வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 23

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

திரும்பிய பக்கம் எல்லாம் சூரியன். ஆங்கிலேயர்களின் உள்ளாடை கவர்ச்சி மற்றவர்களின் மனங்களை சலனப்படுத்துவதுப்போல் அவர்களின் இல்லங்கள் அலுவலகம் மற்றும் அனைத்து வியாபார விடுதிகளும் உள்ளே உள்ளது அனைத்தும் அறிய அரை நிர்வாணத்துடன் உலகம் வெப்பமயமாக்குதலுக்கு முதல் காரணமான அனைத்து விளக்குகளும் பயன்படுத்தி இரவா பகலா என்ற ஏற்ற தாழ்வுயின்றி எப்போது நம்மை குண்டு வைத்து தகர்ப்பார்களோ என்ற பயத்துடன் உயிர் அற்ற கட்டிடங்கள் கூட செயற்கை சுவாசத்துடன் ஒரு சூரிய உதயத்தை நூறு சூரிய உதயமாக காட்சி தரும் Manhattan அழகை கூட ரசிக்க முடியாமல் hour bees job செய்ய அதிவேகத்தில் இயங்கிக் கொண்டுருக்கும் மனிதக் கடலில் நாம் அறிந்த ஒரு முகம் கூடஇங்கு காண முடியவில்லையே என்ற எண்ணத்துடன் அதிகாலை உணவை சாலையில் அவர்கள் நடக்கையிலேயே உண்டும் ஒருவர் உணவு உண்னும்போது தவறி விழுந்த உணவை அவருக்கு பின்னால் வந்து கொண்டுருந்தவர் அதை பொருக்கி குப்பை தொட்டியில் போடும்போது அதை கண்ட செல்லப்பாவின் ஞாபகம் பின்னோக்கியது.

தமிழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு வந்த ஜாக்கிஜான் அவர்கள் நேருவிளையாட்டு அரங்கில் அமர்ந்து கொண்டு இருக்கையில் மேடையில் விழுந்த கூலத்தை கனநேரத்தில் மேடையை அலங்கரித்துக்கொண்டு இருந்த ஜாக்கிஜான் எழுந்து அந்த கூலத்தை பொறுக்கி அங்கும் இங்கும் தேடியபடி “where is the dustbin? “ என்ற போது நேரு அரங்கத்தில் அமர்ந்திருந்த ஐயாயிரம் மக்கள் எழுப்பிய கரஒலியில் அரங்கமே ஒர் நிமிடம் அதிர்ந்தது. அதையும் பொருட்படுத்தாமல் “where is the dustbin? “ என்று மீண்டும் கேட்டபோது அதை டிவியில் பார்த்து, தம் நிலையை நினைத்து வெட்கிய அவனுக்கு நினைவு திரும்பியது. இந்த நாட்டில் இதை ஒவ்வொருவரும் செய்து கொண்டு இருக்கிறார்களே என்று அவனும் நடக்கும் வழியில் குப்பை இருக்கிறதா என்று தேடிய போது dustbin மட்டுமே பார்க்க முடிந்தது அதுவும் கூட அழகாக காட்சி தந்தன.

Manhattan வீதீ . உலக மக்களின் மொத்த கேளிகை விடுதிகளையும் அவன் கடந்தபோது இரவுக்கும் பகலுக்கும் இங்கே என்ன வேலை என்று திரும்பிய திசை எல்லாம் செயற்கை வெளிச்சத்தால் வானத்தில் கூட வண்ண கோலங்களை அந்த இரவு 11 மணியில் காண முடிந்தது. சென்னையில் இருந்து வந்த களைப்பு அவனை சளைக்க செய்தாலும் அவனின் எண்ணம் இன்றே இந்த உலகத்தை கண்டுவிட வேண்டும் என ஜொலித்து துடித்த அந்த உணர்வால் உந்தப்பட்ட களைப்புகூட அவனைவிட்டு கலைந்துபோனது. Lisa என்ற கேளிகை விடுதியின் முன் நின்றபோது அமெரிக்காவில் அங்கு செல்லாமல் வந்து விடாதே செல்லா...என்று ஜோசப் கூறியது நினைவுக்கு வர நுழைவு தொகை பத்து டாலரை கொடுத்துவிட்டு உள்ளே சென்றான். அவன் கண்ட காட்சி அவன் இதுவரை பார்க்காத வேறொரு உலகத்தை முப்பதுக்கு முப்பது அடி அளவு கொண்ட அறையில், அவன் படித்த ரம்பை ஊர்வசி அவன் கனவில் அப்ப அப்ப அரை குறை ஆடையில் கனவில்காணும் தேவதைகள், குடிசையில் வசிக்கும் குமரி கிழவியாகவும், கிழவியை உலக அழகியாக கண்டு கொண்டு இருந்த அவனுக்கு முதல் முறையாக முற்றிலும் குமரிகளாக, முன்னழகும், பின்னழகும், உதிராத அளவில் மூன்று மாத குழந்தை சிரிப்பில் சிதரும் முகங்களுடன் மேனியில் ஒரு துளி அளவு கூட துணியின்றி மேற்கத்திய இசை முழங்க மெல்லிய நடனத்தில் காம சூத்ராவில் அவன் கண்ட படங்கள் அவன் முன்னே ten dolar-க்கு பிறந்த மேனியுடன் நடமாடும் சிற்பங்களை கண்டு ஆனந்தமுற்ற போது அவன் கையில் ஒரு beer பாட்டிலைத திணித்தால் ஆடையின்றி இருந்த ஒரு பெண் அவன் அதை பிடித்துக்கொண்டு அந்த அறையில் அமைந்து இருந்த மேடையில் poll dance (நாம் வாழை மரத்தில் ஆடையின்றி ஏறி இறங்கினால் எப்படி இருக்கும்) ஆடிய அவளை களவாடிக்கொண்டு இருக்கும் கண்கள் கூசாத வெளிச்சத்தில் இவள் நமக்கு கிடைக்கமாட்டாளா? என்று ஏங்கிய போ.....து, அவள் அவனருகிலே வந்துவிட்டாள். அவள் அவனை இருக்கையில் அமருமாறு சைகையிட்டாள்.

அவனும் அமர்ந்தான். அவளும் அவன் அருகில் நூலிழைவு கடந்தால் உராய்வு ஏற்பட்டு காமத் தீப்பற்றி அவன் நனைந்து பனிப்பாறையாக உரைந்து போய்விடும் சூழல் இருந்தும் அவன் கதகதப்பாக இருந்தான். அவ்வேளையில் அவன்அவள் கொங்கையை தொட நினைத்த போது அவள் சீறித்தள்ளினால் அவன் இருக்கையோடு கீழே சரிந்த அவனை sorry என்று கூறி கைக்கொடுத்து இருக்கையில் அவனை சரியாக அமர செய்தால். மீண்டும் அவளை அவன் தொட கை எடுத்தபோது பத்து டாலர் கேட்டாள், அவன் இருபதாக கொடுத்தான். அதை பெற்றுக்கொண்ட அவள் மேடையில் ஆடிய நடனத்தை அவன் முன் ஆடினால். மீண்டும் அவளை அவன் தொட கையை தூக்கிய போது “உஷ்....ஷ்...” என அவன் அருகில் பவுன்சர் நின்றான். அவள் நடனம் முடிந்தபோது அங்கே களவாடிக்கொண்டிருந்த வெளிச்சம் ஒளிந்து கலைந்தன. அந்த இடைவெளியில் அவளும் அவனை விட்டு கரைந்து போனாள்...இது ஒரு ஏமாற்று வேலை என்று அறிந்த அவன் இருக்கையைவிட்டு எழுந்தபோது மற்றொருத்தி அவன் முன் வந்தாள் அப்போது அவனுக்கு அவள் பேப்பரில் வரைந்த காகிதமாக காட்சி தந்தாள் ச் ...சே இதல்லாம் ஒரு பொழப்.....,பா என்று நாற்பத்திரெண்டாவது தெருவை கடந்து கொண்டுருந்த வேலையில் இப்படித்தான் இவர்கள் பொழப்பு நடத்தவேண்டிருக்கு என்று நினைத்துக் கொண்டான். இதில் என்ன தவறு இருக்கிறது? நாம் அவளை களவாட நினைத்தபோது அவள் மீது என் கைப்படாமல் எவ்வளவு சாதூர்யமாக தன் கற்புக்கு பங்கம் வராமல் காத்துக்கொண்டாள், என்று நினைத்தபோது உணர்வு சோர்ந்து கலைத்துபோய் ஒரு காப்பி சாப்பிடனும்போல் தோன்றி காப்பியையும் வாங்கி அருந்தும் போது காப்பிக்கு கொடுத்த இரண்டு டாலரை இந்தியன் மணிக்கு கணக்கு பார்த்தான் தொன்னூறு ரூபாய் என்று தெரிந்த அவனுக்கு குடித்தகாப்பி வாந்தியாக வெளியேவந்தன. அதுவரை செலவு செய்தது பல ஆயிரம் என்று நினவு வர மேலும் கலைத்தான், டே....ய் செல....லா ஒங்கெஞ்ச தனத்த அமெரிக்காவுல காட்டாதே அப்பறம் நீ பொணமாதான் திரும்பிவரனும் என்று ஜோசப்சொன்னது நினைவுக்கு வந்தது.

அவன் தங்க வேண்டிய இடமான நியூஜெர்ஸிக்கு செல்ல ஒரு டாக்ஸி-யை வழி மறித்து “I want to go New Jersey” என்றான். அதை கேட்ட டிரைவரும் “yes, you sit” என்ற போது suitcase-ம் கையுமாக உள்ளே அமர்ந்தான். manhattan-ல் தொடர்ந்த பயணம் lingam tonal வழியாக நியூஜெர்ஸி என்ற வரவேற்பு பலகையைக் கடந்து காரில் அமர்ந்து சென்று கொண்டு இருக்கும் போது அவன் சந்தித்த அந்த பெண்கள் நினைவுக்கு வந்தார்கள். கிராமங்களில் வயதுக்கு வந்த ஒரு பெண் இரு வாலிபர்களை பார்த்து சிரித்தால் பொட்டுகட்டினவள் என்று பட்டம் சூட்டும் நம் மக்கள் இவர்களை பார்த்தால் என்ன பட்டம் சூட்டுவார்களோ? நாம் தமிழை தவறாக பயன்படுத்தும் போது புதிய வார்த்தைகள் பிறப்பது போல் இதற்கும் ஏதாவது ஒரு வார்த்தை பிறந்திருக்கும் என்று எண்ணி முடிந்த போது நியூஜெர்ஸியை கடந்து Newark என்ற வரவேற்பு பலகயை கண்ட அவன் சற்று சலனத்துடன் நியூஜெர்ஸியைய் கடந்துவிட்டோமே என்று six track line-ல் 180 KM வேகத்தில் பல கார்களுக்கு மத்தியில் சென்று கொண்டிருந்த டாக்ஸியில் அமர்ந்திருந்த அவன் டிரைவரிடம் “I want to go new jersey” என்றான்.

டிரைவர் அவனை திரும்பி பார்க்காமலே “yes, yes” என்றான். “we cross the new jersey” என்றான் மீண்டும். மீண்டும் டிரைவர் “yes, yes” என்றான் (அவன் ஒரு ரெட் இந்தியன்) . அதை கேட்ட அவனோ “than you stop, stop, stop... என்று கத்திய போது car rear mirror view-வில் செல்லப்பாவை அவன் பார்த்த போது டிரைவரை கண்ட அவன் கறுத்த முகம், குருடான ஒரு கண், மறுகண்ணோ இமை அரை பகுதியை மூடியது போக பாதி மட்டுமே தெரிய எதிரில் வந்து கொண்டிருந்த கார் வெளிச்சத்தில் அவனோ நாம் திரில்லர் படங்களில் பார்க்கும் பேய்களை போல் காட்சி தந்தான். அதை கண்ட செல்லப்பாவோ திடுக்கிட்டு பயத்துடன் மீண்டும் stop என்று கத்த 180 KM வேகத்தில் சென்று கொண்டு இருந்த கார் அவசர வாகன ஒலி போல் கூவி கிரீ...ரீ.....ச்யிட்டு நின்றன....

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.