வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிற்றிதழ்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து சிற்றிதழ்களின் தகவல்களும் இந்தப் பகுதில் வாசிக்க கிடைக்கும்.
 
 
 

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் சில:

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை
மண்மொழி
தச்சன்
அதிர்வு
குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரேமது
மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு
மெய்யறிவு
இனிய நந்தவனம்
அம்ருதா
பெண்ணியம்
சௌந்தரசுகன்

 

 

 
     
     
     
   
சிற்றிதழ்கள்
1
 
 
  சிற்றிதழ்


 
  சிற்றிதழ் என்பது தீவரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றைடையும் இதழ் ஆகும். இது செய்யுள், கவிதை, சிறுகதை, தொடர்கதை போன்ற இலக்கிய ஆக்கங்களையும் கருத்துரை, விமர்சனம், திறனாய்வு, துறை ஆய்வு, விவாதம், நேர்காணல் ஆகியவற்றையும் தாங்கிவரும். சிற்றிதழின் முதன்மை நோக்கம் கருத்துப்பகிர்வே. அதாவது வியாபார நோக்கில் இலாபம் ஈட்டுவதை சிற்றிதழ் முதன்மைக் குறிக்கோளாய் கொள்வதில்லை.  
  ---------------------------------  
 

1958 ம் ஆண்டு சி. சு செல்லப்பா அவர்கள் வெளியிட்ட எழுத்து, சிற்றிதழ்களில் தொடக்க 50 களின் சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கத்து.

 
  ---------------------------------  
  சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

 
  http://www.jeyamohan.in
/?p=249
 
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  சிற்றிதழ்கள் சிற்றிதழ்கள் வாயில்

தாழம்பு

வலம்புரி லேனா  

மிகப் பெரிதாகப் படர்ந்து அடர்ந்து விரிந்திருக்கும் ஆலமரத்திற்கும் விதை மிகச் சிறிதாகவே இருக்கும். அதனைப் போன்றே சமூகத்தின் மிகப்பெரிய வலிமை மிக்க தூணாக விளங்கக் கூடிய பத்திரிகைகளின் பிறப்பிடமாக விளங்கக் கூடியது கையெழுத்துப் பத்திரிகை.

பிரபலமானவர்கள் ஆரம்பித்து நடத்தியது முதல், இன்றைக்கு வெளிவரக்கூடிய கையெழுத்து இதழ்கள் வரை இதழ் ஆசிரியரின் பள்ளிப் பருவத்திலோ, கல்லூரி காலத்திலோ நடத்தப்பட்டதாக இருக்கும். மிகப்பெரிய கவிஞர்களையும் அறிஞர்களையும் பத்திரிகையாளர்களையும், அரசியல்

தலைவர்களையும் காலம் இனம் கண்டு கொள்ள உதவும் கருவியாக இருப்பது கையெழுத்து இதழ்தான். கால வளர்ச்சிக்கு ஏற்ப கையெழுத்து இதழ் அச்சு இதழாக வரும்; இல்லை நிறுத்தப்பட்டு விடும். இடைவிடாத முயற்சிக்கு எடுத்துக்காட்டாக 309 இதழ்களைக் கையெழுத்தில் எழுதி ஒளியச்சு இதழாக வெளியிட்டுச் சாதனை புரிந்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டம் சுப்பிரமணியபுரத்திலிருந்து வெளிவரும் `தாழம்பு’ இதழ்.

வாழ்க்கையின் இடையூறுகளுக்கெல்லாம் கொஞ்சமும் அஞ்சாமல் இதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் அதன் ஆசிரியர் எம். எஸ், கோவிந்தராசன்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படிக்கும்போது ஆரம்பித்தவர் இடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட, அவரது மனைவி கொடுத்த ஊக்கத்தினால் தொடர்ந்து 25 ஆண்டுகளாக இதழைக் கொண்டு வருகிறார்.

ஆரம்பத்தில் கைகளாலேயே கார்பன் வைத்து எழுதி வெளியிட்டவர் ஒளியச்சு சாதனம் வந்த பிறகு ஒரு பிரதியைக் கையில் எழுதி நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை ஒளியச்சில் எடுத்து இப்போது வெளியிட்டு வருகிறார்.

தாழம்பூ வின் ஒவ்வொரு இதழிலும் அறிமுகக் கவிஞர் ஒருவரின் கவிதை இடம் பெறுகிறது. இவ்வாறு ஊக்கப்படுத்துவது தம் படைப்பை பலர் பார்க்க ஓர் வாய்ப்புக் கிடைக்காதா என ஏங்கும் புதியவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக அமையும்.

முதியோர் விடுதி

பாட்டின்னா
என்னா?
தாத்தான்னா
யாரு?
கேட்கிறது குழந்தை!
விடுதியில்
போய் பாத்துட்டு
வந்தோமே
என்கிறாள் தாய்!
வயசானா
நீயும்
அந்த விடுதிக்குப்
போயிடுவாயா அம்மா
சிரித்துக் கொண்டே
கேட்கிறது குழந்தை

- கவிஞர் தாரா, சேலம்

அறிமுகக் கவிஞரின் கவிதை என்றாலும் அழுத்தம் மிக்க நமது மரபுகள் அழிந்து வருவதை அதிர்ச்சியோடு சுட்டிக் காட்டுகிறது.

இதழில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், வாசகர் கடிதம், நூல் விமர்சனம் என இடம் பெறுகின்றன.

தீபாவளி, கிறிஸ்துமஸ், அன்னையர் நாள் போன்றவற்றிற்குச் சிறப்பு இதழ்கள் வெளியிட்டு அந்தந்த நாட்கள் குறித்த அரிய செய்திகளைத் திரட்டிiத் தொகுத்துத் தரப்படுகிறது.

தாழம்பூ ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளானதற்குக் கணினி அச்சில் பெரிய அளவில் இதழைக் கொண்டு வந்து சிறப்பித்தார்கள். அந்த இதழ் தொடங்கி சில இதழ்கள் கணினியில் தட்டச்சு செய்து ஒளியச்சு மூலம் உலா வந்தன. ஆனால் சில நடைமுறைச் சிக்கல் ஏற்படவே மீண்டும் கையெழுத்தால் எழுதி ஒளியச்சு நகல் பிரதியாக இதழ் தொடர்கிறது.

தாழம்பூவில் நேர்காணல்களும் உண்டு. மு. மேத்தா, வல்லிக் கண்ணன், என்.சி. மோகன்தாசு, ரபிபெர்ணாட் தந்தை எம்.ஏ. சுவாமி, பாகிஸ்தான் வானொலி அறிவிப்பாளார் அமீர்பாட்ஷா ஆகியோரது பேட்டிகள் இடம் பெற்றுள்ளன.

பிரபலங்களை மட்டுமல்லாது, வளர்ந்து வரும் படைப்பாளர்களின் பேட்டிகளையும் வெளியிடுகின்றார் இதழின் ஆசிரியர்.

மார்ச் 2009 இதழில் மகளில் தினத்தையொட்டி மதுரை கவிஞர் மஞ்சுளாவின் பேட்டி வெளியாகியுள்ளது. ஆஸ்கார் விருது பெற்றுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கையையும், ஆஸ்கார் விருதுக்கு வழங்கப்படும் சிலை எதனால், எவ்வாறு ஆனது என்பதையும் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

1998 இல் கன்னியாகுமரி உதயதாரகை கலைக் கழகம் சிறந்த சிற்றிதழாகத் தேர்வு செய்திருக்கிறது. 2000 - தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் (கோவை) சிறந்த சிற்றிதழாகத் தேர்வு செய்து விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

வெளிநாட்டு வானொலிகளில் தாழம்பூ மணம் பரப்பி நிறைய வானொலி நேயர்களை வாசர்களாகப் பெற்றிருக்கிறது.

இதழ் ஆசிரியர்: எம். எஸ். கோவிந்தராசன்.

இதழ் முகவரி:

ஆசிரியர், தாழம்பூ இதழ்,
விஜயபுரம் வடக்கு,
சுப்பிரமணியபுரம் அஞ்சல் - 614 805
புதுக்கோட்டை மாவட்டம்


http://www.thaazhampoo-msg.blogspot.com/

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.