வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. அயல் இலக்கியம் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வெளிநாட்டு இலக்கியம், மற்றும் வெளிநாட்டு இலக்கியவாதிகள் பற்றி அறிமுகம் செய்து வைக்கும் பகுதி.
 
 
 

 
 
எம்.ரிஷான் ஷெரீப்
 
     
     
   
அயல் இலக்கியம்
1
 
 
கவிஞர் குறித்து -

சஜீவனி கஸ்தூரி ஆரச்சி

இலங்கையில் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிதாயினி சஜீவனி கஸ்தூரி ஆரச்சி, ஒரு சட்டத்தரணியாவார். இதுவரையில் இவரது 'Gangadiyamathaka',  'Ahasa thawamath anduruya' ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. இரண்டும் இலங்கையில் விருதுகள் பெற்றுள்ளன.


 
   
   
   
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  அயல் இலக்கியம் TS மொழிப் பெயர்ப்பு கவிதைகள்

  மொழிப் பெயர்ப்பு கவிதைகள் வாயில்

90' - அப்படியுமொரு காலம் இருந்தது


மூலம் - சஜீவனி கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
 

அப்படியும் காலமொன்றிருந்தது

அக்காலத்தில் நாம்
இருபது வயதுகளின் யுவதிகள்
எமது குழுவில் இருந்தனர்
அவ்வயதையொத்த இளைஞர்களும்

அப்படியும் காலமொன்றிருந்தது

கவிதை நாடகம் பாடல் கூத்து
விவாதம் திரைப்படப் பிரதிகள் என
தேடித் தேடி அலைந்து திரிந்த
எண்ணற்ற அந்திப் பொழுதுகள்

அப்படியும் காலமொன்றிருந்தது

தெய்வத்துக்கு நிகராக
உளளத்தினுள் வீற்றிருந்த பிம்பங்களை
அவ்வாறே காத்திட
உணவின்றி
உறக்கமின்றி
தேனீர்தானுமின்றி
பொழுதுகள் பலவும் வாதம்புரிந்த

அப்படியும் காலமொன்றிருந்தது

எதிர்பார்ப்புகள் கனத்த
புத்திளம் இதயங்களில்
சோகத்தின்
பயத்தின்
சந்தேகத்தின்
நிழலொன்றேனும் வீழ்ந்திடாத
என்னவானாலும்
மீளச் சென்று வர இயலுமானால்
எவ்வளவோ நல்லதென எண்ணக் கூடிய

அப்படியும் காலமொன்றிருந்தது


 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.



   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</