வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் தொடர்பற்றி

சதுரங்க ஆட்டத்தில் ஆடும் இரு நபர்களுக்கும் தெரியாத பல வழிமுறைகள் அங்கு நின்று வேடிக்கை பார்க்கும் நபர் நன்றாக அறிந்திருபார். அந்த வழிமுறைகளை, “இப்படி செய்திருக்கலாம் என அவர் சொல்லியதும்” சதுரங்க ஆட்டம் ஆடுபவர்களே சற்று ஆடித்தான் போவார்கள். பிரச்சனையில் இருப்பவர்கள் பிரச்சனையின் பிடியிலேயே இருப்பதால் அவர்களின் பார்வைக்கு சரியான பாதை தென்படாது. நம் வாழ்க்கையும் சதுரங்க ஆட்டம் போன்றதுதான். பல விதமான சிக்கல்களில் சிக்கியிருக்கும் நம்மை அதிலிருந்து விடுவிக்க ஆச்சரியப்படுத்தும் விதமான பல ஆலோசனைகளுடன் அந்த மூன்றாம் நபராக வருகிறார். டாக்டர் B. செல்வராஜ்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


முனைவர்.பா.செல்வராஜ்

முனைவர்.பா.செல்வராஜ், கோவை அரசு கலைக் கல்லூரி உளவியல் துறையில் உதவி பேராசிரியராகப் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

அத்துறையில் செயல்பட்டு வரும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் மையத்தில் மனநல ஆலோசகராக கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள், அவர்தம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறார். உணர்ச்சியறிவு, சாதனை ஊக்கம், புதுவித சிந்தனை ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்த இவர் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இக்கருத்துக்கள் பற்றிய பயிற்சிகளை நடத்தி வருகிறார். மக்களுக்குப் பயனக்களிக்கக்கூடிய உளவியல் விசயங்களைப் பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் கட்டுரை, பேட்டி ஆகியவை மூலமாக தெரிவித்து வருகிறார். மனதை மேம்படுத்தும் மனோதத்துவம் என்னும் இவரின் நூல் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பினைப் பெற்றதாகும்.

கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி, போலீஸ் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றில் கௌரவ பேராசிரியாரான இவர் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உளவியல் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உளவியல் தொடர்பான அறிவியல் ஆய்வு கட்டுரை ஒன்றினைப் பதிப்பித்துள்ளார். இவரின் வலைப் பூ உளவியல் கருத்துக்கள் நிறைந்த சிறந்த வலைப் பூவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் தொடர்கள் வாயில்


உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –5

பா.செல்வராஜ்  

உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 5

ரஞ்சனிக்கு எதுவும் சாப்பிட முடிவதில்லை. சிறிது ரசத்துடன் சாப்பிட்டாலும் கூட குடலை அறுத்துக் கொண்டு செல்வது போன்ற வலி. தொண்டையின் துவக்கத்தில் தோன்றும் இவ்வலி மலப்புழை வரை பரவி உயிர் போவது போன்ற வலியை தோற்றுவிக்கும். சில வருடங்களாக சாப்பாட்டு வகைகளை உண்ணமுடியாமல் அறவே நிறுத்திவிட்டார். வெறும் பழரசங்கள் தான் உணவாக இருந்து வருகிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கான சிறப்பு மருத்துவர் பலரிடமும் தன் நோய்க்கு நிவாரணம் தேடி சென்று விட்டார். அனத்து மருத்துவர்களும் ‘உங்களுக்கு உடலில் ஒன்றுமில்லை’ என்று கூறி விட்டனர். எண்டோஸ்கோபி ஆய்வுகளும் நோயற்ற தெளிவான குடலையே காட்டியிருக்கின்றன. மருத்துவர்கள் வலிக்கான காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறி விட்டாலும் வலிப்பது உண்மைதான், என்ன செய்வது எனத் தெரியவில்லை என்ற வேதனையோடு யாரோ ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் உளவியல் ஆலோசனை பெற வேண்டி வந்திருந்தார். கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட ரஞ்சனியை விபரங்கள் வேண்டி சில கேள்விகள் கேட்டேன்.

தற்போது 48 வயது நிறைந்தவர். இரண்டு மகன்கள் அவருக்கு உண்டு. கணவர் அரசு பணியில் உள்ளார். கணவர் தான் உண்டு தன் பணி உண்டு என இருக்கும் பிரச்சனைகள் கொடுக்காதவர். முதல் மகனுக்கு படிப்பு ஏறவில்லை. எனவே தொழில் துறியில் இறங்கி தற்போது ரெடிமேட் துணிகள் உற்பத்த்தியில் ஈடுபட்டு வருகிறார். இரண்டாவது மகன் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். மகன்கள் இருவரும் தங்கள் வேலையில் கருத்தூன்றி இருப்பதால் அவர்களால் பிரச்சனைகள் ஏதுமில்லை.

ரஞ்சனி பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு ஒர் தங்கையும் தம்பியும் உண்டு. அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ரஞ்சனி தன் தாயிடம் மிகுந்த பாசம் கொண்டவர். வீட்டின் முதல் குழந்தையாதலால் தன் தாயிடம் அந்நியோன்யமாக இருப்பார். இருவரும் தோழியரைப் போல் பழகுவர், இன்பதுன்பங்களை பகிர்ந்து கொள்வர். திருமணத்திற்குப் பிறகும் வாரம் ஒருமுறை தன் பிறந்த வீட்டிற்கு வந்து செல்வார். இதனால் பிறந்த் வீட்டுடன் நல்ல உறவுண்டு. ரஞ்சனியின் தாயார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின் வீட்டிலேயே வைத்து கவனிக்கப்பட்டு மரணமடைந்து விட்டார். அதற்குப் பிறகு ரஞ்சனி தன் தாய் வீட்டிற்கு அடிக்கடி செல்வதைக் குறைத்துக் கொண்டார். தன் தந்தை மற்றும் சகோதரரின் மீது ஏற்பட்ட வருத்தமே அதற்குக் காரணம்.

ரஞ்சனி தன் தந்தையுடன் எப்போதுமே நெருங்கிய பாசம் கொண்டிருந்ததில்லை. தந்தையார் கோபக்காரர், குழந்தைகளிடம் இயல்பாக இராதவர் என்ற எண்ணம் ரஞ்சனிக்கு உண்டு. தன் தாயார் நோய்வாய்ப்பட்டு இருந்த போது அவரை தன் தந்தையும் சகோதரரும் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற மனக்குறை ரஞ்சனிக்கு, தன் பெரிய மகன் சரியாக படிக்கவில்லை என்று தெரிந்தவுடன் அவரை தன் தந்தை மற்றும் சகோதரருடன் தொழில் செய்யுமாறு ஒரு பெரிய தொகை கொடுத்து கூட்டுத் தொழில் செய்ய அனுப்பி வைத்தார். சில ஆண்டுகள் கழித்து தொழிலில் நஷ்டம் வந்தவுடன் குறைவான பணத்தை திருப்பிக் கொடுத்து ரஞ்சனியின் மகனை அவர் சகோதரரும் தந்தையாரும் திருப்பி அனுப்பி வைத்து விட்டனர். தன் மகனை எப்படி தொழிலில் இருந்து கழட்டி விடலாம் என்ற மனக்குறையும் அவர்கள் மேல் ரஞ்சனிக்கு உண்டு. இவைகளின் காரணமாக தன் தாயின் மரணத்திற்குப் பிறகு அதிகமாக பிறந்த வீட்டிற்கு போவதில்லை.

வேறு ஏதாவது மனதை பாதித்த சம்பவம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா என வினவினேன். ஆம் என்று சொல்லி தொடர்ந்தார் ரஞ்சனி.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சனியின் குடும்பத்தார் குடியிருந்த வீட்டின் அருகே பக்கத்து வீட்டில் இருந்த பதிமூன்று வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் அடிக்கடி டி.வி பார்ப்பதற்காக இவர்கள் வீட்டிற்கு வருவான். ரஞ்சனியும் அவனை தன் மகன் போல் நினைத்து பார்த்துக் கொள்வார். ஒருநாள் வீட்டு அலமாரியில் வைத்திருந்த பணம் ரூ.2500க் காணவில்லை. அதை டிவி பார்க்க வந்த பக்கத்து வீட்டு பையன் தான் எடுத்துவிட்டான் என்று ரஞ்சனி கண்டுபிடித்து விட்டார். இவ்விஷயத்தை அவனின் பெற்றோரிடம் சொல்லி பணத்தைக் கேட்கப்போக பெரிய தகறாறாக மாறி விட்டது. தகறாறு முற்றி ஒரு கட்டத்தில் திருடிய பையனின் தாயார் ரஞ்சனியை அடித்து விட்டார். பின்னர் உறவினர் சிலர் வந்து பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் நியாயம் கேட்டு அவர் மகன் திருடியதை ஒத்துக்கொள்ளச் செய்தனர். திருடிய பணத்தை திருப்பித் தர அப்பெண் ஒத்துக் கொண்டு பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். ஆனால் ரஞ்சனியை அடித்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கவோ அல்லது வருத்தப்படவோ இல்லை. இது ரஞ்சனியின் மனிதில் மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கிவிட்டது. தன்னை அடித்ததற்காக தன் கணவரும் உறவினர்களும் அப்பெண்ணை திருப்பி அடிப்பார்கள் அல்லது போலீசில் புகார் கொடுப்பார்கள் என்று ரஞ்சனி எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி முடித்தது இவருக்கு பிடிக்கவில்லை. மிகுந்த எமாற்றமும் மனமுறிவும் ஏற்பட்டது. அதற்குப்பின் அப்பக்கத்து வீட்டுப் பெண்ணை பார்க்கும்போதெல்லாம் மனதில் கோபமும் தீராத வருத்தமும் ரஞ்சனிக்கு ஏற்படும். அதைத் தடுக்க வேண்டி ஒரு சில மாதங்கள் கழித்து தங்கள் வீட்டை வேறு இடத்திற்கு ரஞ்சனியின் குடும்பத்தார் மாற்றிக் கொண்டனர்.

உளவியல் உண்மைகள்

நம் உடலில் ஏற்படும் எல்லா நோய்களுக்கும் உடல் காரணங்கள் மட்டுமே பொறுப்பு எனக் கூற முடியாது. மனதில் ஏற்படும் பிரச்சனைகளும் உடலில் நோய்களை தோற்றுவிக்கலாம். அவ்வாறு மனதில் ஏற்படும் பிரச்சனைகளால் தோன்றும் உடல் நோய்களில் பொய்மை நோய்கள் (Factitious disorders) என்ற ஓர் வகை உண்டு. இந்நோய் கொண்ட மனிதரின் முக்கிய குறிக்கோள் தான் நோயாளி என்ற பாத்திரத்தில் தொடந்து நடித்து வரவேண்டும் என்பது தான். பல மருத்துவர்கள் சோதித்து நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை எனக் கூறிய பிறகும் இவர்கள் நோயால் வருந்துவதாகக் கூறிக்கொண்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருவர். இவர்களின் மனத்தேவையை புரிந்து கொண்டு உளவியல் சிகிச்சை அளிக்காவிடில் இல்லாத நோய்க்கு மருந்து உட்கொண்டு தன் நல்ல உடலை கெடுத்துக் கொள்வர். இதுவே பின்னர் சரிசெய்ய முடியாத நிலையான நோயினை உண்டாக்கி விடும்.

ரஞ்சனிக்கு ஏற்பட்டு இருப்பதும் அத்தகைய பொய்மை நோய்தான். உணவுக்குடல் முழுவதும் வலிக்கிறது என கூறிக் கொண்டு மருத்துவர்கள் பலரை சந்தித்து வரும் ரஞ்சனியின் உடலில் அதற்கான எந்த அறிகுறியையும் மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. இந்த உண்மையை ஒத்துக் கொள்ளாத ரஞ்சனி மருத்துவர்களை மாற்றிக் கொண்டேயிருக்கிறார். வீட்டின் முதல் குழந்தையான ரஞ்சனிக்கு தன் தாய் மீது பாசம் அதிகம். அத்தாயின் பிரிவை அவரால் தாங்க முடியவில்லை. தன் தாய்க்கு பின் தனக்கு இந்த உலகில் யார் தன்னை கவனிப்பார் என்ற கவலை ஆட்கொண்ட அதே சமயத்தில் தொழிலில் நஷ்டம் எனக்கூறி அவர் மகனை தந்தையும் சகோதரரும் அனுப்பி வைத்தது அவர் மனதில் இடிபோல் இறங்கியுள்ளது. அதை தன் கணவரிடக் எப்படி நியாயப்படுத்துவது என்று நினைத்துக் கொண்டிருந்த போது தான் பக்கத்து வீட்டுப் பெண் ரஞ்சனியை அடித்து உள்ளார். அதை கணவர் கேட்காமல் விட்டது அவர் மனதில் மேலும் பாதுகாப்பற்ற உணர்வை உண்டாக்கி விட்டது. மகன்களோ இவை யாவற்றிலும் தலையிடுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து விட்டனர். இவைகள் யாவும் பிறர் ஒருவரும் என்னை கவனித்துக் கொள்வதில்லை என்ற எண்ணத்தை ரஞ்சனிக்கு உண்டாக்கியிருக்கிறது. அவர்களை கவனிக்க வைக்க வேண்டியே நோயாளி வேடம் தரித்துள்ளார்.

எல்லா விபரங்களையும் பொறுமையாகக் கேட்ட பின் மேலே விவரித்தவற்றை ரஞ்சனிக்கு எடுத்துக் கூறினேன். நீங்கள் இன்னும் எத்தனை மருத்துவர்களை நாடிச் சென்றாலும் உங்கள் நோயை யாராலும் தீர்க்க முடியாது. ஏனெனில் உங்கள் நோய் ஓர் பொய் நோய். வலிப்பது உண்மையாக இருக்காலாம். அது உடல் வலி அல்ல, மனதின் வலி. ”உங்களை யாரும் கவனிக்க வில்லை என்ற ஆழ்மன எண்ணம் தவறானது. உங்கள் கணவருக்கும் மகன்களுக்கும் உங்கள் மீது பாசம் உள்ளது. அதை அவர்களுக்கு வெளிக்காண்பிக்கத் தெரியவில்லை. உங்களை ஒருபெண் அடித்த போது நிச்சயம் அவர்கள் துடித்துப் போய் இருப்பார்கள். ஆனால் பிரச்சனையை பெரிதாக்கிக் கொண்டே போக வேண்டாமென்றெண்ணி சமாதானமாகப் போயிருக்கலாம். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் கவனத்தைப் பெற நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். எனவே இன்று முதல் உங்கள் கணவருக்கும் மகன்களுக்கும் அளிக்கும் உணவையே நீங்களும் உட்கொள்ளுங்கள். அவர்களுக்கு உபாதையைத் தராத உணவு உங்களுக்கும் எந்த உபாதையையும் உண்டாக்காது. மன தைரியத்தோடு போய்வாருங்கள்” எனக் கூறி அனுப்பி வைத்தேன்.

ரஞ்சனியின் கணவர் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். பல மருத்துவர்களிடம் தன் மனைவியை அழைத்துச் சென்ற உடல் களைப்பும் மன களைப்பும் அவருக்கு. அவர் மனைவியின் நோய் பற்றி எடுத்துக்கூறி மனைவி மீது அக்கறை இருப்பதை உணர்த்துவதே நோய் தீர அவர் செய்ய வேண்டியது என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் அவருக்கு கூறினேன்.

தொடர்ந்து சில முறை ஆலோசனை பெற வந்த ரஞ்சனி தன் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகக் கூறினார். அதன் பிறகு வருவதை நிறுத்தி விட்டார். முழுமையாக நோய் குணமாகியிருக்கலாம் அல்லது அடுத்த மருத்துவரை . . .

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</