வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


ஒரு மனிதனின் மன நிலையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை படைத்தது இசை. இசையை நேசிக்கும், சுவாசிக்கும் சிலரின் வாழ்க்கை இந்த சமுதாயத்திற்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இசையை தொடர்ந்து கேட்கும் மனிதர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. இசையை உற்று கவனியுங்கள். சாதாரண சப்தங்கள் தான் உங்கள் நாடி நரம்பையே அசைத்து பார்க்கும் வல்லமை படைத்ததாக மாறுகிறது. எப்படி? எந்த ஒன்றையும் சரியான பாதையில் ஒருமுகப்படுத்தி செலுத்தினால் அதனால் இந்த உலகில் அனைத்தையும் வென்று விடலாம் என்பதே இசை நமக்கு சொல்லித்தரும் பாடமாகும்.

மனிதனிப் பொறுத்தவரை யோகா. சப்தங்களை பொறுத்தவரை இசை. மனிதன் செய்யும் யோகக்கலை மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் வாழவைக்கிறது. ஆனால் சப்தங்கள் செய்யும் யோகா இவ்வுலகின் ஆண்ட சராசரங்களையும் கட்டுக்குள் வைக்கிறது. இசையை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக...

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இசைத்துறையை தமிழ் ஸ்டுடியோ தன்னால் இயன்ற வரை பெருமைப் படுத்த முயல்கிறது.

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
இசை
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


லலிதா ராம்

பெங்களூரில் பொறியாளராய்ப் பணியாற்றும் லலிதா ராம் - இசைத் துறையிலும் வரலாற்றுத் துறையிலும் ஆர்வலர், ஆய்வாளர். இவ்விரு துறைகளைப் பற்றியும் இங்கு தொடர்ந்து எழுதவுள்ளார். திரைப்பட இசையில் பொதிந்து இருக்கும் பாரம்பரிய இசை நுணுக்கங்களைப் பற்றி இணையத்தில் எழுதத் தொடங்கி விமர்சனங்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கருவிகள் பற்றி கட்டுரைகள் பல இணையத்தில் எழுதியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியிட்ட 'இசையுலக இளவரசர் ஜி.என்.பி' என்ற இவரது நூல், ஜி.என்.பாலசுப்ரமணியம் என்ற கலைஞனின் இசை வாழ்க்கையை விரிவாகப் படம்பிடித்துள்ளது. ஹிந்து, தினமணி, தினத் தந்தி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் இந் நூலைப் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தில் ஆய்வாளராய் விளங்கும் இவர், நண்பர்களுடன் சேர்ந்து நான்கு வருடங்களாக வரலாறு.காம் என்ற இணைய மாத இதழை நடத்தி வருகிறார். கல்வெட்டுகள், கட்டிடக் கலை, சிற்பங்கள், ஓவியங்கள், பயணக் கட்டுரைகள் என பலதரப்பட்ட கட்டுரைகள் தென்னிந்திய வரலாற்றை இணையத்தில் உலவ விடுகின்றன. முனைவர் கலைக்கோவன் எழுதிய மூன்று வரலாற்று நூல்களையும், தொல்லியல் இமயம் ஐராவதம் மகாதேவனின் பணிப் பாராட்டு மலரையும் வரலாறு.காம் வெளியிட்டிருக்கிறது.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS இசை TS லலிதா ராம் தொடர்கள் வாயில்

தூம பத்ர தூளி

லலிதா ராம்  

ஆளை மயக்கச சொக்குப் பொடி போடுவது வழக்கம். ஆனால் சங்கீதத்தால் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை மயக்கியவர்களை ஆராய்ந்து பார்த்தால், அவர்களுக்குக் கைகொடுத்தது சொக்குப் பொடியல்ல, மூக்குப்பொடி என்று தெரிய வரும். மும்மூர்த்திகளுக்கும் மூக்குப் பொடிக்கும் சம்பந்தம் உண்டா என்று நான் அறியேன். மும்மூர்த்திகளுக்குப் பிறகு வாழ்ந்த இசை வல்லுனர்களைப் பற்றி நமக்குக் கிடைக்கும் தகவலின்படி, மனம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யரே மூக்குப் பொடிக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள உன்னத பந்தத்தை தொடங்கி வைத்த மஹானுபாவர்.

மனம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யர் என்றதும் முதலின் நினைவுக்கு வருவது அவரது குருவான 'தியாகராஜர்', அதன் பின் நினைவுக்கு வருவது, அவரது இரு பிரதான சிஷ்யர்களான மஹாவைத்தியநாத சிவனும் பட்டணம் சுப்ரமண்ய ஐயரும். மஹா வைத்தியநாத ஐயர் மூக்குப்பொடி போட்டதற்கான தகவல் ஏதும் இல்லாததால், அவரை உடைப்பில் தூக்கி போட்டுவிட்டு, பட்டணம் சுப்ரமண்ய ஐயரைப் பார்ப்போம். குருவிடமிருந்த கற்ற அவரது சங்கீதம் எப்படி உலகப் பிரசித்தியை அடைந்ததோ அதே அளவிற்கு குருவின் தாக்கத்தால் விளைந்த அவரது மூக்குபொடியின் மகத்துவமும் பெரும் பிராபல்யத்தையடைந்தது.

குருவும் சிஷ்யரும் ஒரு பிரயாணத்தின் பொழுது பொடிமட்டை கிடைக்கா அத்துவானக் காட்டில் மாட்டிக் கொண்டனர். கையிருப்பிலிருந்த பொடி அத்தனையும் தீர்ந்த போக, எத்தனை காசு கொடுத்தாலும் பொடி கிடைக்காத நிலை. பார்த்தார் சிஷ்யர், தனக்குப் பிடித்த இரு விஷயங்களுள், ஒன்றின் மேலிருந்த ஏக்கதை மற்றொன்றின் வழியாய் வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதாவது, அவருக்குப் பிடித்தமான பொடி இல்லாத ஏக்கத்தை, அவருக்கு பிடித்தமான சங்கீதத்தின் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தார். இப்படியாகப் பிறந்ததுதான் "தூம பத்ர தூளி" என்ற சாவேரி ராகக் கீர்த்தனை. (தூமம் என்றால் புகை, பத்ரம் என்றால் இலை, தூளி என்றால் பொடி).

அந்த பாடலில், "ஒரு சிட்டிகை பொடி, ஆண்டியையும் அரசனையும் பாரபட்சமின்றி பரவசப்படுத்தும். ஏ பொடியே! உன்னை இயன்றவரை கையிருப்பில் வைத்திருப்பது உத்தமம். அப்படியில்லாத பட்சத்தில், இருப்பவரிடம் கையேந்தி பெற்றாலும் பாதகமில்லை. நீர், காற்று, நெருப்பு போல நீயும் ஒரு அத்தியாவசியப் பொருள்! என்னய்யன் திரு வேங்கடமுடையான் அருளிய பிரசாதம் நீ!" என்கிறார் பட்டணம்.

கர்ணனனுக்குக் கவச குண்டலத்தைப் போல, "பட்டணம் சுப்ரமண்ய ஐய¨ருக்கு அவரது பொடி-டப்பா என்று கூறினால் அது மிகையாகாது. ஒருமுறை, மைசூர் மகாராஜா முன்னிலையின் பட்டணம் பாடிக் கொண்டிருக்கும் பொழுது, தனது ஆருயிர் பொடி-டப்பா தம்மை விட்டு நீங்கியிருப்பதை உணர்ந்த 'பட்டணம்', பதறிப் போய், பாட்டை நிறுத்திவிட்டுப் பொடி-டப்பாவைத் தேட ஆரம்பித்துவிட்டார். இதனைப் பார்த்த மகாராஜா, அவருக்கு ஒரு 'தங்க பொடி டப்பாவை' பரிசாகக் கொடுத்ததுமே சாந்தமடைந்து கச்சேரியைத் தொடர்ந்தார்.

பட்டணம் என்ற prefix, "பட்டணம் பொடி" போட்டதால்தான் வந்ததோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. சேலம் மீனாட்சி அம்மாள் என்ற பிரபல நடனக் கலைஞரின் புதல்விகளுக்குப் பாட்டு கற்று கொடுக்க வேண்டி, சென்னைப்பட்டணத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்ததே அவர் பெயருக்கு முன் "பட்டணம்" முளைக்கக் காரணம். தன் குருவிடமிருந்து கற்றதை தனது சிஷ்யருக்குச் சேர்ப்பதை தன் கடைமையாகக் கருதிய 'பட்டணம்", தனது பிரதான சிஷ்யரான 'பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு, 'முகாரி ராக மகிமையுடன்' 'முக்குப் பொடியின் மகோன்னதத்தைப்' பற்றியும் போதித்தார்.

கர்நாடக இசையை, விறுவிறுப்பாகவும் விவகாரத்துடனும் கச்சேரியில் கொடுக்க ஒரு அற்புதமான முறையை வகுத்து முன்னோடியாய் விளங்கிய அரியக்குடி இராமனுஜ ஐயங்கார், மூக்குப் பொடி விஷயத்திலும் முன்னோடியாகவே விளங்கினார். "இன்றைய கச்சேரியில் எத்தனை புது கீர்த்தனங்கள் அரியக்குடி பாடினார்" என்று கணக்கு வைத்திருக்கும் பல இரசிகர்களைப் போலவே, "இன்றைய கச்சேரியில் எத்தனை முறை ஐயங்கார்வாள் பொடி போட்டார்" என்று கணக்கு வைக்கவும் ஏராளமான இரசிகர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு இரசிக சிரோண்மணி, முதல் வரிசையில் உட்கார்ந்த படி, தாளத்தில் வரும் எண்ணிக்கைகளை எல்லாம் சட்டை செய்யாமல், அரியக்குடியின் 'பொடிக் கணக்கை' மட்டும் இம்மிபிசகாமல் கவனித்து, பக்கத்திலிருந்தவரிடம் அவ்வப்பொழுது வரும் எஸ்.எம்.எஸ் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட்டைப் போல சொல்லிக் கொண்டிருந்தார். இதை கவனித்துக் கொண்டிருந்த அரியக்குடி, வழக்கம் போல பாடல் முடிந்ததும் பொடியை உறிஞ்சிவிட்டு, "இப்போ எட்டாவது தடவை. கணக்கு சரியா?, இனிமேலானும் பாட்டை கேளுங்காணும்" என்றாராம். என்னதான் முன்னோடி என்றாலும், சட்டியில் இல்லாமலா அகப்பையில் வரும்? அரியக்குடி வேறு யாருமில்லை, பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் சிஷ்யர்தான்.

அரியக்குடியின் சிஷ்யையான "திருகோகர்ணம் கனகாம்புஜம்" ஒரு கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த பொழுது, அவரது மூக்குத்தியின் திருகு சற்றே கழன்றுவிட, அவசர அவசரமாய் பாடிக்கொண்டிருந்த பாட்டை முடித்துவிட்டு, இடது கையால் மூக்கைப் பிடித்துக் கொண்டு, சற்றே கழுத்தைத் திருப்பியபடி வலது கையால் மூக்குத்தியை சரி செய்தாராம். இதனைப் பார்த்த இரசிகர்கள், அரியக்குடியின் அரிய கச்சேரி பாணியை பின்பற்றவதற்காக மூக்குப்பொடி போடுவதாக நினைத்து ஆரவாரம் செய்தார்களாம். "அரியக்குடியின் தாக்கத்தை, அவரது மானசீக சிஷ்யரான ஜி.என்.பி-யின் இசையில் எத்தனைத் தெளிவாகப் பார்க்க முடியுமோ, அதே அளவிற்கு, அவரது மூக்குப்பொடி போடும் இலாவகத்திலும் காண முடியும்", என்று அவர் கச்சேரியை நேரில் கேட்ட பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நாகஸ்வரச் சக்கரவர்த்தி இராஜரத்னம் பிள்ளையின் சங்கீத வின்யாசம் மற்றும் பெரியதன்று, அவரது சங்கீதத்துக்குத் துணையிருந்த பொடி-டப்பாவும் மிகப் பெரியதாக விளங்கியது. கர்நாடக சங்கீத உலகின் பீஷ்மராக விளங்கிய செம்மங்குடி சீனிவாச ஐயரின் சரீரத்தை விரும்பி அடிக்கடிப் பிடித்துக் கொண்ட சளியால் அவரது சாரீரம் பாதிக்கப்படாமல் காப்பற்றப் பெற்றது 'மூக்குப் பொடி' என்னும் அருமருந்தால்தான். செம்மங்குடியின் பிரதான சிஷ்யரான 'சங்கீத கலாநிதி' டி.எம்.தியாகராஜன் குருவின் சங்கீதத்தை கிரஹித்ததைப் போலவே பொடியையும் கிரஹித்துப் பெரும் புகழ் பெற்றார். அபஸ்வரத்தைத் தொடாமல் இலாவகமாய் வில்லைப் போடுவதைப் போலவே, மீசை மேல் படாமல் இலாவகமாய் பொடி போடும் திறமை படைத்த 'பாப்பா வெங்கடராமையாவின்' திறைமை உலகப் பிரசித்தி பெற்றது.

கர்நாடக சங்கீதத்தின் தலைசிறந்த கலைஞர்களாய் விளங்கியவர்களிடமிருந்து இசையை மட்டுமின்றி 'மூவுலகும் மெச்சும் மந்திரப் பொடியாம் மூக்குப் பொடியின் மகோன்னதத்தையும்', இன்றைய பாடகர்கள் எடுத்துக் கொண்டால், கர்நாடக சங்கீத உலகின் பொற்காலம் மீண்டும் வருவதில் எள்ளளவும் ஐயமில்லை.

தொடர்ந்து இசைப்போம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</