வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. செய்திகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

First News Paper in India

James Augustus Hickey or Hicky, a highly eccentric Irishman who had previously spent two years in gaol for debt, Hickey's Bengal Gazette or the Calcutta General Advertiser was the first English language newspaper, and indeed the first printed newspaper, to be published in the Indian sub-continent.

It was a weekly newspaper, and was founded in 1779, in Calcutta, the capital of British India. The memoirist William Hickey (who, confusingly, was not in fact related to the paper's founder) describes its establishment shortly after he had succeeded (in his capacity as an attorney-at-law) in having James Hicky released from debtor's gaol.

http://en.wikipedia.org/wiki/
Hickey's_Bengal_Gazette


 
  ------------------------------  
 

Guinness World Record for the world's smallest newspaper

From The Guinness World Records 2010: 'the smallest newspaper measures 32 x 22 mm (1.25 x 0.86 in) achieved by First News Newspaper in West Horsley, Surrey, UK published on the November 8, 2007 in celebration of Guinness World Records Day.'

http://www.firstnews.co.uk/
weird/first-news-is-the-worlds-smallest-newspaper-i97

 
     
   
செய்திகள்
1
 

          உலகின் முதல் செய்தி தாள்

 

Johann Carolus (1575 - 1634) was the publisher of the first newspaper, called Relation aller Fürnemmen und gedenckwürdigen Historien (Collection of all distinguished and commemorable news). The Relation is recognised by the World Association of Newspapers[1], as well as many authors[2] as the world's first newspaper. The German Relation was published in Strassburg, which had the status of an imperial free city in the Holy Roman Empire of the German Nation.

 

 
  ---------------------------------  
  ஸ்வதேசமித்ரன்

இந்தியாவில் பதிப்பிக்கப்பட்ட தமிழின் முதல் செய்தி் தாள்.

இந்த செய்தி தாள் இந்தியா மட்டுமின்றி, பர்மா, சிங்கப்பூர், மலேசியாவின் சில பகுதிகள், பெனாங், இலங்கை, சுமத்ரா, சீனா, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பரிக்க நாடுகளில் கூட பரவலாக வாசகர்களைப் பெற்றிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த செய்தி தாள் பதிப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.indianetzone.com/
24/swadesamitran_first_
tamil_newspaper.htm
 
 

 

 

 
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  மற்றவை TS செய்திகள் செய்திகள் வாயில்


பிரபஞ்சன் பங்கேற்ற கேணி இலக்கிய கூட்டம் 


சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

பத்திரிகையாளர் / நாடகாசிரியர் ஞாநி தன்னுடைய வீட்டில் சென்ற மாதம் முதல் கேணி - இலக்கிய கூட்டத்தை நடத்துகிறார். மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

இம்மாத நிகழ்வு 12.07.2009 அன்று நடைபெற்றது. கூட்டம் சரியான நேரத்திற்கு தொடங்கியது. படைப்பாளிகள், வாசகர்கள் என சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஞாநி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நானும் பாஸ்கர் சக்தியும் மட்டுமே கேணியின் அமைப்பாளர்கள்.

இந்த வீட்டுக்கு குடிவந்த பின் வீட்டின் பின்புறம் கேணி, கேணியைச் சுற்றி நிறைய காலியிடம் இருப்பதை கண்டு மகிழ்ச்சியுற்று, படைப்பாளிகளும், வாசகர்களும் சந்தித்து இலக்கியம் பற்றி உரையாடவேண்டும் என்ற ஆர்வத்தில் கேணி அமைப்பை உருவாக்கினோம், என கூறி தன்னுரையை நிறைவு செய்தார்.

தனக்கு பிடித்த சிறுகதைகள் குறித்து பேச எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்தார். நீர்வளம் மாறாத பூமியான புதுச்சேரிதான் நான் பிறந்து வளர்ந்த ஊர், என தன் பேச்சை தொடங்கினார். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே என் தந்தை என்னை நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். இளமையிலேயே பல நூல்களை வாசிக்க தொடங்கிவிட்டேன். பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்ட பல நூல்களை வாசித்தேன். குறிப்பாக மாப்பசானின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆண் பெண் உறவு பற்றி இயல்பாக கூறியது எனக்கு பிடித்தது. நம்மூரில் ஆண் பெண் உறவு பற்றி பல கற்பிதங்கள் உள்ளன. அது புனிதமானதுமில்லை, மோசமானதுமில்லை இயல்பானது என கூறினார். புதுமைப்பித்தனின் இது மெஷின் யுகம், தஞ்சை பிரகாஷின் மீனின் சிறகுகள், தி.ஜானகிரானின் தவம், லியோன் பட்வாங்கரின் சர்வாதிகாரின் மூளை, ஆல்பெயர் மெம்ய்ன அந்நியன், டால்ஸ்டாய் டாட்டாவஸ்கி, மாயாவஸ்கி என பலரின் படைப்புகளும் என்னை நெகிழச் செய்தன.

தமிழில் சுமார் 30 பேர் மிகச்சிறந்த சிறுகதை படைப்புகளை வழங்கியுள்ளனர். தமிழகத்தில், இந்தியாவில், உலக நாடுகளில் பலரின் படைப்புகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். அதனால்தான் என்னோடு புறப்பட்டவர்கள் பலர் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்ட பின்பும் என்னால் தொடர்ந்து பயணிக்க முடிகிறது.

தமிழில் இளம் படைப்பாளிகளின் முதல் தொகுப்பே மிகச்சிறந்ததாக விளங்குகிறது. அனைவரும் சங்க இலக்கியங்களை படிக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் நல்லது மட்டுமல்ல கெட்டதும் உள்ளது.

சங்க இலக்கியம் மேட்டுக்குடி மக்களின் காதல், வீரம், ஈகை பற்றி மட்டுமே பேசுகிறது. எளிய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. ஈழத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலை பற்றி இலக்கியத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், ஆனால் ஈழத்திற்கு நான் சென்றதே இல்லை, அனுபவம் இல்லாமல் படைக்க கூடாது என்பதனால் என்னால் ஈழம் பற்றிய படைப்பை படைக்க முடியவில்லை.

இந்தி எதிர்ப்பு போராட்டம், கீழவெண்மணி படுகொலை பற்றி இதுவரை ஏதும் பதிவுகள் இல்லை. அந்த வரிசையில் ஈழமும் சேர வேண்டாம் என்றே விரும்புகிறேன். உங்களுடன் கலந்துரையாடியதனால் நானும் பல கற்றுக்கொண்டேன். இந்த நிகழ்ச்சி எனக்கு நிறைவை தருகிறது என கூறி பிரபஞ்சன் தன் உரையை நிறைவு செய்தார். எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தன் நன்றியுரையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கேணி அமைப்பின் முதல் மாத நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.