வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

நூலகம்

இந்த பகுதியில் தமிழகத்தில் உள்ளக் நூலகங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.  உங்களுக்கு தெரிந்த நூலகங்கள் பற்றி நீங்களும் எங்களுக்கு எழுதி அனுப்பலாம்.

 

 
     
     
     
   
நூலகங்கள்
1
 
 
     
   
  -------------------------------  
 

பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ் ‘ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விவரசனகள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல, கூறுகிறது.

1879ல் பிரசுரமாயிற்று.

 
  --------------------------------  
  சிறந்த தமிழ் நாவல்கள்.  
 

http://www.jeyamohan.in/?p=84

 
  --------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நூல்வெளி TS  நூலகங்கள்



கன்னிமரா நூலகம்

ஆர்ம்ஸ்ட்ராங் பிரவின் (படிமை மாணவர்)  


இந்திய களஞ்சிய நூலகங்களின் வா¢சையில் கன்னிமராவும் ஒன்று. எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு தெற்கில், கோ-ஆப்டெக்ஸ்க்கு அருகில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை கவர்னராக இருந்தவர் "லார்ட் கன்னிமரா" '(1886-1890). இவர் 1890 மார்ச் 22ல் இந்நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1896 டிசம்பர் 5ஆம் தேதி 'கன்னிமரா நூலகம்' என பெயரிடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. இதன் முழுமையான வரலாற்றை அறிய வேண்டுமெனில் இன்னும் ஒரு அரை நூற்றண்டு காலம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

அப்போது மதராசபட்டினத்தில் ஒரு நல்ல பொது நூலகம் அமைக்க வேண்டுமென அரசுக்குத் தோன்றியது. அவ்விடத்தில் முதலாவதாக 1853இல் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது. கேப்டன் ஜெஸ்ஸி மிட்சல் (1860ல் காட்சியகத்தின் துணைத் தலைவர்) அப்போதைய அரசுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் "ஒரு சில நூறு ரூபாய்கள் சாரியான முறையில் ஒவ்வொரு வருடமும் செலவிடப்பட்டு, நூல்கள் அரசால் வாங்கப்பட்டு அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டால், அவ்விடம் ஒரு சிறந்த 'ரெப்ரென்ஸ் லைப்ராரியாக இருக்கும் எனவும் அது காலத்தால் அரசின் மதிப்பைக் கூட்டும்" என்றும் கூறப்பட்டது. அவரது வார்த்தைகள் மெய்யாயின. நூல்கள் சேகரிக்கப்பட்டன. அவை எண்ணிக்கையில் கணிசமாக பெருகின.அது பொதுமக்களுக்கு 1862 ஜுன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. அக்கட்டிடத்தின் சீரமைப்பும், புதுக் கட்டிடங்களும், சொற்பொழிவுகளுக்கு ஒரு அரங்கமும் நிர்மாண்க்கும் பணி 1873 டிசம்பாரில் ஆரம்பிக்கப்பட்டு, 1875இய முடிவுற்று. அன்றைய கவர்னரால் (sir Arthur Elibank havelock)1876, மார்ச் மாதம் 16ல் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. கேப்டன் மிச்சல் என்பவர் நூலகத்திற்கு மேலாளராக நியமிக்கப்பட்டார்.பின்னர் கன்னிமரா நூலகம் என்றழைக்கப்பட்ட அந்த நூலகத்தின் மேன்மைக்கு இந்த மனிதர்தான் பொறுப்பானவர்.

அக்காலத்திய மதராசபட்டின அரசின் கட்டுமானப்பணி ஆலோசகராக இருந்த இச்.இர்வின் என்பவரால் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. ஒரு நேர்த்தியான பொரிய ஹாலையும்,படிப்பதற்கு வசதியான அறையையும் மற்றும் நல்ல தேக்கு மரத்தாலான அலமாரிகளையும் கொண்டிருந்தது.

மதராசப்பட்டினத்தின் மிக உயர்ந்த அந்த நூலகத்தின் கோபுரம் 200 அடி உயரம் கொண்டதாகவும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டதாகவும் இருந்தது.ஆனால் 1897இல் இக்கோபுரம் சரியும் நிலையில் இருந்ததால் இடிக்கப்பட்டது. ஓரே அமைப்பின் கீழ் இயங்கி வந்த அருங்காட்சியகமும், நூலகமும் 1930ஆம் வருடத்தில் தனிப்படுத்தப்பட்டன.

இந்த நூலகத்திற்கு புத்தகங்கள் முதன்முதலாக வந்ததே ஒரு கதை! 1662ஆம் வருடத்தில், காலிகோ துணி மூட்டை ஒன்று லண்டனில் புத்தகங்களுக்காக மாற்றிக்கொள்ளப்பட்டு, அப்படிக் கிடைத்த புத்தகங்கள் கோட்டையை வந்தடைந்தன. அவை அங்கிருந்த வில்லியம் ஒயிட் பீல்ட்(செயிண்ட் மோரிஸ் சர்சில் போதகர்) என்பவரிடம் தரப்பட்டன. இவர்தான் முதல் முதலாக நூலகம் இருக்க வேண்டும் என்பதைக் கூறியவர். அப்படிக் கிடைத்த புத்தகங்களின் அட்டவணை 1716ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றண்டுக்காலம் இந்த நூலகம் அங்கிருந்துதான் செயல்பட்டுக்கொண்டிருந்தது.

கன்னிமரா நூலகத்தின் மேற்கூரை வேலைப்பாடுகள் இஸ்.இர்வின் அவர்களின் அழகியல் உணர்வுக்கு சான்றாக இன்றளவும் நிலைத்திருக்கிறது. அலங்கரப்பூக்கள் மற்றும் மார்பிள் கற்கள் பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து படகுகளில் கொண்டு வரப்பட்டு, நூலகம் அலங்கரிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை இந்திய தொல்லியல்துறையினர் 1.21கோடி ரூபாய் செலவிட்டு பாதுகாத்து வருகின்றனர். தமிழ்நாடு பொது நூலகப்பிரிவு 1948-ன் படி, இந்த நூலகம் மத்திய-மாநில நூலகமாக 1950 ஏப்ரல் 1ல் அறிவிக்கப்பட்டது. இதன்படி 10-செப்டம்பர்-1995 முதல், இந்தியாவில் வெளியாகும் நாளிதழ்கள், புத்தகங்கள், சஞ்சிகைகளின் நான்கு(4) பிரதிகள் நூலகத்திற்காக வாங்கப்பட்டு சேமிக்கப்படும். 1965-ல் இருந்து UNESCOவின் தகவல் சேமிப்பு அமைப்பகத்தின் மூலம் ஐக்கிய நாடுகளின்(UN) பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொண்டுவரப் படுகிறது.1992 முதல் Asian Development Bank தகவல் சேமிப்பகம் முலம் சில பதிப்பக நூல்கள் கிடைத்தன. இப்படியாக அதிகா¢த்துவரும் புத்தகங்களின் வளர்ச்சியால், 71,700sq.ft.ல் மூன்றடுக்குமாடி கட்டிடம் ஒன்று 1973லும், மற்றொரு மூன்றடுக்குமாடி கட்டிடம் 1999லும் உதயமாயின. நூலகத்திற்கான மொத்த செலவை மத்திய-மாநில அரசுகள் பங்கிட்டுக்கொள்கின்றன.

2010 ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின்படி, பாதுகாக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 6,90,338. நூலகத்தின் 2வது மாடி கட்டிடம் வரை குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. நாளிதழ்கள், பழைய புத்தகங்கள் scanning முறையில் நகலெடுத்து பாதுகாக்கப்படுகிறது. இணையதளம் மூலம் குறிப்புகளை தேட, நூலகத்திற்குள்ளேயே மிக குறைந்த கட்டணத்தில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்களையும், குறிப்புகளையும் பிரதி எடுத்துக்கொள்ள xerox வசதியுள்ளது.

சென்னையில் முகவரி சான்றிதழ் உள்ள, 15வயது நிரம்பியவர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். ஆரம்பத்தில் 300 ரூபாய் செலுத்தி உறுப்பினராக வேண்டும், பின் ஆண்டு சந்தாவாக 50 ரூபாய் தொடர்ந்து கட்டிவர வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் அதிகபட்சம் ஆறு புத்தகங்களை ஒரே நேரத்தில் நூலகத்தில் இருத்து எடுத்து செல்லலாம். அடுத்த 14 தினங்களுக்குள் மீண்டும் நூலகத்தில் திருப்பி ஒப்படைத்து விட வேண்டும்.

தற்போது 112 பணியார்களுடன் அமைதியான முறையில் தனது சமுக பணியை ஆற்றி வருகிறது. நாள்தோறும் தொடர்ந்து காலை 9மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து இயக்கி வருகிறது. ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு மூடப்படும். தேசிய விடுமுறை தினங்கள், முக்கியமான பண்டிகை தினங்களில் மட்டும் முழு விடுமுறை தினமாக கொள்ளப்படும். (உ.தா) தீபாவளி, கிருஸ்துமஸ், பூஜை விடுமுறைகள்.

நூலகத்தில் உள்ள பிரிவுகள்:-

Reference section,Text book section,UN section, Lending section, Periodical section, Reprographic section, Microfilm section, Language bools section,Civil service study Braille and Talking book section,Educational video/ CD Rom section(Microfilm,scanning,Mending and Binding) Digital Resource Centre, Digital children's Library

STATISTICAL INFOMATION FOR THE PERIOD FROM JANUARY2009 TO MARCH 2010:

stck of volumes: 6,90,338
Members :1,04,290
Users : 3,38,701
Book Consulted : 20,32,206
Book Lent :2,12,706
Total Book used :22,44,912


web site: www.connemarapubliclibrarychennai.com
Email.com: Librarian@connemarapubliclibrarychennai.com

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)