வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 

 

 

 

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS அரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - கரிகாலன்

விக்ரமாதித்தன் நம்பி  

கரிகாலன்

வீடு திரும்புமவன் பணிஉடுப்புகளைக்
களையச் சிரமப்படுகிறான்

தோலோடு ஒட்டியிருக்கும் உடைகளை
உரித்தெடுக்கும் போது குருதித்துளிகள்
கொப்பளித்து விடுகின்றன

அலுவலகச் சாயல் அப்பிக் கிடக்கும் முகத்தை
தண்ணீரில் நீண்ட நேரம் கழுவுகிறான்

மாலைப் பொழுதுக்கேற்றவனாய் தயாரிக்கும் வண்ணம்
மனைவி கொடுக்கும் பானத்தை அருந்துகிறான்

நினைவு மடிப்புகளின் வெவ்வேறிடங்களில்
சேமித்து வைத்திருக்கும் வார்த்தைகளில்
இல்லத்தில் உபயோகிக்க வேண்டியவற்றை
மீட்டுக்கொணர முயல்கின்றான்
பகல்முழுவதும் உதடுவரை வந்து
பயன்படாத வார்த்தைகள்
இடம் குழம்பிக் கிடக்கின்றன
வழிதவறி வீட்டுக்குள் புகுந்துவிடும்
நச்சு உயிரியைப் போல் சமயங்களில் அவை
குழந்தைகளைத் தீண்டிவிடுகின்றன
அலுவலக அறையிலிருந்து முற்றிலும் வேறாக்கி
தனதறையை வடிவமைத்திருப்பவன்
இரவுப் பொழுதுக்கு மாறும் அவசரத்தில்
சிறகுகளுக்குப் பதிலாகக் கொம்புகளும் வாலும்
முளைத்துவிடுமோவெனத் திகிலடைகிறான்
இரவுக்கு அவனை இசையவைக்கும்
மாமருந்தின் இடம்தேடி அலைகிறது
அவனது வாகனத்தின் வெளிச்சவிழி.
- கரிகாலன்

(உயிர் எழுத்து, பிப்ரவரி 2010)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிமொழி கொண்டது நம் தமிழ். நவீன தமிழ்க் கவிமொழியாளனுக்கு இது பலம். சவால் பலவீனம். காலத்துக்கும் மனிதவாழ்வுக்கும் மொழிக்குமான உறவைப் பேணுவதில் நவீன தமிழ்க்கவிஞர்கள் அப்படியொன்றும் சோடை போய்விடவில்லை.

-சி. மோகன்

(அங்கீகரிக்கப்படாத கனவின் வலிநிறைந்த இடமாகப் படைப்பாளி இருக்கிறான் நேர்காணலிலிருந்து)

ஆறு பத்திகளாலான விவரிப்புகளாலேயே வடிவமைக்கப்பெற்ற வாழ்வியல் கவிதை.

வீடும் அலுவலகமுகமாக வாழ்பவனின் கதை.
இரண்டும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை.
வீட்டில் புழங்கும் வார்த்தைகளும் பணியிடத்தில் பயன்படுத்தும்
சொற்களும் வேறுவேறானவை.
அங்கிருந்து இங்கு வருகையிலும் இங்கிருந்து அங்கு
போகையிலும் மாறிக்கொண்டிருக்க வேண்டும், மனசு.
முதல் மூன்று பத்திகளிலும் அவனது சிரமங்களும்
அவஸ்தைகளும் விவரிக்கப்படுகின்றன.
நான்காவது பத்தி மாலைப்பொழுதுக்கேற்றவனாய் தயாரிக்கும்
வண்ணம் மனைவி கொடுக்கும் பானத்தை அருந்துகிறான்.
ஐந்தாவது பத்தி பூராவும் வார்த்தைச்சிக்கல்
பற்றித்தான் பேசப்படுகிறது.

அலுவலக அறையிலிருந்து முற்றிலும் வேறாக்கி தன்குறையை
வடிவமைத்திருப்பவன் அவன்.
உணர்வுக்கூர்மை?
இரவுப்பொழுதுக்கு மாறும் அவசரத்தில்/சிறகுகளுக்குப்
பதிலாகக் கொம்புகளும் வாலும்/முளைத்துவிடுமோவெனத்
திகிலடைகிறான்.
ஏன் இப்படி. புரிந்துகொள்ள முடிகிறது, இல்லையா.
இரவுக்கு அவனை இசையவைக்கும்
மாமருந்தின் இடம்தேடி அலைகிறது
அவனது வாகனத்தின் வெளிச்சவிழி.

இந்த வரிகள் கவிதையின் உச்சம்.
அதென்ன மாமருந்து. விளங்குகிறதா.

இந்த உலகியல் வாழ்க்கையில் இதன் முரண்களுக்கு நடுவில், இதன் பாடுகளூனூடே - தன்னைப் பொருத்திக்கொள்ள ஒருவன் படும் சிக்கல்களைப் பேசுபொருளாகக் கொண்டிருப்பதனாலும் அந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லியிருப்பதனாலும் இந்தக் கவிதை பெறுமதியுடையதாகிறது.

இந்த இடத்துக்கு வர இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது.
வந்தவரையில் சந்தோஷம்.
காலில் சிக்கிய மூலிகைச்செடியை நீரூற்றி
வளர்க்கவேண்டும் இனி அவர்.

வாழ்த்துகள் கரிகாலன், தூய அன்போடு.

கவிதை பிடிபட்ட பிறகு, சிந்தை முழுக்க, செயல் முழுக்க அதுவே நிறைவதாக, மீண்டும் வாழ்த்துச் சொல்கிறேன் இளைய நண்பனே.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</