வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிற்றிதழ்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து சிற்றிதழ்களின் தகவல்களும் இந்தப் பகுதில் வாசிக்க கிடைக்கும்.
 
 
 

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் சில:

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை
மண்மொழி
தச்சன்
அதிர்வு
குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரேமது
மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு
மெய்யறிவு
இனிய நந்தவனம்
அம்ருதா
பெண்ணியம்
சௌந்தரசுகன்

 

 

 
     
     
     
   
சிற்றிதழ்கள்
1
 
 
  சிற்றிதழ்


 
  சிற்றிதழ் என்பது தீவரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றைடையும் இதழ் ஆகும். இது செய்யுள், கவிதை, சிறுகதை, தொடர்கதை போன்ற இலக்கிய ஆக்கங்களையும் கருத்துரை, விமர்சனம், திறனாய்வு, துறை ஆய்வு, விவாதம், நேர்காணல் ஆகியவற்றையும் தாங்கிவரும். சிற்றிதழின் முதன்மை நோக்கம் கருத்துப்பகிர்வே. அதாவது வியாபார நோக்கில் இலாபம் ஈட்டுவதை சிற்றிதழ் முதன்மைக் குறிக்கோளாய் கொள்வதில்லை.  
  ---------------------------------  
 

1958 ம் ஆண்டு சி. சு செல்லப்பா அவர்கள் வெளியிட்ட எழுத்து, சிற்றிதழ்களில் தொடக்க 50 களின் சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கத்து.

 
  ---------------------------------  
  சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

 
  http://www.jeyamohan.in
/?p=249
 
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  சிற்றிதழ்கள் சிற்றிதழ்கள் வாயில்

சௌந்தரசுகன்

வலம்புரி லேனா  

சாலையோராமாக ஓரு சிறு பெட்டிக்கடை வைத்து மூன்று பக்கமும் அடைப்புச்சுவர் வைக்க வேண்டுமெனில் வார,மாத இதழ்களைத் தொங்கவிட்டலே போதுமானது. கடை வடிவமைப்பு உருவாகிவிடும்: அந்த அளவுக்கு வணிக இதழ்களின் பெருக்கமும் உருவாக்கமும் உள்ளன.

வண்ண வண்ணமாய் மின்னும் அத்தனை இதழ்களும் சிந்தனை மயக்கத்தைத் தரக்கூடியதாகவே வெளிவருகின்றன. மாற்று இதழ்களாக படித்தால் சிந்தனையைத் தூண்டி, அறிவை செழுமைப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்துபவைகளாக வெளிவருபவை சிற்றிதழ்களே!.

வடிவத்திலோ வாசகர்வட்டத்திலோ சிறிய அளவில் இருந்தாலும் பெரிய விஷயங்களை துணிவுடன் எடுத்துச்சொல்பவையும் சிற்றிதழ்களாகவே உள்ளன.

கதை, திரைக்கதை, கட்டுரை என இலக்கியத்திற்கான இதழ்களாக மட்டுமே வந்தவை தற்போது ஒவ்வொரு துறை சார்ந்தும் வெளிவரத் துவங்கியுள்ளன.

ஒரு குறிப்பிட்ட அளவிலான வாசகர் வட்டத்தைப் பெற்றிருப்பதும் தனியொரு நபர் அல்லது நண்பர்கள் சிலரின் பொருளாதாரத்தைக் கொண்டும் வெளியிடப்படுவதால் ‘சிற்றிதழ்கள்’ என்று அழைக்கத் தோன்றுகிறது.

வணிக இதழ்களோடு ஒப்பிடும் போது இலக்கியத்திற்காகவும், சமூகத்தின் மீதான அக்கறைகளாகவும் சிற்றிதழ்கள் செயலாற்றும் விதத்ததை உணர்ந்தால் அவற்றை மாண்புமிகு இதழ்களாகவே மதிக்கத்தோன்றும். போராட்டம் மிகுந்த வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் இதழ் நடத்தும் குறிக்கோளுக்காக தன்னையும், தமது பொருளாதாரத்தையும் அற்பணித்துக்கொண்டு சிற்றிதழ் ஆசிரியர்கள் இதழ்களை நடத்தி வருகின்றனர்.

இலட்சியத்திற்காக இலட்சங்களை இழந்த பலரை சுட்டிக்காட்டலாம். இருந்தாலும் இந்த யாகத்தீயில் கரைத்துக்கொள்ள புதிதுபுதிதாய் உருவாகி வருவதுதான் படைப்பிலக்கியத்தின் வெற்றியே.

சோறுடைத்த நாடு சோழநாடு என்று சங்க இலக்கியங்களில் புகழப்படும் தஞ்சைத் தரணியிலிருந்து இருபத்தி இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் ‘சௌந்தரசுகன்!’

தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை திங்கள் (மாத) இதழாக 261 இதழ்களை வெளியிட்டுள்ளனர். வாழ்வியலின் உண்மையான நிகழ்வுகளை வாசகர்களுக்கு உணர்த்தவும், பதிவு செய்து பாதுகாப்பதுமே இதழின் நோக்கமாகக் கொண்டு வெளிவருகிறது இவ்விதழ்.

ஆழ்ந்த வாசிப்பனுபவமும், தீவிரத் தேடலும் நிறைந்த சுகனின் மேற்பார்வையில் சு.சௌந்தரவதனா ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வெளியிடுகின்றார்.

இதழில் மாதந்தோரும் இடம் பெறும் எழுதுகோலால் ‘எண்ணக்கண் திறப்போம்’ என்ற தலைப்பில் எழுதப்படும் தலையங்கம் மிகச்சிறப்பான முறையில் அமைந்திருக்கும் சமூக நிகழ்வுகள் குறித்து நேர்மையான பார்வையில் விரிவாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கும் இயல்பான வாழ்வைப்பிரதிபலிக்கும் சிறுகதைகளும், சமூகத்தில் மீதான கோபதாபங்களை பறைச்சாற்றும் கவிதைகளும் இடம் பெற்று வாசகர்கள் மத்தியில் சிறந்த இதழாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

தமிழாசிரியராக பணிகிடைக்கும் முன்னே இதழ் ஆசிரியராக விளங்கிய சுகன் அவரது உடல் பொருள் ஆவி மட்டுமல்லாது, துணைவியார் சௌந்தரவதனா மற்றும் குழந்தைகளின் உழைப்பையும், உள்ளத்தையும் ஒருங்கிணைந்து இதழ்பணியில் ஈடுபடுத்தி வருகிறார்.
இத்தனைக்கும் ஊக்கமாக திகழ்ந்தவர்கள் சுகனின் தாத்தா தியாகி கே.வி.திருஞானமும் அம்மா நா.சுசிலாவும் தான் இருவருமே அமரத்துவம் எய்துவிட்டனர். சுகனுக்கும்,இதழோடு தொடர்புடைய படைப்பிலக்கியவாதிகளுக்கும் பேரிழப்பு.

ஒரு குடும்பமே சிற்றிதழ் நடத்த துணிந்து செயலாற்றி வருகிறது என்றால் அது சௌந்தர சுகன் இதழ் மட்டுமே.

கவிஞனாகவோ, எழுத்தாளனாகவோ இருந்தாலே வீட்டிலும் சமூகத்திலும் ஏச்சுகளும் பேச்சுகளும் மிகுந்திருக்கும். சிற்றிதழ் நடத்துகிறேன் என்றால் கேட்கவா வேண்டும். ஆனால் இவைகளைத்தாண்டி இலக்கியத்தில் நிலையான இடத்தைப் பிடிக்க பயணித்துக் கொண்டிருக்கிறது. ‘சௌந்தர சுகன்’ இதழ். கலை சார்ந்த திறமை மிக்கவர்களையும், மக்கள் பற்றாளர்களையும் சந்தித்து அவர்களுடன் நேர்காணல் கண்டு வெளியிடுவது இதழின் மற்றுமொறு சிறப்பம்சமாகும். அடுத்தகட்டமாக வீணை தயாரிப்பாளர், நாணய சேகரிப்பாளர், பொதுவுடமைவாதி, குறும்பர் இன ஓவியர், சிற்றிதழ் ஆய்வாளர், சிலம்பாட்டக்கலைஞர், டாக்டர் கேப்டன் கு.பாஸ்கரனின் மருத்துவ துறைசார்ந்த அனுபவங்கள் நன்மை தீமைகள் என நேர்காணல்களை குறிப்பிட்டுச்சொல்லலாம்.

நேர்காணலை பாவெல் சூரியனும்..சுகனுமே அதிகமாக எடுத்துள்ளனர். வாசகர்களுக்கு மகுடம் சூட்டி அழகு பார்க்கும் பகுதியாக ‘கூர்’ என்னும் தலைப்பில் வெளியிடப்படும் ‘வாசகர்கடிதங்கள்’ பகுதியைக் கூறலாம். ஏனெனில் இதழைப் படித்து எழுதும் வாசகர் கடிதங்களை அப்படியே வெளியிடுவர் மிக நீளமாக இருந்தாலும் மாற்றுக்கருத்து இருந்தாலும் கத்தரி போட்டு வெட்டிவிடாமல் அப்படியே இடம்பெறச்செய்வார்கள்.

படைப்பாளிகளின் வாழ்க்கையும், வாழ்வின் மீதும் படைப்புகளின் மீதும் கொண்ட அவர்.களின் பார்வைகளையும் கடித இலக்கியம் என்னும் பகுதியில் வெளியிட்டு வருகின்றனர்.

கைபேசி, தொலைபேசிகளின் பெருக்கத்தால் கடிதம் என்பதே அருகிவிட்ட நிலையில் கடித இலக்கியம் பகுதியில் படிக்கும் போது சுவைமிக்க காலகட்டங்களை அறிந்து மகிழத் தூண்டுகிறது.

தஞ்சை படைப்பாளிகளுக்கெல்லாம் ஆசானாகத்திகழ்ந்த தஞ்சைபிரகாசின் படைப்புகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது சௌந்தரசுகனால்தான் என்றால் அது மிகையல்ல.

பொதிகைச்சித்தர், செந்தூர் ஜெகதீஷ், தஞ்சாவூர் கவிராயர், நா.விஸ்வநாதன், தேவரசிகன், வெற்றிப்பேரொளி, நேயர் இரா.எட்வின், சக்தி அருளானந்தம், பொ.முத்துவேல் ஆகியோரது படைப்புகள, ஷராஜ், பித்தன், இ.சாகுல்அமீது, செந்தில்குமார் ஆகியோரது ஓவியங்கள் இதழில் நிறைய இடம் பெற்று வருகின்றன.

சுகன், சுந்தரசுகன், சௌந்தரசுகன் என சிறு சிறு பெயர்மாற்றத்துடன் தொடந்து இயங்கி தனது தனித்தன்மையை நிலைநாட்டும் சௌந்தரசுகனைப் பாராட்டலாம்.

இந்த சிற்றிதழிலிருந்து சில கவிதைகள்

பிப்ரவரி 2009 சௌந்தர சுகனில் இடம்பெற்றுள்ள மன்னார்குடி இராசஇராச கணேசனின் கவிதை இது. அடுக்குமாடி குடியிருப்பின் அமைப்பினையும், உணர்வினையும் அழகான கவிதையாக்கித் தந்துள்ளார்.

மணியோசை கேட்டதும்

ஓடிவந்து பார்த்து வியக்க
யானை வருவதில்லை.

அழகுச் சிகப்பாய்
அரைக்கொய்யாப்பழம் கடித்துப்போட
அணில்கள் வருவதில்லை.

கூடுகட்ட கண்ணாடி கொத்தக்கூட
குருவிகள் வருவதில்லை.

செயற்கையாய் சில வண்ணத்துப்பூச்சிகள்
சுவற்றில் ஓட்டியும் கூட
எட்டிக் கூடப்பார்ப்பதில்லை
எந்த வண்ணத்துப்பச்சியும்

பழுத்து மணம் வீச
மா பலா வாழையின்மையால்
கிளிகள் கீச்சிறுதலில்லை.

எல்லாவற்றிற்கும் தனித்தனியே
மருந்தடித்துவிடுவதால்
பல்லி, கரப்பான், எலி
எறும்பென எவையும் ஊர்வதில்லை.

விதிகளின்படியே நாய்வளர்ப்பு
தடை செய்யப்பட்டிருக்கிறது.

எப்போதாவது கதவு திறந்தாலும்
அப்போது தெருவில் பறக்கும்
மரணக்குயில்களாய் ஆம்புலன்சுகள்

சிவப்பு யானைகளென
மணியடித்து வரும்
தீயணைப்பு வண்டிகள்

ஓடிவந்து உயரத்தில் பார்த்து ரசித்தது
இப்போது உச்சந்தலையில் உராய்வதால்
சத்தமிடும் விமானங்கள்.

சொந்த ஊரின் ‘எட்டு மா’ நிலம் விற்று
எட்டாவது மாடியெனும் அந்தரத்தில்
ஓசையின்றி ஒளிந்திருக்கும்
இடத்திற்குப்பெயர்
அப்பார்ட்மெண்ட்

ஆதியிலிருந்து

துளித்தலில் நீர்த்து
உறைதலும் உருகுவதுமாகி
அலையெழுப்பியதில் நுரைப்பூச்சூடி
பெருகின யாவும்.

ஒளியுடன் உமிழும்
இருப்பின சுழற்சியில் ஒற்றைக்குழலென
படர்ந்து பிரிந்து சுழல்கிறது
ஆதியின் பார்வையில்.

ஏல்லைகளுக்கப்பாலும் எல்லை நீளுவதில்
வட்டமென
விரிந்த வெளிமுழுவதும்
நிறைந்து வழிந்த வெறுமை
இருக்கமற்ற அடர்த்தியாய்
மூழ்கிக்கிடக்கிறது ஆதியின் முழுமைக்குள்

பிரவாகித்து
பிரமாண்ட பிரமிப்பின் சுற்றிலும்
மத்தியில் என
அறிய வியலாதோர் நுனியற்ற நடுவில்
தொங்கிய பூமியின் இருப்பு
ஆதியாக இருக்கிறது.

அரூபத்தழுவலில்
அலகிலா விசிதத்திர பிரிதிகளின்
அடையாளமற்று
நிறைந்தியங்குவதில் கம்பீரமாய்
ஆதியை சுவாசித்தபடியே இருக்கிறது
காற்றின் பரிணாமம்…

விதைகளும்
மரங்களுமான யாவற்றின்
ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றின் கூறுகளில்
இருக்கிறது ஆதியின் முகம்,
எதையும் ஏமாற்றாமல்..

தவழ்ந்து நிமர்ந்து நடக்கத்
தொடர்ந்து
கிளைகளுடன் தாவித்தாவி
துள்ளியபடியயே துண்டாடிக்
கொண்டதில்
மகிழ்ந்தும்
இருந்துக் கொண்டிருப்பதில்
விடுபடவில்லை இன்னும்
குரங்கிலான மனிதன்..
--கா.அமீர்ஜான்.

இதழ் ஆசிரியர்: சு. சௌந்தரவதனா சுகன்

இதழ் முகவரி:

சு. சௌந்தரவதனா சுகன்
சௌந்தரசுகன் மாத இதழ்,
அம்மா வீடு,
சி.46, இரண்டாம் தெரு
முனிசிபல் காலனி, தஞ்சாவூர்- 613007
செல்- 9894548464 மின்னஞ்சல்- soundarasugan@gmail.com

ஆண்டுச் சந்நா ரூ: 120, தனி இதழ் ரூ.10.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.