வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நாட்டுப்புறக் கலைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் நடைபெறும் நாட்டுப்புறம் சார்ந்த சார்ந்த நிகழ்வுகளின் ஒளி / ஒலித்தொகுப்பினையும், கட்டுரைகளையும் இந்தப் பகுதியில் காணலாம்.
 
 

முடச்சிக்காடு புதியபாரதி
-----------------------------------------

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
     
     
     
     
வாயில் TS  நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் வாயில்

தெருக்கூத்து

முடச்சிக்காடு புதியபாரதி ilamurasu@gmail.com

தெருக்கூத்து தமிழ் மரபுக் கலைகளுல் முழுமையான அரங்கக் கலை வடிவம் கொண்டது. மிகுந்த அர்ப்பணிப்பும், முறையான பயிற்சியும் பெற்ற கலைஞர்களால் மட்டுமே நிகழ்த்த முடிந்த முன்னோடி கலை இது. இயல், இசை, நாடகம் என முத்தமிழும் இணைந்த வடிவம் கொண்டது. ஊடகங்களின் தாக்கத்தை தாண்டி விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம்,

தர்மபுரி மாவட்டங்களில் இன்றளவும் இந்த கலை உயிர்ப்போடு இருக்கிறது. தெருக்கூத்து தமிழ் மரபுக் கலைகளுல் முழுமையான அரங்கக் கலை வடிவம் கொண்டது. மிகுந்த அர்ப்பணிப்பும், முறையான பயிற்சியும் பெற்ற கலைஞர்களால் மட்டுமே நிகழ்த்த முடிந்த முன்னோடி கலை இது. இயல், இசை, நாடகம் என முத்தமிழும் இணைந்த வடிவம் கொண்டது. ஊடகங்களின் தாக்கத்தை தாண்டி விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் இன்றளவும் இந்த கலை உயிர்ப்போடு இருக்கிறது. காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்குகின்றன.

தெருக்கூத்தை வடக்கத்திப்பாணி, தெற்கத்திப்பாணி என்று இருவகையாக பிரிக்கிறார்கள். திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வட்டாரங்களில் தெற்கத்தி பாணியிலும், விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் வடக்கத்தி பாணியிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. வந்தவாசி, தின்டிவனம் பகுதியில் இயங்கும் குழுக்கள் இரண்டு பாணிகளிலும் கலையாடும் திறன் மிக்கவை.

இந்த பாணிகள் இசைக்கருவிகள் மற்றும் உடைகளை அடிப்படையாகக்கொண்டு வேறுபடுகின்றன. வடக்கத்தி பாணியில் முகவீணை என்ற இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது. தெற்கத்தி பாணியில் இக்கருவியை பயன்படுத்துவதில்லை. வடக்கத்தி பாணி கூத்துக் கலைஞர்கள் விறைப்பான பாவாடைகளை அணிந்து கலையாடுவார்கள். பாடல்களிலும் வடக்கத்தி மெட்டு, தெற்கத்தி மெட்டு எனத் தனித்தனியே உண்டு.

ஒரு தெருக்கூத்துக் குழுவில் 15க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருப்பார்கள். தெருக்கூத்துக்குழுவுக்கு "சமா" என்று பெயர். குழுவை உருவாக்கி, பயிற்சியளித்து வழி நடத்துபவர் "வாத்தியார்" என்ற மரபுவழிப் பெயரால் அழைக்கப்படுவார். சமாவின் பொருளாதாரப் புலம் முற்றிலும் வாத்தியாரைச் சார்ந்தே இருக்கும்.

நாம் முன் கண்ட கலைகளைப் போல இதுவும் வழிபாடு சார்ந்த ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுகிறது. கூத்துக் கலைஞர்களுக்கு சமூகத்தில் உயரிய மரியாதை வழங்கப்படுகிறது. கூத்துக்கலையை தங்கள் கோவில்களில் நிகழ்த்த விரும்புவர்கள் வாத்தியாரை அணுகி தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு, முன்பணம் வைத்து நிகழ்ச்சியை உறுதி செய்வார்கள். இந்த வழக்கம் இன்று வரையிலும் சிதைவுறாமல் உள்ளது.

தெருக்கூத்தை கட்டைக்கூத்து என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். முள்முருங்கை எனப்படுகிற எடை குறைந்த மரக்கட்டைகளால் ஆன புஜக்கட்டைகள், பெரிய கிரீடங்கள், குச்சிமுடி, மார்புப்பட்டை, கன்னக்கதுப்பு போன்ற அணிகலன்களை அணிந்து கொண்டு கூத்தாடுவதால் இக்கலைக்கு அப்பெயர் ஏற்பட்டது.

தொடக்கத்தில் மக்கள் கூடும் இடங்களில் இக்கலை நிகழ்த்தப்பட்டது. சிறிய திரையை இருவர் உயர்த்திப் பிடித்துக் கொள்ள, பின்புறமிருந்து விருத்தங்களோடு கதாபாத்திரங்கள் உதித்து கலை நிகழ்த்துவார்கள். காலப்போக்கில் மேடையேறத் தொடங்கியது இக்கலை.

முற்றிலும் ஒப்பனை சார்ந்த கலை இது. முகத்தின் உணர்ச்சிகளை ஒருபடி உயர்த்திக்காட்டும் தன்மை வண்ணங்களுக்குண்டு. ஒப்பனையிலும், துணைக்கருவிகளிலும் இக்கலைஞர்கள் தீவிர ஆர்வம் காட்டுவார்கள். மேடையின் பின்புறத்தில் இசைக்கலைஞர்களுக்கான இடம் இருக்கும். அதன் பின்னே இருக்கைகளில் மறைத்துக் கொண்டு ஒப்பனை செய்யத் தொடங்குவார்கள். முகத்தில் இருந்து ஒப்பனை தொடங்கும். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு நிறம்.

காளி, சூரன், அரக்கன் வேடத்திற்கு முத்துவெள்ளை, செந்தூரம் போன்றவற்றை எண்ணையில் குலைத்து பூசுவார்கள். பிற வேடங்களுக்கு செந்தூரத்தின் அளவை குறைவாக பயன்படுத்துவார்கள். துரியோதனனுக்கு சிவப்பு, துச்சாதனனுக்கு மஞ்சள் அல்லது இளம் சிவப்பு, பீமனுக்கு மேகவண்ணம் அல்லது கருப்பு, கிருஷ்ணனுக்கு பச்சை, பாஞ்சாலிக்கு இளம் சிவப்பு, அர்ச்சுனனுக்கு நீல வண்ணங்களை பயன்படுத்துவர். புருவங்களுக்கு மை தீட்டி சுற்றிலும் கருப்பு, வெள்ளை புள்ளிகளை இடுவார்கள். பெரிய ஒட்டுமீசை வைத்து கட்டியிருப்பார்கள். வேடத்துக்கு தகுந்தவாறு நாமம் அல்லது திருநீரு பயன்படுத்துவார்கள். கிரீடம் அணியும் முன்பாக தலையில் ஒரு துண்டை கட்டிக் கொள்வார்கள்.

தெருக்கூத்தில் இசையின் பங்களிப்பு முக்கிய கூறாகும். டோலக் அல்லது மிருதங்கம், ஜால்ரா, சுதிப்பெட்டி ஆகியன தெருக்கூத்தின் முக்கிய இசைக்கருவிகள். முகவீணை, புல்லாங்குழலும் சூழலுக்கு தகுந்தவாறு பயன்படுத்தப்படுவதுண்டு. இசைப்பது தவிர கூத்தாடும் கலைஞர் பாடும் பாட்டுக்கு பின்பாட்டு பாடுவதும் இசைக்கலைஞர்களின் வேலை. திரௌபதை அம்மன் கோவில் விழாக்களில் தெருக்கூத்து ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுகிறது. அது தவிர கிராமப்புறங்களில் உள்ள சிறு தெய்வ வழிபாட்டு நிகழ்விடங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு.

மழை இல்லாத காலங்களில் பெரும்பாலான கிராமங்களில் "விராட பருவக்கூத்து" என்ற ஓர் கூத்து வடிவம் நிகழ்வதுண்டு. இது நிகழ்ந்தால் மழை வரும் என்பது நம்பிக்கை. மாசி மாதம் மயானக்கொள்ளை எனப்படும் மன்மதன் எரிப்பு நிகழ்ச்சிகளிலும் கூத்து நிகழ்வதுண்டு. இறந்தவர்கள் மோட்சம் பெற கர்ண மோட்சம் கதையை கூத்து வடிவமாக நிகழ்த்துவதும் மரபாக உள்ளது. பெரும்பாலும் மகாபாரதம், இராமாயாணத்தை அடிப்படையாகக்கொண்டே கூத்துக்கள் வகுக்கப்பட்டிருக்கும். திரௌபதை அம்மன் கோவில்களில் 11 நாள் பாரதக்கூத்து நடைபெறும். முதல் நாள் வில்வளைப்பு அல்லது திரௌபதை கல்யாணம், இரண்டாம் நாள் சுபத்ரை கல்யாணம், மூன்றாவது நாள் ராஜசூயயாகம், நான்காம்


நாள் திரௌபதை துகில் உரித்தல், ஐந்தாம் நாள் அர்ஜூனன் தபசு, ஆறாம் நாள் குறவஞ்சி, ஏழாம் நாள் கீசகவதம், எட்டாம் நாள் கிருஷ்ணன் தூது, ஒன்பதாம் நாள் அபிமன்யூ போர், பத்தாம் நாள் கர்ண மோட்சம், பதினோறாம் நாள் பதினெட்டாம் போர் ஆகிய கூத்துக்கள் நடைபெறும்.

இது தவிர இராமர் பட்டாபிஷேகம், பக்த அனுமான், சீதா கல்யாணம் ஆகிய புராண கூத்துக்களும், கோவலன் நாடகம், வீரபாண்டிய கட்டபொம்மன் கதை, வன்னியூர் புராணம், வள்ளி திருமணம், சூர சம்ஹாரம் உள்ளிட்ட கதைகளும் கூத்தாக்கப்படுவதுண்டு.

இக்கலையாடல் 4 பிரிவுகளாக நிகழ்த்தப்படும்.

முதலில் வினாயகர் பூஜை. வினாயகராக ஒரு கலைஞர் வேடமிட்டு வந்து பாடுவார். அடுத்து களரிக்கட்டு. இசைக்குழுவினர் ஆதி, அட, ரூபகம், திரிபுடை, ஜம்பை ஆகிய ராகங்களை கொண்டு இசைப்பார்கள். இது தான் நாடகம் தொடங்கப்போவதற்கான அறிகுறி. மூன்றாவது, வாத்தியார் தங்களைப்பற்றியும், தங்கள் மரபு பற்றியும், கூத்துப் பற்றியும் பேசிப்பாடுவார். குறையிருந்தால் மன்னிக்கவும் என்று வேண்டுவார். நான்காவதாக, இருவர் திரை பிடித்திருக்க பாத்திர பிரவேசம் நடக்கும். திரைக்கு பின்னால் இருந்து தான் ஏற்கப்போகும் பாத்திரத்தை பற்றி சொல்லி விட்டு அது சார்ந்த ஏதாவது விருத்தத்தை பாடியபடி பாத்திரங்கள் அறிமுகமாவார்கள்.

பொதுவாக இக்கூத்துக்கலையில் கட்டியக்காரன் அல்லது பபூன் தான் முதலில் அறிமுகமாவார். பபூனாக நடிப்பவர் நாடகத்தில் பல பாத்திரங்களை ஏற்பார். இடையிடையே வந்து நகைச்சுவை செய்து கூத்தை தொய்விலிருந்து காப்பதும் பபூனின் வேலை.

பொதுவாக இந்தக் கலை, கோவிலுக்கு அருகில் உள்ள முச்சந்திகள், அல்லது பரந்த திடல்களில் நிகழ்த்தப்படும். கூத்து நடக்கும் இடத்தை களறி என்று அழைப்பார்கள். விடிய, விடிய இக்கலை நிகழ்வதுண்டு. இன்றும் கூட காஞ்சிபுரம் மாவட்டத்தில் திரௌபதை அம்மன் கோவில்களில் அர்ச்சுனன் தபசு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெரும் மரம் ஒன்றை நிறுத்தி வைத்து அந்த தபசு மரத்தில் ஏறும் கலைஞரை அர்ஜூனனாக கருதி வணங்கி வரம் கேட்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

மழை இல்லாத காலங்களில் பெரும்பாலான கிராமங்களில் "விராட பருவக்கூத்து" என்ற ஓர் கூத்து வடிவம் நிகழ்வதுண்டு. இது நிகழ்ந்தால் மழை வரும் என்பது நம்பிக்கை. மாசி மாதம் மயானக்கொள்ளை எனப்படும் மன்மதன் எரிப்பு நிகழ்ச்சிகளிலும் கூத்து நிகழ்வதுண்டு. இறந்தவர்கள் மோட்சம் பெற கர்ண மோட்சம் கதையை கூத்து வடிவமாக நிகழ்த்துவதும் மரபாக உள்ளது.

பெரும்பாலும் மகாபாரதம், இராமாயாணத்தை அடிப்படையாகக்கொண்டே கூத்துக்கள் வகுக்கப்பட்டிருக்கும். திரௌபதை அம்மன் கோவில்களில் 11 நாள் பாரதக்கூத்து நடைபெறும். முதல் நாள் வில்வளைப்பு அல்லது திரௌபதை கல்யாணம், இரண்டாம் நாள் சுபத்ரை கல்யாணம், மூன்றாவது நாள் ராஜசூயயாகம், நான்காம்மிகவும் சிரமமான நடிப்பு உத்திகள் இக்கலைக்கு தேவை. நடன அடவுகள், கால் வைப்பு முறைகள், கை முத்திரைகள், அங்க அசைவுகள் என ஒவ்வொன்றும் நுணுக்கமான திட்டமிடல்களை உள்ளடக்கியவை. பெரும்பாலும் பாடல்களையை அடிப்படையாக கொண்டும் இயங்கும் கலை வடிவம் இது. வாய்மொழியாகவே அந்தப்பாடல்கள் தலைமுறை மாறி தொடர்கின்றன.

தெருக்கூத்தை முழுநேரத் தொழிலாக கொண்டவர்களுக்கு அது தான் வாழ்க்கை. சிறு அளவு தங்களுக்கோ, தங்களின் கலைக்கோ அவமானம் நேர்வதை இக்கலைஞர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. திமிர் பிடித்தவன் என்று மற்றவர்களால் அடையாளம் காணப்படுவார்கள். தற்காலத்தின் நவீன நாடகப்பாணியை உருவாக்கிய அடிப்படை தெருக்கூத்து தான். உருவ, உள்ளடக்க மாற்றங்களோடு இன்று நவீன நாடகங்கள் மிகுந்த உச்சத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தகுந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்து இக்கலையின் அடிப்படையை கற்று செல்கிறார்கள்.

தெருக்கூத்து கலைஞர்கள் பிறரிடம் கூலி வேலைக்கு செல்வதைக் கூட கௌரவக்குறைவாக கருதுவார்கள். அண்மையில் இக்கலைஞர்களுக்கு வாரியமொன்று அமைக்கப்பட்டது. அதனால் பெரிய பலனொன்றும் விளையவில்லை.

இக்கலையில் புரிசை கண்ணப்ப தம்பிரானை குறிப்பிடத்தகுந்த கலைஞராக குறிப்பிடலாம். இடம் போதாத அளவுக்கு இக்கலையில் சிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் கூத்துப்பட்டறை இக்கலை மீட்புப்பணியை செவ்வனே செய்கிறது. தெருக்கூத்தின் அடிப்படையில் நவீன நாடகத்தை முன்னெடுக்கும் பல்வேறு அமைப்புகள் இயங்குவதும் குறிப்பிடத்தகுந்தது.

சினிமா உள்ளிட்ட எந்த ஊடகத்தாக்குதலுக்கும் உள்ளாகி சிதையாமல், நவீன வடிவெடுத்து வரும் இக்கலையை நம்பி இன்னும் ஆயிரக்கணக்கான உயிர்கள் ஜீவிக்கின்றன.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</