திறந்து வரும் ரோஷத்தை அடக்கிக் கொண்டு வயிறு நிறைய சோறு வாங்கி கொடுத்து வஞ்சனை மிகுந்த மகா துரோகியா இருக்கானே, என்று நினைத்துக்கொண்டு செல்ல சலீம் கதவை திறந்தான். ஆத்திரத்தை அடக்க முடியாத செல்லப்பா குமுறினான். துரோகி என்ன வர வச்சு ஏமாத்திட்டியேடா... சலிம், நானா ஒன்ன வரச்சொன்னேன். செல்லப்பா, ஒன்ன நம்பி வந்தேனடா. சலிம், அது உன் தப்பு. எங்க அம்மா அப்பா ஒங்க பேமலிக்கு எவ்வளோ உதவி பண்ணி இருக்காங்களடா. அது அவங்களோட கர்மா. ஒனக்கு நன்றியே கெடையாது. அப்படீன்னா. முழுமையான சுயநலக்காரன். டேய் டெய்லி திருச்சியில நா படிக்கும்போது என்ன என் காலேஜ்ல ட்ராப் பண்ணுவுயேடா. அது ஒங்கூட படிச்ச பாத்திமாவ ரூட்டுவிட. பச்ச துரோகியா இருக்கியேடா. இல்லையே உனக்கு நேரா நிக்கிற நேர்மையான துரோகி. இவ்வளவு நேரம் நான் உன்ன பேசவிட்டது ஒன் கோபம் குறையட்டுமேன்னு தான். இனிமே பேசி நேரத்தை வேஷ்ட் பண்ணாதே, மூட்டமுடிச்ச எடுத்துக்கிட்டு சீக்கிரம் கெளம்பு.[செல்லப்பா]... எங்கடா ?.

வேற ஊருக்கு. நான் எங்கடா போறது யார பார்க்கிறது ஒன்னுமே புரியலயே. [சலிம்], ஏண்டா இப்படி பொளம்புறதுக்கு உனக்கு வெட்கமா இல்ல. ஏதோ ஒரு கிராமத்துல பொறந்து அமெரிக்காவரை வந்த நீ எங்க போவேன்னு கேக்குறீயே! சாதாரணமான என்ன பாக்க முகவரி தேடி வந்த நீ ஒன் வாழ்க்கையை தேட ஏன் நெனைக்கல? நாம எல்லாருமே அதத்தான் செய்றோம். எப்படியாவது ஒரு இடத்த பிடிச்சுட்டா இன்னொரு இடத்தை அடையுறது ஈசின்னு (இடையில் குறுக்கிட்ட செல்லப்பா) நான் ஈசின்னு நெனைக்கெளடா. நானும் கடுமையா உழைச்சு பெரிய ஆளா வரணும்னு லட்சியம் இருக்குடா... சலீம். மண்ணாங்கட்டி இதுக்கு பேரு லட்சியமில்லை ஆசை. லட்சியம்ங்றது ஒரு குரங்கு மாதிரி அது ஒன்ன அடையும் போது இன்னொன்னுக்கு தாவும். அது கெடச்ச உடனே மற்றொன்றை நாடும். பிறகு தனக்கு கெடைக்காத வேறொன்றை தேடும். இதுக்கு பேரு லட்சியமா? லட்சியங்கறது என்னான்னு எனக்கும் தெரியல, உனக்கும் தெரியாது. சரிடா நீ சொல்லுறதுதான் சரி. நான் வேற எங்கயாவது வேல தேடி போறவரை இங்க ஒரு வாரம் தங்கிக்கிறேண்டா. இனிமே ஒரு நிமிஷம் கூட லேட் பண்ண கூடாது வா போயிகிட்டே பேசலாம் என்று செல்லப்பாவின் மறு மொழி கேட்க இடம் தராமல் வீட்டில் இருந்த செல்லப்பாவின் சூட்கேசை கையில் எடுத்துக்கொண்டு கதவை தாழ் இட்டு நடக்க அவன் பின் செல்லப்பா நடக்கும்போது சலீம் முன்னால் நடக்க செல்லப்பா பின்னால் நடக்க [செல்லப்பா] இவெனெல்லாம் ஒரு பிரண்டு என்று வாய்க்குள் முனுமுனுக்க சலீமின் காது கூர்மையால் அறிந்துபின் திரும்பி ஆமாடா, நான் நிச்சயமா உனக்கு நண்பன் இல்லை. உனக்கு மட்டுமில்ல நான் யாருக்குமே நண்பனில்லை. ஒனக்கு ஒரு உண்மைய சொல்றேன் கேளு. அதை கேட்ட உடனே ஒனக்கு ரொம்ப கசக்கும். ஒனக்கு மட்டுமில்லை நெறைய பேருக்கு. ஆனா நான் ஒரு சில நேரங்கள்ளயாவது உண்மையா இருக்கனும்னு நெனைக்கிறேன். நண்பர்கள் என்பது பொய்.

நீ எனக்கு நண்பனா இருக்கனும்னா உனக்கு பிடிச்ச நெறைய விஷயத்த நீ என்கிட்ட மறைக்கணும். எனக்கு பிடிச்ச விஷயத்த நா உங்கிட்ட மறைக்கணும். அப்படி மறைச்சுகிட்டு வாழ்ந்தா மட்டுமே நாம நண்பர்களா இருக்க முடியும். அப்படி இல்லாம நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஒப்பனா இருந்தா உனக்கு நான், எனக்கு நீ, இதுக்கு இடையில நமக்கு மிகச் சிறந்த எதிரி வேறொருத்தன் இருக்கவே முடியாது. இதற்கு நெறைய உதாரணத்த வரலாறு சொல்லுது. நேற்றைய நண்பர்கள் இன்றைய எதிரிகள்.அரசியல்வாதியும் சரி, அம்பானி சகோதர்களாக இருந்தாலும் சரி. இதுயெல்லாம் உண்மையில்லைன்னு நீ நெனைச்சென்னா நான் உனக்கு என்னான்னு சொல்றது. இதை எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக நடந்து வந்த செல்லப்பா சரி சலீம் நான் எங்க போறதுன்னு சொல்லு. சலீம், நீ சிக்காக்கோ போற அங்க ஒனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். அங்கேயும் வேலை கெடைக்காம போச்சுன்னா, நமக்கு அடுத்து நடக்க போர அதிர்வுகளும் அதிர்ச்சிகளும் வெற்றிகளும் தோல்விகளும், பேரின்பமும், பெரும் துயரமும், துள்ளியமாக யாராலும் கனிக்க முடியாது.

அந்த புதிரில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்று, நான் சொல்லல! கஷ்டப்படு உழைத்து, உயர்ந்த பெரும் பேர் பெற்று, அழியாப் புகழோட மறைந்த எம். ஜி. ஆர். உரைத்த பொன்மொழி இது. நீ இங்க இருந்தன்னா ஒன்னால ஒரு நா கூட நிம்மதியா தூங்க முடியாது. போலீஸ் என்கொயரின்னு டெய்லி வந்துகிட்டே இருப்பாங்க. அதுக்கு மேலே இங்க நெறைய கேளிக்கை விடுதிகள் இருக்கு நீ சம்பாதிக்கிறதுல முக்கால்வாசி அங்கேயே செலவு பண்ணிடுவே. இதுநாள் வரை ஒனக்காக கஷ்டப்பட்ட ஒங்கம்மா ஒங்கப்பாவிற்கு ஒன்னுமே பண்ணாத நீ சிக்காக்கோ போயி நாலு காசு சம்பாதிச்சு அவெங்களுக்கு ஏதாவது பண்ணு. இந்த ஊர் ஸ்டேஷன்ல சலீமுன்னு என்ன கேஸ் வந்தாலும் என்னதான் முதல் ஆளா விசாரிக்கிறாங்க. எங்க நானும் ஒரு தீவிரவாதியா இருப்பேனோன்னு. சந்தேகபடுறாங்க. பல நேரங்கள்ல அது தப்பாவே இருக்கு.

இந்த மாதிரி தொல்லைங்க ஒனக்கு வர கூடாதுன்னுதான், நீ என் கூட இருக்க நான் விரும்பல அதை கேட்ட செல்லப்பா சலீமை கட்டி தழுவி அழுதான். உண்மையிலேயே நீ தாண்டா என் நண்பன். சலீம், நீ ரொம்ப பொய் சொல்றே. அதை கேட்ட செல்லப்பா அடச்ச, என்று தோலில் தட்ட இருவரும் விமானதளம் நோக்கி நடக்கும் போது சலீம் செல்லப்பாவிடம் நீ அங்கே போயி முழுக்க முழுக்க சுயநலவாதியா இரு. குறைவா பேசு, நிறைய வேலை செய். எப்பொழுதுமே மற்றவர்களுக்கு நீ ஒரு திறந்த புத்தகமா இல்லாமல் இருட்டறையா காட்சி கொடு. நேர்மையான மனிதர்கள் பெரும்பாலோனர்கள் ரத்தக் கரைகள் படிந்தும், கொடுமையான வாழ்க்கை வாழ்ந்தவர்களே அதிகம். அதற்காக தவறுகள் செய்துவிடாதே. நீ மற்றவர்களுக்கு சித்திரமாக காட்சி கொடு, என்ற போது சிக்காக்கோ விமானத்தில் செல்லப்பா பறந்து கொண்டு இருந்தான். சலீம் தன் இல்லத்தை அடைந்த போது அவனுக்கு மேலே பறந்த விமானத்தை அன்னாந்து பார்த்து இதில் செல்லப்பா செல்வானோ! என்று விரக்தியாக பார்த்து, நின்றுகொண்டு இருந்த வேலையில்... அவன்கண்களின் கருவிழிகள் கலங்கி கண்னீர் கரைந்து கொண்டிருந்தபோது சிரம் தாழ்ந்து தரை நோக்கி நடந்த அவன் செல்லப்பாவின் கால்தடங்களை பார்த்து அதன் மீது தன் பாதங்களை பதித்து நடந்தான்.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</