வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 21

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

பனிபூண்டார் கடந்தவை அனைத்தும் உரைத்து, களைத்துக்கொண்டுடிந்தபோத, மின் விசிறி ஒடிக்கொண்டு இருந்தும் அவர்மீது மழைத்துளிப்போல் வேர்வைத்துளிகள், அவர் உடலில் சொட்டு சொட்டாக வெளியேறிக்கொண்டே இருந்தன. உண்மைகளை அவர் வாய்மொழியாக பெற்றுக்கொண்ட பின் அவருக்கும் காவலாளிகளுக்கும் இடையில் இரும்பு கம்பிகளால் ஆன சுவர்கள் இருந்தன. காவல்நிலையம் மொத்தமும் மயான அமைதியில். மின் விசிறி மட்டும் கரக், கரக் என்று ஒலித்துக்கொண்டு இருந்தது.

அவ்வேலையில் இன்ஸ்பெக்டர், “நீங்க அவுங்கள ஒன்னும் பண்ணாம இங்க வந்து சொல்லி இருந்தீங்கன்னா அவுங்க உள்ளயும் நீங்க வெளியேயும் நிம்மதியா இருந்து இருக்கலாம்”. என்றார். “என்ன சார் பண்றது அவுங்கள பாத்தவுடனே என்ன நடந்துச்சுன்னு எனக்கே தெரியலையே சார்”. இன்ஸ்பெக்டர்: “பெரும்பாலும் எல்லா தவறுகளுமே இப்படித்தான் நடக்குது”. அவ்வேளையில் ஒரு காவலாளி குறுக்கிட்டு “அவெங்கள உயிரோட நாம புடிச்சு இருந்தாமட்டும் என்ன பண்ணி இருக்க முடியும். அவெங்க வந்த ஒருவாரத்துல வெளிய போயிருப்பாங்க. அந்த திருட்டுப்பய ஊர்லே இருந்து எவென் அவெங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல வந்து இருப்பாங்கெ... இன்ஸ்பெக்டர், பெரும்பாலும் நகரங்கள விட கிராமங்கள்லதான், அதிகமா செய்யுற தப்புல இருந்து தப்பிவிடுறாங்க. பனிபூண்டார்... எம்புள்ளயும் போயிட்டான்சார். நானும் உள்ள வந்து எம் சம்சாரமும் நடுத்தெருவுல நிக்க போராளே சார். ஒரு ஈ, எறும்புக்கு கூட தப்பு எலக்காத என்ன கொலைகாரனா ஆக்கிட்டாங்களே சார் என்று அவர் அழ...இன்ஸ்பெக்டர் அவரைப்பார்த்து “அழாதேங்க நாம மட்டும் நல்லவனா இருந்தா பத்தாது நம்மள சுத்தி இருக்கிறவங்களும் நல்லவங்களா இருக்கனும். நீ திருந்துனா நாடு திருந்தும்னு சொல்றதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை கெடையாதுங்க... நாம நேர்மையா இருந்தா அடுத்தவனுக்கு பொறாமையா இருக்கு. நாம கஷ்டப்பட்டு உழைச்சா அடுத்தவனுக்கு அது நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுக்கிறதா உணர்றாங்க.

ஏன் ஒம் மகன கொலை பண்ணினாங்கெ. பனிபூண்டார் குறுக்கிட்டு “நான் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்ச ஆறு ஏக்கர் நெலத்துக்காக. “அதா....ன் அவெங்க உழைக்க தயாரா இல்ல, அவெங்க மட்டும் இல்ல இப்ப நெறைய பேர் அப்படிதான் இருக்காங்க அதுக்கு தகுந்தாப்புல.. அவன் அவனுக்கு தேவையான எல்லாம் பிரியா கொடுக்குறாங்களே,,,,,! பின்ன எப்படி இதெல்லாம் நடக்காம இருக்கும்”. பனிபூண்டார், எம் சம்சாரத்த நெனச்சா...தா...ன், சார் என்று அழுது கொண்டே இருக்கிறார். இன்ஸ்பெக்டர் “ நீங்க சட்டத்துக்கு கட்டுப்பட்டுதான் போவனும். ஒங்க மனைவிய பற்றிய கவலைய விடுங்க. நல்ல முதியோர் இல்லத்துல சேர்த்துவிட்டு நான் பாத்துக்கிறேன். பனிபூண்டாரோ “ அதுபோதும்சாமி நீங்கதான் ஏ,,,,ஞ்சாமி என்று, இன்ஸ்பெக்டர் நின்ற திசையை பார்த்து தரையை தொட்டு கும்பிட, காவலாளிகள் அனைவரும் அவர் அவர் நாற்காலிகளில் அமர்கின்றனர்.

கிராமமே இருள் சூழ்ந்து சாமுக்கோழி கூவுர வேலையில் சாமிஅய்யாவும், சாரதாவும் காமப்போராட்டத்தால் கூடல் கழிந்து அவள் மீது படுத்திருந்த அவனை “எழுந்துறிங்க பொணமா கனக்கிறீங்க... என்று அவனை தள்ள அவனும் அவளைவிட்டு விலகி படுத்துக் கொண்டே......... ”இதுல இருக்கிற சந்தோசம் வேரயெதுல இருக்கு சொல்.....லு, நீயும் நானும் எலியும் பூனையுமா அப்ப அப்ப கடிச்சுக்கிட்டாலும், உன்னபிரிஞ்சு நா இருந்தது இல்ல. என்ன பிரிஞ்சு நீ இருந்தது இல்ல. ஒலச்சு கலச்சநானும், ஒடா தேஞ்சநீயும், இந்தமாரி நேரத்துலதான் நிம்மதியா இருக்க முடியுது, ஆமாம் இப்ப முடிஞ்ச ஒடனே அப்படிதான் சொல்லுவீங்க காலையில எல்லும் கொல்லுமா இருப்பீங்க. சாயந்தரம் அல்வாவும் கையுமா வருவீங்க. சாமிஅய்யா: நீ மட்டும் என்னா பாலையும் படுக்கையும் ரெடி பண்ணாமயா இருக்கே. சாரதா: எனக்கு ஒரு ஆசைங்க... சொல்லு.... இப்படியே செத்து போயிடனுங்க”, ஏண்டி என்ன கமுனாட்டியா விட்டுட்டா......டா?. இல்லெங்க ரெண்டுபேரும் சேர்ந்துதான். அது நம்ம கையில இல்லயேடி . ஏண்டி நான் ஒன்னரொம்ப கஷ்டப்படுத்துறேனா? அது இல்லங்க இந்த நிமிஷத்துல இருக்குற சந்தோஷம் வேற எந்த சமயத்துலயும் இல்லேங்க...அதற்கு சாமியையா.. ஒரு வேல அந்தமாரி நடந்தா எனக்கு சந்தோஷம்தான் என்ன பண்றது. எல்லாம் விதிப்படிதானே நடக்குது.

சாரதா: பாவம் ஊருக்கே ராசாவா இருந்த நல்ல மனுஷன் மணியகாரரு கடைசியில நாயவிட கேவலமா செத்தாரு. ஒருலிட்டர் பால்ல பத்துலிட்டர் தண்ணிய ஊத்துன தனுக்கொடி செத்தபிறகும், அவென் பொண்டாட்டிக்குகூட அவந்தாண்னு தெரியாம தண்ணியில பால காமிச்சு டீ ஆத்திக்கிட்டு இருந்தா... கடைசியில போலீசு வந்து பொணத்த அடையாளம் காமிச்சாங்க. எப்ப பாத்தாலும் காசு காசுன்னு அலஞ்ச ஆரானும் கடைசி வரையும் காலணா காசு கொடுத்து ஒரு கால் சட்டை கூட வாங்கிபோடாம ஒசி கோமனத்தோடவே போய் சேர்ந்துட்டான். வெளிய தெரியாம கட்டுகோப்பா வாழ்ந்த பனிபூண்டார் ஜெயில்லயும் அவர் பொண்டாட்டி ஒரு நிம்சம் கூட ஒயாம வீட்டுக்குள்ளயும் ஒப்பாரி வைச்சுக்கிட்டு இருக்காங்க இந்த ஊருல நாம எப்படிங்க சொச்சகாலத்த கடத்த போறோம்.

சாமிஅய்யா: அதனாலெ தானேடி இந்த ஊரு கண்ணுபடாத எடத்துல நம்ம புள்ளய படிக்க அனுப்பிச்சு இருக்கோம். சாரதா.... “எப்படியோ அவன் காலமாவது நல்லா இருந்தா சரி, ம்.....ம்.....ம்.. கொஞ்சம் தள்ளி படுங்க வேர்வை நாத்தம் தாங்கல ஒங்கமேல. என்று அவள் அவனை விட்டு விலகிபடுத்து அவள் கண்களை மூட இருண்ட வானத்தில் புள்ளியாக வெள்ளி முளைத்த வேலையில் கீழ்வாணம் சிவந்து வெளிச்சம் படரும்போது கண்விழித்த குயில்கூவ.......

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</