வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 20

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

கரைபுரண்டு ஒடும் காட்டாற்று வெள்ளமின்றி நிலவின் வெளிச்சத்தில் வெளிறிய மணலின்மேல் விளாபுடைக்க கள்ளுண்டு ஏப்பத்தின் ஒசை, எட்டுதிசையும் கேட்குமாறு இருவரும் மல்லாந்து படுத்துக்கொண்டு நிலாவை ரசித்துக்கொண்டே உமிழ்நீரை நிலாவை பார்த்து உமிழ, அதுவே பிரிந்து அவர்கள் மீதே மழையாக பொழிய, தான் உமிழ்ந்தநீர் தன்மீதே படுவதை அறியாத அளவுக்கு போதை மயக்கத்தில் தொடர்கின்றனர் அவர்கள் வியாக்யானத்தை...

ஆரான் “தனுக்கொடியண்ணே சாந்தப்பன் மக சோதி தீயா இருப்பாண்னே. அவமேலே எனக்கு எப்பவுமே ஒரு கண்ணுண்ணே. அவள ஒரு நா வர்ரியான்னு கேட்டேண்ணே தனுக்கொடி குறுக்கிட்டு, ஏலே அவ ரொம்ப ராங்கு புடுச்சவளேடா? எப்படிடா..., வந்தா அவ இஷ்டம் வர்லேன்னா எனக்கு நஷ்டமில்லேன்னுதாண்ணே..... நீங்க சொன்னது கரெக்டண்ணே. அவ புடிச்சா பாருங்க என்னைய! தேய்ஞ்சுபோன வெளக்குமாத்தாள பின்னி எடுத்துட்டாண்ணே. நல்லவேல அந்த சமயத்துல யாரும் என்ன பாக்கல . அவகிட்ட இருந்து தப்பிச்சுதானே உங்க டீ கடைக்கு வந்தேன்.

ஆனால் நல்ல ஐடியா கொடுத்தீங்கண்ணே அன்னைக்கி. இன்னைக்கி ஒரு பய அவளகேட்டு இந்த ஊருக்குள்ள வர்ரானா பாரு. தனுக்கொடி, டேய் கொளம்,கொளம்பியிருக்கும் போதுதாண்டா கல்ல போடனும். நானும் ஒரு நா அவள முயற்சி பண்ணினேண்டா... எம் மூஞ்சில துப்பாத கொறதாண்டா. அந்த சமயத்துலதான் நீயும் வந்தே.. நானும் சூடு பறக்க டீ ஆத்துனேன். அந்த நேரத்துல நம்மால பறந்த பொய் சேதிக்கேத்தாப்ள அவளும் பிரசிடெண்ட் மகென் கூட பேசிகிட்டு இருந்தா. அவ ஒருவாட்டி அவன் கூட பேசப்போயி இப்ப என்னடான்னா அவ அப்பென் ஊருவாய அடைக்க நாய் படாதபாடுபடுறான். பதிவிரதை பார்வதியாய் இருக்கிறவ இன்னைக்கு பலர்பேர் பார்வைக்கு ரதியா இருக்குறா.என்றான்.

ஆரான்.. இதே நெலமை நீடுச்சுச்சுன்னா கடைசியில அவள எவனும் கட்டாம ஏ....ன் கிட்டதாண்ணே வரனும். கவலையேபடாதடா நாம அவிழ்த்துவிட்ட பொய்யி ஜல்லிக்கட்டு காளைமாறி ஊரை சுத்தி சுத்திக்கிட்டுவருது. “அண்ணே ஜல்லிக்கட்டுன்னு ஞாபகப்படுத்தாதேண்ணே அத நெனச்சாலே பயமா இருக்கு (என்ற போது பனிபூண்டார் அவர்கள் தலைமாட்டின் அருகே அவர்கள் பார்த்துக்கொண்டு இருந்த நிலவை மறைத்துக்கொண்டு நின்றார். அவர்களோ போதை மயக்கத்தில் நிலவு மறைந்து இருளும் நிறைந்துவிட்டது என்று எண்ணி...) அண்ணெ வாடிவாசல்ல அந்தபேய்கூட்டத்துல அவனை கண்டுபிடிக்கவே படாதபாடு பட்டு அவனைபாத்தப்போ சேப்டியா ஒக்காந்து சைசா இருந்தவனெ, நைசா தள்ளுனப்போ என்ன கணக்கா மாட்டு மேலவிழுந்து கொண்டரொவெ புடிச்சுக்கிட்ட...னே அப்ப வாடிவாசல்ல இருந்த மொத்தகூட்டமும் மாட்ட அடக்க வந்த மாவீரன்னு அடிச்சா....ம் பாருகிலாப்பு அந்த கேப்புலதான் கெடாவ ... ...... மூஞ்சிய மறைச்சுக்கிட்டு குத்தும்போது....மாடு ஒரு துல்லு துல்லுச்சு அப்ப மிஸ்சாயிட்டாண்ணே (தனுக்கொடி குருக்கிட்டு) அதுமட்டுமா அதான் ஒம் முஞ்சிய அவெண் பாத்தானே.... நீ மறச்ச லெட்சனம் அதுலே தெரிஞ்சுதே. நல்ல வேலெண்ணே நீங்க மின்னலாவந்து அவன் மாட்டு கொண்டெருவுமேலே இருக்கும் போதே ஒரே.....ரே.. போடா போட்டீங்க. பின்னே அப்பதானே மாடு முட்டுனதாலதான் செத்தான்னு எல்லாரும் நம்புனாங்க...ஆனா அவென் கடைசியில வயித்துல பாஞ்ச கத்திய புடிச்சுக்கிட்டு ஏ...ண்ணெ குத்தினீங்கன்னு...... கேட்டானே... பாவம்ணே அவென்...

பாவபுண்ணியம் பாத்தா நாம வாழமுடியாதுடா. அண்ணே பணிபூண்டாருக்கு தெரிஞ்சா ஒன்னயும், என்னெயும் விடமாட்டாருண்ணே... தெரிஞ்சாதானே...பல நா திருடன் ஒரு நா மாட்டுவாங்கன்னு சொல்லுவாங்கெண்ணே. அதுக்குள்ள கதையையே முடிச்சுட்டா. “எப்படிண்ணே” கெழத்துகிட்ட நாளைக்கு சொத்த எழுதி கேக்கப் போறேன் கொடுத்தா பொலச்சான், இல்லேன்னா அவெனும் பொணம்தான், என்ற சொற்களை பனிபூண்டார் கேட்கிற வேளையில் தனுக்கொடி ஆரானிடம் நிலா வெளிச்சத்துல மணியென்னான்னு பாரேன்டா என்றபோது சற்று போதை குரைந்த ஆரான் பனிபூன்டார் மறைத்துக் கொண்டிருக்கும் நிலா வெளிச்சத்தை தேட அங்கே யாரோ நிற்பதை அறிந்த ஆரான் யாரது என்றான்.

அவ்வேலையில் ஆரான் அணிந்து இருந்த கடிகாரத்தில் உள்ள ஓரு வினாடிசத்தம் ஒலித்து அடங்குவதற்குள் பனிபூன்டார் மதம் கொண்ட யானைபோல், ஒன்றாக மல்லாந்து படுத்து இருந்த அவர்கள் மீது வேங்கைபோல் பாய்ந்து அமர்ந்தார். அதன் தொடக்கமாக கண் இமைக்கும் நேரத்தில் தன் முதுகுபுறமாக வைத்து இருந்த ராம் நாட்டு அறுவாளை எடுக்கும்போது அவர்கள் இருவரும் தங்கள் மீது அமர்ந்து உள்ளது யார் என்று அறிவதற்குள் தன் கையிலிருந்த அறுவாளால் இருவர் தலைகளையும் சதக்... சதக்... என்ற வெட்டிய சத்தத்தில் வாலிபால் பந்தாக பறந்தன..அரிது அரிது மானிடரா பிறத்தல் அரிது கூன் குருடு செவுடு பேடுனீங்கி பிறத்தல் அரிது, என்ற நம் முன்னோர் மொழிபோல் அறிய மானிடாராய் பிறந்து அற்ப ஆசையால் சொற்ப காலத்தை இழந்து, காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும்தண்ணீர் சத்தம்கேட்டு ஊர்க்குருவி ஊரை கத்திஎழுப்பிய காலம்போய் நிலா வெளிச்சத்தில் வரண்ட மணல் பளிச்சிட, ஊர் அடங்கிய நடுச்சாம வேலையில், அந்தப்பொணம் அணிந்து இருந்த கடிகாரத்தின் வினாடி ஒலி மட்டும், பொணத்துக்கு முன் இங்கே ஜடத்தில் இருந்தேன் என்று உரைத்துக்கொண்டே..... இருந்தன!...

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</