வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

வாழ்வில் நாம் நினைக்கும் பல இலக்குகளை நம்மால் அடைய முடிவதில்லை. சரி நம்மால் முடியாது இந்த முயற்சியை கைவிட்டு விடுவோம் என நினைக்கும் தருவாயில் புதிய நம்பிக்கைகள் தோண்றி நம்மால் சாதிக்க முடியும் என்ற சிந்தனைக்கு நம்மை கொண்டு செல்கிறது. உண்மையில் நம்முடைய இலக்குகளை அடைய இந்த புதிய நம்பிக்கைகள் எந்தவகையிலும் உதவுவதில்லை. மாறாக நம்மை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் ஒரு நிலையற்ற வாழ்கை வாழ இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. நம்மை நாம் தோற்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ள இயலாது. அதே சமயத்தில் நம்மை வெற்றியாளர் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் நாம் காலம் தள்ளிக்கொண்டிருக்க இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு துன்பமிக்க உணர்வை நாம் கற்பனை செய்து பார்க்கின்றோம். ஆனால் பலர் இதை தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடும் நபர்கள்.

நாம் லாபம் சம்பாதித்துவிட்டோம் என்று சந்தோஷம் கொள்வதும், மறுநாளே நஷ்டம் அடைந்து துவண்டுவிடுவதும், அதற்கு அடுத்த நாள் மீண்டும் லாபம் சம்பாதித்து... இப்படியே லாபம், நஷ்டம் என்று மாறி மாறி நிகழும் நிகழ்வில் நிலையான சந்தோஷமும் இல்லாமல், நிலையான துக்கமும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் துவண்டுபோவார்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களிடம் பல திட்டங்கள் இருக்கும். ஆனால் எந்த செயல்பாடுகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆற்றில் விழுந்த இலைபோல, சந்தை செல்லும் போக்கில் அடித்துச் செல்லப்படுவார்கள். அப்போது ஏற்படும் இடர்பாடுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.

பங்குச்சந்தையில் மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கின்றாகள்.

முதலாமவர்: அவருக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விபரமும் தெரியாது. முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள்.

இரண்டாம் நபர்: தெரியாமல் முதலீடு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்தவர்கள். அந்த தொகையை எப்படியாவது பங்குச்சந்தையில் இருந்தே மீட்க வேண்டும் என்று போராடுபவர்கள்.

மூன்றாம் நபர்: பங்குச்சந்தை பற்றி அனைத்து விசயங்களும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க பலவிதமான வித்தைகளை கற்று வைத்திருப்பார்கள். ஆனாலும் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க இயலாமல் இருப்பவர்கள்.

மேற்கண்ட இந்த மூன்று நபர்களுக்குமே பிரச்சனை ஒன்றுதான் சந்தை அவர்களின் பிடியில் இருக்காது. சந்தை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையை நானும் உணர்ந்திருக்கின்றேன். இந்த சுழற்சி முறையில் இருந்து தப்பிக்க பல காரணங்களை, பல காரியங்களை தேடியிருக்கின்றேன். அகப்பட்ட விசயங்களை பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
.
தோற்றவர்களின் சிந்தனை ஒன்றிணையும் போது, அந்த சிந்தனை அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என்பது எனது நம்பிக்கை. எனவே உங்களின் சிந்தனைகளையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
காணாமல் போன காளையைத் தேடி ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


தூங்கும் காளைகள் – SIDEWAYS TREND

பூபதி  

உங்களோடு சில வார்த்தைகள்:

சில நாட்களாக ஒற்றைத் தலைவலியின் கை ஓங்கியிருந்ததால் தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது மன்னிக்கவும்.

நாம் இணையத்தளத்தின் மூலம் மட்டுமே இணைவதால் உங்களை பற்றி நான் புரிந்துகொள்ளவும் என்னைப்பற்றி நீங்கள் புரிந்துகொள்ளவும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. நான் சொல்வது உங்களுக்கு புரியாமல் இருக்கலாம் அல்லது நான் நினைத்ததைவீட நீங்கள் விசயம் தெரிந்தவராகவும் இருக்கலாம். இந்த முரண்பாட்டை போக்க உரையாடல் அவசியப்படுகிறது. அவ்வப்போது நாம் உரையாடிக்கொள்வதன் மூலம் நாம் எதை நோக்கி போகிறோம் என்பதை தெளிவுபடுத்துக்கொள்ள முடியும் என்பதால் உங்களோடு இந்த உரையாடல் அவசியப்படுகிறது. ஓவ்வொரு முறை கட்டுரை வெளியான பிறகும் கீழ்க்கண்டமாதிரி மூன்று வகையான கருத்துக்களை நான் காண்கிறேன்.

1. அருமை, எனக்கிருந்த சந்தேகங்களை போக்கிவிட்டது இந்த கட்டுரை.

2. அதெல்லாம் சரி எந்த பங்குகளை வாங்கலாம் என்பதை பற்றி எழுதுங்கள்.

3. நானும் பங்குச்சந்தையில் இறங்கப்போகிறேன்.

இந்த மூன்று கருத்துக்களுக்கு நான் கீழ்க்கண்டமாதிரி பதில் அளிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்,

1. சந்தேகங்களை போக்கிவிட்டதா! – நன்றி

2. எந்த பங்குகளை வாங்கலாம்? – இதோ இந்த இந்த பங்குகளை வாங்குகள்.

3. பங்குச்சந்தையில் இறங்கப்போகிறேன் – தாராளமாக இறங்குகள்

இப்படி நான் பதில் அளித்தால் என்னவாகும்? நான் கூடு தளத்தில் எழுதிக்கொண்டிருப்பதைப்போல நீங்களும் ஏதாவது ஒரு தளத்தில் உங்களின் சோகக்கதையை எழுதிக்கொண்டிருப்பீர்கள். அதுதான் நடக்கும்.

1. இரண்டு மூன்று கட்டுரை உங்களின் சந்தேகங்களை தெளிவாக்கிவிட்டதா/தெளிவாக்கிவிடுமா என தெரியவில்லை எனவே தயவு செய்து முழுமையாக கற்றுக்கொண்ட பிறகு தெளிவாகி விட்டதா என தெரிந்துகொள்ளுங்கள் ஏனெனில் இனி அடுத்தடுத்து வரும் கட்டுரைகள் உங்களை அதிர்ச்சியடையச் செய்யலாம்.

2. எந்த பங்குகளை வாங்கலாம் என நான் சொல்வது மிகவும் சுலபமான விசயம். ஆனால் இந்த தொடரின் நோக்கமே அப்படி ஒரு செயலே அனாவசியமானது என்பதை உணர்த்துவதுதான். எந்த பங்குகளை வாங்கலாம் என நீங்களே தீர்மானித்துக்கொள்ளக்கூடிய தகுதியை உருவாக்குவதுதான் இந்த தொடரின் நோக்கம்.

3. தாராளமாக பங்குச்சந்தையில் இறங்குங்கள் ஆனால் இரண்டு மூன்று கட்டுரைகளை படித்துவிட்டு வந்த ஆர்வத்தில் முடிவெடுத்திருந்தால், தயவு செய்து பொறுமையாக முழுமையாக கற்றுக்கொண்ட பிறகு களத்திற்கு வாருங்கள்.

தயவுசெய்து இதை ஆணவம் என்றோ அறிவுரை என்றோ எடுத்துக்கொள்ள வேண்டாம். நண்பர்களான நமக்கிடையே சிறு உரையாடல் அவ்வளவுதான்.

நன்றி

பா.பூபதி.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

தூங்கும் காளைகள் – SIDEWAYS TREND

”தூங்கும் காளைகள்”, இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நம் ”தூக்கத்தை கெடுக்கும் காளைகள்”.

நீங்கள் முன்பு படித்த Up trend மற்றும் Down trend-ன் நோக்கத்தை பொய்யாக்கும் விதமான செயல்பாட்டிற்குத்தான் Sideways trend என்று பெயர். அதாவது நீங்கள் Up trend-ல் விலை அதிகரிக்கும் என காத்திருப்பீர்கள், அதைப்போல Down trend-ல் விலை மேலும் குறையும் என காத்திருப்பீர்கள் ஆனால் உங்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விலை அதிகரிக்கவும் செய்யாமல் விலை குறையவும் செய்யாமல் பக்கவாட்டில் பயணம் செய்ய ஆரம்பிக்கும். அதற்கு உலகச்சந்தையின் சோர்வு காரணமாக இருக்கலாம் அல்லது காளையின் சொந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்.

Up trend/Down trend-ன் அடிப்படை விதி

Sideways trend-ஐ பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முதலில் Up trend மற்றும் Down trend-ன் அடிப்படையான விதியை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். முதலில் Up trend-ன் அடிப்படை விதியை பார்ப்போம்:

இந்த படம் நீங்கள் ஏற்கனவே படித்த Up trend-ல் பயன்படுத்தியதுதான் எனவே Up trend-ஐ சற்று ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

UP TREND

மேற்கண்ட படத்தில் உள்ளதுபோல எண் 2-ல் இருந்து எண் 3-க்கு ஒரு கோடு வரைந்து, பின்னர் எண் 3-லிருந்து 4-கிற்கு ஒரு கோடு வரைந்து, அந்த இரண்டு கோடுகளை இணைக்கும் விதமாக மூன்றாவதாக அதாவது காளை மேல் நோக்கி பயணம் செய்யக்கூடிய பாதையான மூன்றாவது கோட்டை (நீள வண்ணத்தில் உள்ள கோடு) வரைந்து விட்டீர்கள். ஆக Up trend-ஐ கண்டு பிடித்துவிட்டீர்கள், விலை அதிகரிக்கும் என்பதால் எண் 4 உள்ள இடத்தில் பங்குகளையும் வாங்கிவிட்டீர்கள். சரி இங்கு என்ன பிரச்சனை வந்துவிடப்போகிறது! பிரச்சனை என்ன வென்றால் காளை நான் மேல் நோக்கித்தான் பயணிக்கின்றேன் என்பதை நிரூபிக்க ஒவ்வொரு முறையும் தன்னுடைய முந்தைய உச்ச நிலையை உடைத்துக்கொண்டு முன்னேற வேண்டும். அப்படி உடைத்துக்கொண்டு முன்னேறினால் மட்டுமே அதற்கு Up trend என்று பெயர்.

கீழே உள்ள படத்தை பார்த்தால் தெளிவாக புரியும்:

படத்தில் எண் 1 உள்ள இடம் வரை அதிகபட்சமாக விலை அதிகரித்து பின்னர் சற்று கீழே இறங்கியிருக்கிறது. பின்னர் மீண்டும் மேலே செல்லும் போது எண் 1 உள்ள இடத்தை தாண்டி, விலை புதியதாக ஒரு உச்ச நிலையை அடைந்திருக்கிறது அதாவது எண் 2 உள்ள இடம். பின்னர் மீண்டும் சற்று கீழே இறங்கிவிட்டு மறுபடியும் மேல் நோக்கி செல்லும் போது எண் 2 உள்ள நிலையையும் தாண்டி மீண்டும் புதியாதாக ஒரு உச்ச நிலையை அதாவது எண் 3 உள்ள இடத்தை அடைந்திருப்பதை கவணியுங்கள். சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய சாதனைகளை தானே முறியடிப்பதைப்போல, பங்கின் விலை ஒவ்வொரு முறையும் தன்னுடைய முந்தைய உச்சகட்டமான நிலைகளை உடைத்துக்கொண்டு முன்னேறினால் மட்டுமே அதற்கு Up trend என்று பெயர். சரி அப்படி முந்தைய உச்ச நிலைகளை உடைத்துக்கொண்டு முன்னேறாவிட்டால்!!! அதற்குப்பெயர்தான் Sideways trend.

DOWN TREND

முன்பே சொன்னபடி Uptrend-ஐ சரியாக புரிந்துகொண்டால் Down trend மிகவும் சுழபமாக புரிந்துவிடும். ஏனெனில் Uptrend-ன் தலைகீழ் வடிவம்தான் Down trend.

மேலே உள்ள படத்தில் விலை முதலில் இறங்கி பின்னர் சற்று அதிகரித்திருப்பதை கண்டதும் அடடா இது Down trend-க்கு உரிய வடிவமாயிற்றே என்பதை உணர்ந்து மேற்கண்டமாதிரி மூன்று கோடுகளை வரைந்து காளை கீழ் நோக்கி பாயும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றீர்கள். இங்யேயும் ஒரு பிரச்சனை உள்ளது. காளை நான் உண்மையிலேயே கீழ் நோக்கித்தான் பாய்கின்றேன் என்பதை நிரூபிக்க தன்னுடைய முந்தைய குறைவான விலையை தாண்டி மேலும் குறைவான விலையை அடைய வேண்டும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்:

எண் 2 உள்ள இடம்தான் இந்த பங்கின் குறைவான விலையாக இருந்திருக்கிறது பின்னர் எண் 3 உள்ள இடம் வரை விலை அதிகரித்து பின்னர் மீண்டும் கீழ் நோக்கி வரும் போது என்ன நேர்ந்துள்ளது என்பதை கவணியுங்கள். எண் 2 உள்ள இடத்தின் விலையை தாண்டி எண் 4 வரை விலை குறைந்துள்ளது அதாவது புதியதாக ஒரு குறைவான விலை உருவாகி உள்ளது. பின்னர் மீண்டும் விலை சற்று அதிகரித்து மறுபடியும் கீழ் நோக்கி வரும்போது எண் 4 உள்ள இடத்தின் விலையை தாண்டி எண் 5 உள்ள இடம் வரை விலை கீழ் நோக்கி சென்றுள்ளது அதாவது மேலும் ஒரு விலை குறைவான நிலையை அடைந்துள்ளது. இப்படி ஒவ்வொரு முறையும் தன்னுடைய முந்தைய குறைவான நிலையை உடைத்துக்கொண்டு கீழ் நோக்கி முன்னேறி புதிய புதிய விலை குறைவான நிலைகளை அடைந்தால் மட்டுமே அதற்கு Down trend என்று பெயர். சரி முந்தைய குறைவான நிலையை உடைத்துக்கொண்டு கீழ்நோக்கி காளை பாயாவிட்டால்!!! அதற்குப்பெயர்தான் Sideways trend.

Side ways trend உருவாகும் விதம்:

இந்த படம் ஒரு Up trend-க்கான படம். இதில் நீங்கள் Up trend-க்கான கோடுகளை வரைந்துகொண்டு, எண் 2 உள்ள இடத்தில் பங்குகளை வாங்குகிறிரீகள். விலையானது தன்னுடைய முந்தைய உச்சகட்ட விலையான எண் 1 உள்ள இடத்தை தாண்டி எண் 3 உள்ள இடம் வரை அதிகரித்து நான் மேல் நோக்கித்தான் செல்கிறேன் என்பதை உறுதி செய்கிறது. இதனால் உங்களுக்கு நல்ல இலாபம் கிடைகிறது. வாங்கிய பங்குகளை விற்று விட்டு மீண்டும் காத்திருகின்றீர்கள். விலையானது மீண்டும் குறைந்து எண் 4 உள்ள இடம் அதாவது காளை மேல் நோக்கி பயணம் செல்வதற்காக நீங்கள் வரைந்த மூன்றாவது கோட்டை தொட்டதும் மீண்டும் பங்குகளை வாங்குகின்றீர்கள். அங்கிருந்து விலை மேல் நோக்கி செல்கிறது ஆனால் தன்னுடைய முந்தைய உச்சகட்ட விலையான எண் 3 உள்ள இடத்தை தாண்டி செல்ல முடியாமல் பக்கவாட்டில் பயணம் செய்வதை கவணியுங்கள்....! இப்படி தன்னுடைய முந்தைய நிலைகளை உடைத்துக்கொண்டு முன்னேற முடியாமல் போவதை Failed rally என்று அழைப்பார்கள். ஒரு Up trend, Sideways trend-ஆக இப்படித்தான் மாற்றமடைகிறது.

இது Down trend-க்கு உரிய படம் இதில் எண் 1 உள்ள இடம் வரை பங்கின் விலை இறங்கி பின்னர் எண் 2 உள்ள இடம் வரை அதிகரித்ததை அறிந்ததும் Down trend-க்கு உரிய கோடுகளை வரைந்து வியாபாரத்தில் ஈடுபட காத்திருக்கின்றீர்கள். ஆனால் எண் 1 உள்ள இடம் வரை வந்ததும் விலை அதற்கு கீழ் செல்லாமல் அங்கிருந்து பக்கவாட்டில் பயணம் செய்வதை கவணியுங்கள்...!!! ஒரு Down trend, Sideways trend-ஆக இப்படித்தான் மாற்றமடைகிறது.

Sideways trend-ஐ பயண்படுத்தி வியாபாரம் செய்வது எப்படி?

மேலே படத்தில் உள்ளது ஒரு Up trend மூலமாக உருவான Sideway trend. எண் 1 மற்றும் எண் 2 உள்ள இடங்களை கவணியுங்கள் குறிப்பிட்ட அந்த இடங்களை தொட்டதும் பங்கின் விலையானது மேல் நோக்கி செல்ல இயலாமல் (failed rally) கீழ் நோக்கி இறங்கியிருப்பதை கவணியுங்கள். குறிப்பாக எண் 2-ஐத் தொட்டதும் பல முறை கீழ் நோக்கி இறங்கியிருக்கிறது. இது ஒரு Sideways trend என நீங்கள் கண்டுகொண்டுவிட்டால், எண் 3 உள்ள (பச்சை கோடு) இடங்களில் உங்களுக்கு என்ன விலையில் கிடைத்தாலும் அதை வாங்கி எண் 2 உள்ள இடத்தை பங்கின் விலை அடைந்ததும் விற்று விட வேண்டும். இதுதான் Up trend மூலமாக உருவான Sideways trend-ல் வியாபாரம் செய்யும் முறை.

மேலே படத்தில் உள்ளது ஒரு Down trend மூலமாக உருவான Sideways trend. எண் 1 உள்ள இடத்தை கவணியுங்கள், எண் 2 உள்ள இடத்திலிருந்து பங்கின் விலையானது கீழ் நோக்கி செல்கிறது ஆனால் எண் 1 உள்ள இடத்தை அடைந்ததும் அதற்கு கீழே செல்ல இயலாமல் (failed rally) மேல் நோக்கி திரும்பியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை அடைந்ததும் மீண்டும் மீண்டும் மேல் நோக்கியே சென்று கொண்டிருப்பதை கவணியுங்கள். எனவே இந்த Down trend மூலமாக உருவான Side ways trend-ல் நீங்கள் வியாபாரம் செய்ய விரும்பினால் பங்கின் விலை எண் 1 உள்ள இடத்தை அடைந்ததும் பங்குகளை வாங்கி எண் 3 (பச்சை கோடு) உள்ள இடங்களில் எந்த நிலைகளில் வேண்டுமானாலும் விற்கலாம். இதுதான் Down trend மூலமாக உருவான Sideways trend-ல் வியாபாரம் செய்யும் முறை.

Sideways trend உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இனி தவறாமல் ஒவ்வொரு வாரமும் சந்திப்போம். நன்றி.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</