வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கட்டுரைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்
 
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்

கூடு இணைய இதழ் தொடக்கவிழா

சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

 

தமிழ் ஸ்டுடியோ.காம் -ன் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கூடு இணைய இதழ் தொடக்க விழா ஆகிய இரு நிகழ்வுகளும் சென்னை இக்சா மைய அரங்கில் 23.11.2009 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, இந்திய ஆட்சி பணியாளர் உமாசங்கர், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், இயக்குனர் ராஜ்மோகன், கவிஞர் சல்மா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்திரா பார்த்தசாரதி

இதழை தொடங்கி வைத்து பேசிய எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் இதுப் போன்ற இணைய இதழை தொடங்கி வைக்க இவர்கள் என்னை அழைக்க என்ன காரணம் என்று தெரியவில்லை என்று நகைச்சுவைபட கூறினார். ஆனால் பின்னர் அவர் இணைய இதழ்கள் குறித்து பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. யாருக்குமே தெரியாத பல இணைய இதழ்கள் குறித்தும், சிறு பத்திரிகை உலக குறித்தும் விரிவாகப் பேசினார்.

உமாசங்கர் (இ.ஆ.ப)

அடுத்ததாக பேச வந்த திரு. உமாசங்கர் அவர்கள் தொழில்நுட்ப அளவில், தமிழ் இணையதளங்களின் வளர்ச்சி பற்றியும், எழுத்துரு பிரச்சனை பற்றியும் விரிவாகப் பேசினார். அவர் பேசியதிலிருந்து சில துளிகள்.

தமிழ் மொழிக்கு பல எழுத்துருக்கள் உள்ளன. இவற்றையெல்லாம் ஒன்றுபடுத்தி ஒரே மாதிரியான எழுத்துருவை உருவாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் அவற்றை செய்யாமல் காலத்தை கடத்துகின்றனர். இதற்கு வியாபாரம் ஒரு காரணமாகவும், மற்றொருபுறம் கணினி துறை பற்றிய புரிதல்கள் அற்ற வயதானவர்கள். இவர்கள் இறந்துபோனால் நன்றாக இருக்கும் என நினைக்குமளவுக்கு பழமைவாதிகளாக உள்ளனர்.

நீங்கள் எல்லோரும் முடிந்தவரை யுனிகோட் எழுத்துருவையே பயன்படுத்துங்கள். என்னுடைய கணிப்பொறியில் நான் அதைதான் பயன்படுத்துகிறேன்.

எழுத்தாளர்களின் படைப்புகள் நீண்ட நாட்கள் இணையத்தில் இருக்கும் வகையில் அதை ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இரண்டு குறும்படங்களை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்த முயற்சிகள் மேலும் சிறக்க / வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.

நக்கீரன் கோபால்

அடுத்ததாக வாழ்த்துரை வழங்க வந்த திரு. நக்கீரன் அவர்கள் பேசியதிலிருந்து சில துளிகள்.

இந்த இணைய இதழின் தலைப்பை கேட்டதும் எனக்குள் தோன்றியது 'கூடு'ங்கடா' என்று சொல்லுவது போல் இருந்தது. இவ்வளவு பெரிய காரியம் செய்கிறவங்களை சின்ன பசங்கனு சொல்றாங்க, இதை தன்னடக்கமாதான் பார்க்கிறேன். இவர்களை போல்தான் நானும். நக்கீரன் தொடங்கும்போது எனக்கு 28 வயதுதான். ஒரு காரியத்தை செய்ய நோக்கமும் உழைப்பும்தான் முதன்மையானது. வயது அல்ல.

கணினி துறையில் பணிபுரியும் தம்பிகள் சனி, ஞாயிறு ஆனா புள்ளைங்கள கூட்டிக்கிட்டு ECR பக்கம் போனோமா? கடன்லா ஒரு வீட்ட வாங்கினமா என்று இல்லாம இப்படி ஒரு காரியத்தை செய்யறது பெருமையா இருக்கு.

டி.வி. தொடர்கள் பார்த்து அழுதுகிட்டு இருக்கிற இந்த சமூகத்தில் பத்திரிகை நடத்துவது சாதாரணமானது அல்ல. இதுவரை என் மீது 220 வழக்குகள் பதிவாகியிருக்கு. இதிலிருக்கும் ஆபத்துகளை உணர நக்கீரனில் வெளிவரும் 'சேலஞ்ச்' தொடரை படித்தால் உங்களுக்கு புரியும்.

என் திருமணத்திற்கு நூற்றுக்கணக்கான இடத்தில் பெண் பார்த்தோம். பத்திரிகை நடத்துகிறவனுக்கு பெண் கொடுக்க பயம். சில பெண் குடும்பத்தாருக்கு என் மீசை கண்டு பயம். இன்னும் சில இடங்களை என் அக்கா தங்கச்சிகளுக்கு பிடிக்காது.

இறுதியாக அண்ணனும் - தம்பியும் அக்கா - தங்கச்சிக்கு வாழ்க்கை பட்டோம். தாலி கட்டிய பின்புதான் பெண்ணின் முகத்தை பார்த்தேன். நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்கிறோம். அதனால்தானோ என்னவோ எங்களுக்கு மாயாண்டி குடும்பத்தார் படம் மிகவும் பிடித்து போயிற்று. அதுபோன்ற வாழ்க்கையை விரும்பும் ஆட்களால்தான் அந்த படம் வெற்றி பெற்றது.

அண்மையில் பேராண்மை படம் பார்த்தேன். தமிழ் திரையுலகில் நம்பிக்கை கொள்ளும்படியாக உள்ளது. அதற்காக ஒரு கவர் ஸ்டோரியே போட்டோம். தமிழ் சினிமாவில் கதாநாயகன் முதலிருந்து கடைசி வரை பொதுவுடமை கருத்துகளை பேசியிருப்பது அதிசயமாக உள்ளது.

ஊடகங்களை கையாள்பவர்களை பொறுத்து அதன் சமூக பயன்பாடு உள்ளது. அண்மையில் வேறொரு பிரமாண்டமான படம் பார்த்தேன். கதாநாயகி கட்டிருக்கும் துண்டும், துணியும் விழுந்து விடுமோ என பயந்து கொண்டே படம் பார்த்தேன். இதுபோன்ற படங்களை எப்படி குடும்பத்தாருடன் பார்க்க முடியும்.

சினிமாவில்தான் இப்படி என்றால் கோயில் கருவறையில் களியாட்டம் போட்டு செல்போனில் படம் பிடித்த அர்ச்சகரின் கொடுமையை எங்க போய் சொல்ல. விஞ்ஞான வளர்ச்சியால்தான் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.

இங்கு திரையிடப்பட்ட இரண்டு குறும்படங்களை பார்த்தேன். மிகவும் சிறப்பான முயற்சிகள். ஈழ மக்கள் படும் துயரை 10 நிமிடங்களில் எவ்வளவு தெளிவாக எவ்வளவு ஆழமாக பதிவு செய்துள்ளார்கள். இந்த குறும்படங்களை வெளியிடுவதன் மூலமாக இவர்களின் சமூக பார்வையை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த முயற்சிகள் மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன்.

இயக்குனர் ராஜ்மோகன்

அடுத்து திரைப்பட இயக்குனர் திரு. ராஜ்மோகன் பேசியதிலிருந்து சில துளிகள்.

திரைப்படம் எடுப்பது எளிது. குறும்படம் எடுப்பது கடினம். திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைப்பார். எடுத்த படத்தை வியாபாரம் செய்ய தளம் உள்ளது. ஆனால் குறும்படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைக்கமாட்டார். ஏனெனில் போட்ட பணம் திரும்பாது. தன் திறமையை வெளி கொண்டு வர படைப்பாளியே தன் சொந்த செலவில் குறும்படம் எடுக்க வேண்டிய சூழல்தான் இங்கு உள்ளது.

எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனராகி விட்டேன். மற்றபடி உங்களுக்கும் எனக்கும் வேறுபாடு கிடையாது. நானும் உங்களைபோல்தான். எனக்கு இலக்கிய தொடர்புகள் ஏதுமில்லை. நான் கிராமத்திலிருந்து வந்தவன். பத்திரிகைக்கு 15 கதை அனுப்பிய பின் பதில் வரும்.. உங்கள் படைப்பை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறோம்.. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று.

கிராமப்புற படைப்பாளிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். முதலில் சுமாரான படைப்புகள் கொடுத்தாலும் அடுத்து அடுத்து தரமான படைப்புளை கொடுப்பார்கள். கூடு இணைய இதழ் சிறப்படைய வாழ்த்துகிறேன்.

கவிஞர் சல்மா

அடுத்ததாக கவிஞர் சல்மா அவர்கள் பேசியதிலிருந்து சில துளிகள்.

இவர்களை முன்பே அறிமுகம் கிடையாது. பத்திரிகை சார்ந்து இவர்கள் எடுக்கும் முயற்சியில் படைப்பாளி என்ற முறையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியது எனது கடமை என்றே கருதுகிறேன்.

இங்கு திரையிடப்பட்ட குறும்படங்களை பார்க்க முடியாமல் போய்விட்டது. பல குறும்படங்களைப் பற்றிய செய்திகளை படிக்கும்போதே அந்த படங்களை பார்க்க வேண்டும் என நினைப்பேன். அவைகள் எங்கு கிடைக்கும் என்ற தகவல் தெரியாது. ஒரு நல்ல படத்தை தவறவிடுகிறோம் என்ற மனவருத்தம் இருக்கும். இனி வரும் காலங்களில் இந்நிலை இருக்காது என்பதற்கு இவர்களுடைய செயல்கள் நம்பிக்கையளிக்கிறது.

குறும்படங்கள் எடுக்க தேவைப்படும் பொருளாதார உதவிகள் இங்கு மிகவும் குறைவு. நான் தலைவராக இருக்கும் வாரியத்தினால் பலருக்கு நிதியுதவி செய்ய முடியும். ஆனால் நான் பயன்படுத்தி கொள்ள முடியாது. எல்லாம் தொண்டு நிறுவனங்கள் சார்ந்து செயல்படுத்தப்படுகிறது. நான் ஒரு வருடமாக ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதற்கான உதவிகளையே என்னால் பெற முடியவில்லை.

நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள், படைப்பாளிகள் பற்றி தகவல்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும். சமூக பார்வை கொண்ட இவர்களது முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இறுதியாக அருண் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியை ராஜசேகர் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார், முன்னதாக குணா வரவேற்புரை நல்கினார்.

மேலும் இவ்விழாவில், திரு. பிரதீபன் அவர்கள் இயக்கிய "என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்" குறும்படம் திரையிடப்பட்டது. ஈழத்தில் பிரச்சனையை மையமாகக் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் மிகவும் நடுநிலையாக அங்குள்ள நிலைமையை விளக்கி எடுக்கப்பட்டிருந்தது. இதன் ஒளிப்பதிவாளர் திரு. சி. ஜெ. ராஜ்குமார் தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோவிற்கு தனது பங்கை அளித்து வருபவர். இக்குறும்படம் அனைவரது பாராட்டையும் பெற்றது. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அந்த இயக்குனருக்கு எனது தனிப்பட்ட பாராட்டை தெரிவியுங்கள் என்று செல்லும்போது நம்மிடம் கூறி விடைபெற்றார்.

விழா தொடர்பான ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.co.in/kooduonline/ANANeI#


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</